தெய்வங்கள்

தெய்வங்கள்

சீக்கிரம் எழுந்து விடுவாள்.........

ஏக்கம் மனதில் வளர்த்தே
எப்போதும் நம்மைக் காத்து
தூக்கம் கெட்டும் நமக்காய் -வாழ்வைத்
தொலைக்கும்  உத்தமி அவளே

ஆத்திரம் மனதில் வந்தால்
அதையும்  உள்ளுள் வைத்தே
அன்புடன் அடக்கி இருந்தே-நம்மை
ஆசைக் கோபமாய்க் கடிவாள்

சாத்திரம் அனைத்தும் படித்து
சரியெனப் பட்டதை மட்டுமே
சீக்கிரம் விளக்கிச் சொல்லி-கதையாய்
சிறந்திடப் புரிந்திட வைப்பாள்

மிச்சம் மீதியைத்  தின்று
மேனியைக் கெடுத்தும் நமக்காய்
உச்சி முகந்தே அருகில்-தொட்டு
உண்மை மகிழ்ச்சியைத் தருவாள்

சீக்கிரம் எழுந்து விடுவாள்
சேவைகள் பலதும் செய்வாள்
சிந்தனை நமக்காய்ச் சுமந்து-மனதால்
சிரித்தே சமைத்துத் தருவாள்

சீருடன் உடம்பை மதியாள்
சீக்கிரம் தூங்க மாட்டாள்
பாத்திரம் அனைத்தும் கழுவி-இறுதியில்
படுத்து உறங்கச் செல்வாள்



அவள்தான் பெற்ற அன்னை.....



Comments

  1. அன்பு சகோதரருக்கு வணக்கங்கள்
    அன்னையின் தியாகத்திற்கு கவியால் அலங்காரம் செய்த விதம் அருமை. அவரவர் அன்னையின் நினைவுகளையும், பாசத்தையும் பகிர வாய்ப்பு தந்துள்ளீர்கள் சகோ. வாழும் தெய்வம் வாழும் போதே அவரின் மனம் குளிர நடந்து மகிழ்விக்க வேண்டும். சரி தானே சகோதரரே... நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் பல..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  2. அன்னையின் அருமை உணர்ந்து தந்த கவிதைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கு நன்றி

      Delete
  3. அன்னையின் சிறப்புகளை விளக்கியிள்ளீர்கள்... நன்று...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  4. வணக்கம்
    ஐயா

    கவிதையின் வரிகள் மனதை நெருடியது... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  5. அம்மாவிற்கு ஈடு இணை ஏது...? சிறப்பான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  6. அம்மவை மதிக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  7. அம்மா மட்டும்தானா ?

    ReplyDelete
    Replies
    1. முதலில் அம்மா தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  8. அன்னையின் சிறப்புகளை ....mika nanry...
    Eniya vaalththu...
    http://kovaikkavi.wordpress.com/2013/12/09/63-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dphotopoem/
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  9. சிறப்பான வரிகளிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சகோதரரே .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  10. அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  11. அன்னைக்கு சிறப்பு சேர்க்கும் கவிதை இது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  12. அன்னைக்கு ஓர் அற்புதக் கவி
    நன்றி ஐயா
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  13. தாயைப் பற்றி எழுதிட வார்த்தைகளா பஞ்சம்? நல்ல கவிதை. (இப்போதெல்லாம் கவிதைகளில் புது மெருகு காணப்படுகிறதே, என்ன ரகசியம்?)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அருகில் இருப்பதால் உங்களின் காற்று எனக்கும் கிடைக்கிறதங்களின் வருகைக்கு நன்றி .

      Delete
  14. அருமையான கவிதை!! தாயிற் சிறந்த கோவிலும் இல்லை!!! இது தாய்க்கு பின் தாரத்திற்கும் பொருந்துவது போலதான் உள்ளது!!! அப்படித்தானோ உங்கள் பதிவும்!! மிக மிக நல்ல கவைதை கவியாழி!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மைதான் தாரமும் இன்னொரு தாய்தானே ?தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  15. அன்னையை சிறப்பித்து ஒரு கவிதை. நன்று.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more