புத்தகத் திருவிழா2014-செல்லப்பா அவர்களுக்குப் பாராட்டு
நேற்று மாலை ஐந்து மணிக்கு திரு.செல்லப்பா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் ' என்ற புத்தகத்தை அய்யா.புலவர் .ராமாநுசம் அவர்களின் திருக்கரங்களால் அகநாழிகை பதிப்பகத்தார் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள்.
நான் அறிமுகம் செய்து பேசியபோது மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன் சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ்
பன்.ராமசாமி,ஸ்கூல் பையன் சரவணன்,ஆர்.வி.சரவணன்,தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,இரவின் புன்னகை செல்வின்
அகநாழிகை புத்தக வெளியீட்டாளர் பொன் வாசுதேவன்
பதிவுலக நண்பர்கள் பலரும் திரு.பாலகணேஷ் அவர்களின் கைபேசிவழித் தகவல் கிடைத்ததும் சிரமம் பார்க்காமல் வந்திருந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்தியபோது எடுத்த சில படங்கள்.
நான் அறிமுகம் செய்து பேசியபோது மிக கவனமாக உரையை கேட்கும் மெட்ராஸ் பவன் சிவகுமார்,நம்ம புலவர்.ராமாநுசம்,எழுத்தாளர்.செல்லப்பா மற்றும் மின்னல்வரிகள் பாலகணேஷ்
அகநாழிகை புத்தக வெளியீட்டாளர் பொன் வாசுதேவன்
உஷா ராமச்சந்திரன், புதுவைக் கவிஞர் உமா மோகன், பெருமிதக் கவிஞர் தேனம்மை ஆகியோர்களுடன் பொன்வாசுதேவன்
வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
(கவியாழி)
வணக்கம்
ReplyDeleteஐயா
கவிஞர் இரா.செல்லப்பா ஐயாவின் சிறுகதை புத்தகமாக வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல நூல்கள் ஐயாவின் முயற்சியால் இந்த எழுத்துலகில் மலரட்டும்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
மகிழ்வான தருணம்! என்றும் மனதில் நிலைத்திடும்!
ReplyDeleteஅனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிரு.செல்லப்பாவிற்கு வாழ்த்துகள்!
ReplyDelete;நன்றி! கவியாழி!
ReplyDeleteவளரட்டும் பதிவுலகப் பிரம்மாகளின் ஒற்றுமை !
ReplyDeleteசெல்லப்பா அய்யாவிற்கு வாழ்த்துகள் !
த .ம.4 to 5
சென்னையில் இருக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பதற்கு இதுமாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்கின்றன. மகிழ்வான நிகழ்வுகள்தான். கவிஞர் இராய செல்லப்பா அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியினை படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteதிரு செல்லப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
ReplyDeleteவாழ்த்துக்களும் மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .
மிக்க நன்றி கவிஞரே! தங்கள் நட்புக்கு அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். புலவர் ஐயா அவர்களுக்கும் வருகைதந்த பதிவருலக இளைஞர் பட்டாளத்திற்கும் அகநாழிகை பொன்.வாசுதேவனுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் 'அன்னபட்சி'யைப் பறக்கவிடவந்த தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கும், மற்ற எழுத்தாளத் தோழியர்க்கும் மனமார்ந்த நன்றிகள்! - இராய செல்லப்பா
ReplyDeleteகவிஞர் இராய செல்லப்பா அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியினை பகிர்ந்தமைக்கு நன்றி! படங்களைக் காணும் போது இன்னும் மகிழ்ச்சி கூடுகிறது. செல்லப்பா ஐயா அவர்கள் மூலம் இன்னும் இது போன்ற பல நூல்கள் வெளிவர வேண்டும். பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்..
ReplyDeleteஆகா... அருமையான வேலை செய்தீர்கள் கவியாழியாரே!
ReplyDeleteஅய்யா செல்லப்பா அவர்களின் எழுத்துப் பயணம் தொடர நம் பதிவுலகத் தோழர்கள் சூழ புத்தகக் கண்காட்சி அரங்கில் நடந்த விழாப் படங்கள் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். அய்யா அவர்களுக்கு வணக்கம். வந்து கலந்துகொண்டு வாழ்த்திய நம் சகோதரப் பதிவர்களுக்குப் பாராட்டுகள். ஏற்பாடுசெய்து, பதிவிலும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அடுத்த ஆண்டு முன்கூட்டியே திட்டமிட்டு, வலைப்பதிவர்கள் சார்பாக ஓர் அரங்கையே பிடித்து வலைப்பதிவர்களின் நூல்வெளியீடுகளை ஊக்குவிக்கலாம் என்று தோன்றுகிறது. பதிவர் திருவிழாவின் போதே திட்டமிடுவோம் - நமக்கென்று ஓர் இடத்தைப புத்தகக் காட்சியிலும், தமிழர் மனங்களிலும் பிடிப்போம். என்ன சொல்கிறீர்கள் கவியாழியாரே? மூத்த பதிவர்களோடும், பதிவர்திருவிழா நிருவாகியரோடும் பேசவேண்டுகிறேன்.
சபாஷ்...! சிறப்பான யோசனை ஐயா!
Deleteகவிஞர் இரா.செல்லப்பா ஐயாவின் சிறுகதை புத்தகமாக வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவலையுலக உறவுகள் எல்லாம் ஒன்று கூடி நிற்கும் காட்சி
மனதிற்கு மட்டற்ற மகிழ்வினை அளிக்கின்றது.
நன்றி ஐயா
த.ம.8
ReplyDeleteநூல் வெளியீட்டுடன் வலையுலக நண்பர்களை இணைத்து, நேரில் கலந்துகொள்ள இயலாத நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
ReplyDeleteகவிஞர் இராய செல்லப்பா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கவியாழி.
ReplyDeleteவாழட்டும் தமிழ் வாழ்த்தட்டும் தலைமுறை
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞர் இரா.செல்லப்பா ஐயா
வாழ்க வளமுடன்
சிறந்த பகிர்வு
ReplyDeleteஐயா செல்லப்பா அவர்களுக்கு பாராட்டுக்கள்! அவரது எழுத்துப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்! நல்ல பகிர்வு! கவியாழி!!
ReplyDelete