மனமே மீண்டும் வருந்தாதே.......
மகிழ்ச்சியில் திளைக்கும் மனமே
மகிழாதோர் இல்லை தினமே
நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே
நெஞ்சுருக மகிழ்வோர் பலரே
நேசிக்கத் தெரியா மனிதன்
நேசமற்ற மனிதன் உள்ளத்தில்
நாளும் தாவும் குரங்கு-மனிதன்
நிம்மதி மறந்த விலங்கு
காணும் காட்சிகள் அவலங்கள்
கண்டும் காணா உள்ளங்கள்
தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே
தேடிக் காணா உண்மைகள்
வெறுமையான மனித உள்ளம்
வேதனையில் தவிக்கும் இல்லம்
வீண்பேச்சு சந்தேகம் விவாதம்-இன்று
விதியல்ல இது மெல்லோர்க்கும்
பணமில்லை சிலருக்கு வாழ
குணமில்லை கொடுத்துமே உதவ
தினம் வருகின்ற தேவையே-என்றும்
தீராத ஆசை நோயே
மனமே மீண்டும் வருந்தாதே
மனிதனின் நிலையால் கலங்காதே
குணமே இதுவென வழுவாதே-எல்லா
குறைகளும் தீர்த்திடும் உணர்ந்தாலே
(கவியாழி)
(கவியாழி)
// வெறுமையான மனித உள்ளம்
ReplyDeleteவேதனையில் தவிக்கும் இல்லம் //
அருமையாகவும் முடித்துள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...
//தேசம் தோறும் சண்டைகள்-மனிதமே
ReplyDeleteதேடிக் காணா உண்மைகள்
வெறுமையான மனித உள்ளம்
வேதனையில் தவிக்கும் இல்லம்//
நல்ல கருத்துள்ள வரிகள்!!! கவியாழி அவர்களே!! வாழ்த்துக்கள்!
நல்ல எச்சரிக்கை
ReplyDeleteஇயல்பாக அருமையாகச்
சொல்லிப்போனவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteவழக்கம் போல் அசத்தியிருக்கிறீர்கள். தங்கள் மனம் பக்குவப்பட்ட மனம் என்பதை வெளிப்படுத்தும் அழகான வரிகள். எவர் எப்படி இருப்பினும் நம்மால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து இயலாதவர்களுக்கு செய்து கொண்டே வாழ்க்கை பாதையில் பயணிப்போம். நன்றி.
மனிதன்
ReplyDeleteநிம்மதி மறந்த விலங்கு. மிகச்சரியானது தான் ஐயா. தேடிக்கொண்டே இருக்கிறோமே தவிர இருப்பதை வைத்து நிம்மதி காண்பதில்லை.
முத்தாய்ப்பான வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனிதன் நிம்மதி மறந்த விலங்கு என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நிம்மதியை மனதில் வைத்துக்கொண்டே வெளியில் தேடுவோர் பலர். உளவியல் நோக்கில் அருமையான சிந்தனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteஎல்லாத்துக்கும் காரணம் ஆசையே இல்லையா ?
ReplyDeleteமகிழ்ச்சியில் திளைக்கும் மனமே
ReplyDeleteமகிழாதோர் இல்லை தினமே
நெகிழ்ச்சியாய் இருப்போர் சிலரே
நெஞ்சுருக மகிழ்வோர் பலரே
அனைத்தும் அருமையும் உண்மையும்
நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
பகிர்வுக்கு நன்றி. தொடரட்டும் கவிதை மழை....
ReplyDelete