தெய்வங்கள்

தெய்வங்கள்

பெற்றோரும் பிள்ளைகளும் .......

          உறவு, உரிமை என்ற பந்தம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மட்டுமே தொடர்வது. இந்த இரண்டும் செவ்வனே கடைபிடிக்க முடியுமானால்  இந்தப் பிறப்பும் இந்த உறவும் இனிமையாய் இருக்கும்.  இல்லையென்றால் சொல்லொணாத் துன்பமும் மனவலியுமே மிஞ்சும். பெற்றோர்கள், பிள்ளைகளின் நேர்மையான ஆசைகளை  வளர்ப்பதும் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற முயலுவதும்  அவசியம்.

            பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமே தம் பிள்ளைகள்  நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, நல்லவிதமாக மணமுடித்து,   பேரக் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியாய்  இருந்தால் போதும்  என்பதே ஆகும்.  அதற்காக, அவர்களின் படிப்பு விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாகவேண்டிய  கட்டாயம் உள்ளது. 

            அவ்வாறு  படிக்கும் காலத்தில்  பொறுப்புடன் இருந்து  எதிர்காலத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்பட வழிகாட்டுவது  பெற்றோர்களின்   முதல் கடமையாகும். நல்ல உடை, உணவு, சேமிப்பு, சுகாதாரம் நட்புடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றையும் அறிவுறுத்துதல் பெற்றோர்களின் அடுத்த கடமையாகும்.

              தாங்கள் வசதியின்றி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்திருந்தாலும் அல்லது  நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையின்றிப்  படித்திருந்தாலும் தமது பிள்ளைகளை  முன்னேற்ற வேண்டியே நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கச் செய்ய முன்வருவார்கள். அவ்வாறாகப் படிக்கும் காலத்தில் பிள்ளைகளிடம் தெரியும் பழக்க வழக்கங்களே எதிர்காலத்தில் அவர்களை உயர்த்தவோ தாழ்த்தவோ வரும் காரணிகளாய் இருக்கும். அப்போதுதான் இருவருக்குமான பிணைப்பின் அக்கறை தெரியும்.

         செய்யவேண்டியதையும் செய்யக்கூடாததையும் கட்டாயமாய்த்  திணிக்கும் நிலைக்கு பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவசியம் கடும் முயற்சியுடன் அவர்களுக்குச் சொல்லவேண்டியது அவசியம். அவ்வாறு சொல்லத் தவறினால் பிள்ளைகள் எதிர்காலத்தில் மிகுந்த துன்பமும் ஏமாற்றமும் அடையும்  நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வேதனைக்கும் விரக்திக்கும் ஆளாகும் நிலையும் ஏற்படும். எனவே பிள்ளைகளை வளர்ப்பது  மட்டுமே கடமையாகாது. அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தடம் அமைத்துத் தருவதும் பெற்றோரின் கடமையாகும்.

        இளவயதில் பொறுப்பையும் எதிர்காலத் திட்டங்களையும்  அறியாத  பிள்ளைகள் எப்போதுமே தம்மைத் திருத்திக்கொள்ளும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். அப்போது பெற்றோர்களின் அறிவுரையைக் கேட்டுத் தெளிவது பிள்ளைகளின் உரிமைகளில் ஒன்றாகும். பெற்றோரைத்தவிர, உற்றாரைத்தவிர மற்றோர்களால் நல்ல நேர்மையான நம்பகமான வழிகாட்டுதலைத் தரமுடியாது என்பதுதான் உண்மை.

          பெற்றோர் வழியில் தொடர்ந்து  செல்லும் பிள்ளைகள் நிச்சயம் எங்கும் எதிலும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள். அப்படி ஏதேனும் தவறு நடந்தாலும் பெற்றோர்களே அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அவசியங்களை உணர்ந்து, வேண்டிய உதவிசெய்து, நல்லநிலையடைய  உடனிருந்து காப்பார்கள்.



*****கவியாழி*****


Comments

  1. பெற்றோர் வழியில் தொடர்ந்து செல்லும் பிள்ளைகள் நிச்சயம் எங்கும் எதிலும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள். அப்படி ஏதேனும் தவறு நடந்தாலும் பெற்றோர்களே அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அவசியங்களை உணர்ந்து, வேண்டிய உதவிசெய்து, நல்லநிலையடைய உடனிருந்து காப்பார்கள்.//


    அருமை

    ReplyDelete
  2. நல்ல செய்திகள்! அனைவரும் அறிய வேண்டியவை! நன்று!

    ReplyDelete
  3. அருமை...
    நிறைய வினாக்களை எழுப்பியது உங்கள் கட்டுரை..
    மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டுரை..
    மீண்டும் வருவேன்..
    நன்றி..

    ReplyDelete
  4. அருமை... உண்மை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. இளவயதில் பொறுப்பையும் எதிர்காலத் திட்டங்களையும் அறியாத பிள்ளைகள் எப்போதுமே தம்மைத் திருத்திக்கொள்ளும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். அப்போது பெற்றோர்களின் அறிவுரையைக் கேட்டுத் தெளிவது பிள்ளைகளின் உரிமைகளில் ஒன்றாகும். பெற்றோரைத்தவிர, உற்றாரைத்தவிர மற்றோர்களால் நல்ல நேர்மையான நம்பகமான வழிகாட்டுதலைத் தரமுடியாது என்பதுதான் உண்மை.

    சிறப்பான நற் கருத்துக்களுடன் கூடிய படைப்பிற்கு என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  6. அதே சமயம் பெற்றோர்கள் அளவுக்கதிகமாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் குழந்தைகள் எதிர்வினை புரியவும்கூடும் என்பதை மறக்கலாகாது!

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு...... வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு!!

    குழந்தைகளை அவர்களது இயல்பில் விட்டு, பெற்றோரின் விருப்பங்களையும், கருத்துக்களையும் திணிக்காமல், குழந்தைகளை சுயமாகச் சிந்திக்க வைத்து அவர்களது முடிவுகளை அவர்களே முடிவு செய்வதற்கு தயார்படுத்தி, அவர்கள் தவறாக செல்லும் சமயம் மட்டும் அவர்களை வழி நடத்தி, அதே சமயம் அக் குழந்தைகள் பெற்றோரிடம் அன்பும் மரியாதையும் கொள்ளும் அளவு பெற்றோர் ஒரு ரோல் மாடலாக இருந்தால் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே!

    ReplyDelete
  9. சரிதான். ஆனால் பதின்ம வயதில் எல்லாப் பிள்ளைகளுக்கும் பெற்றோர் எதிரிகளாகத் தெரிகிறார்கள்!

    ReplyDelete
  10. புரியாத வயதினருக்குப் புரிய வைக்கலாம். ஆனால் புரியும் வயதாகியும்
    உணர மறுப்பவர்களாயின் மிகுந்த கஷ்டமே...

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  11. "பெற்றோர் வழியில் தொடர்ந்து செல்லும் பிள்ளைகள் நிச்சயம் எங்கும் எதிலும் கஷ்டமான நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள்." என நல்வழிகாட்டலைத் தந்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more