தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சிக் கிடைத்தால் மறுக்காதே....

மகிழ்ச்சிக்  கிடைத்தால் மறுக்காதே
மறுத்துப் பின்னால் வருந்தாதே
புகழ்ச்சி மிகுந்து மயங்காதே
பிறகு மயங்கி துடிக்காதே

கிடைத்த வாழ்வைத் தொலைக்காதே
தொலைத்து விட்டுக் கலங்காதே
கிட்டும் வாய்ப்பை விலக்காதே
கலங்கி உயிரைப் போக்காதே

உழைத்து வாழ மறுகாதே
உயர்வு உனக்குக் கிடைக்காதே
ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ
உறங்கி வாழ்வை இழக்காதே

தொடுத்த சொல்லால் துணையைநீ
தொடரும் சொந்தம் முடிக்காதே
தொலைத்து விட்ட வாழ்கையே
தேடிச் சென்றும் கிடைக்காதே

பெண்கள் கல்வி கொடுக்காமல்
பிறந்த வாழ்வைக் கெடுக்காதே
பிறப்பை தவறாய் நினைக்காமல்
படிப்பைத் இடையில் நிறுத்தாதே

கெடுத்தும் வாழ்வு வாழாதே
கெட்டப் பின்பு துடிக்காதே
கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே
கொடுக்கும் நன்மை உணர்வாயே?

Comments

  1. சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சிறப்பான வரிகள்...

    மகிழ்சி - மகிழ்ச்சி அல்லவா!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.மகிழ்ச்சியே மகிழ்ச்சி

      Delete
  3. மகிழ்ச்சி கிடைத்தால் மறுக்காதே! அருமையான வரிகள்! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மிகவும் அருமையான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கவிபிரியன்

      Delete
  5. ரசிக்கும்படியான சிறப்பான வரிகள். அத்தனையும் அருமை. மகிழ்ச்சி நம் மனங்களில் தான் உள்ளது எனும் கருத்தை வலியுறுத்தும் கவிதை அருமை. தொடருங்கள் சகோதரர்..

    ReplyDelete
    Replies
    1. தொடருவேன்.நன்றிங்க பாண்டியன்

      Delete
  6. மனைவியை மதித்து நடக்கவேண்டும் என்ற தங்கள் யோசனையைக் கணவர்கள் மறுக்கப்போவதில்லை.

    ReplyDelete
  7. சிறப்பான கவிதை ஐயா நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்கய்யா

      Delete
  8. கெடுத்தும் வாழ்வு வாழாதே
    கெட்டப் பின்பு துடிக்காதே
    கொடுத்து வாழ்ந்து மகிழ்ந்தாலே
    கொடுக்கும் நன்மை உணர்வாயா?

    உணர்வாயே என முடித்தால்
    இன்னும் சிறப்பாய் இருக்குமோ

    அற்புதமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன்.தங்களின் அறிவுரைக்கு நன்றி

      Delete
  9. //புகழ்ச்சி மிகுந்து மயங்காதே
    பிறகு மயங்கி துடிக்காதே//

    அழகிய வரிகள்!

    ReplyDelete
  10. உங்கள் கவிதையால் கிடைக்கும் மகிழ்ச்சியை மறுக்காமல் அனுபவிக்கிறேன் !
    த.ம.1 ௦

    ReplyDelete
    Replies
    1. அதற்குத்தானே எழுதுகிறேன்

      Delete
  11. உழைத்து வாழ மறுகாதே
    உயர்வு உனக்குக் கிடைக்காதே
    ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ
    உறங்கி வாழ்வை இழக்காதே//

    சத்தியமான வார்த்தை....கவிதை உற்சாகத்தை தருகிறது அண்ணே...!

    ReplyDelete
  12. வாழ்வை மகிழ்வாகவும், பயனுள்ளதாகவும் நீங்கள் கழிக்கிறீர்கள் ஐயா? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.செந்தில் உண்மைதான்

      Delete
  13. கவியரசர் கண்ணதாசனின் தத்துவப்பாடல்களை நினைவூட்டுகின்றன கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு நன்றி.

      Delete
  14. //ஓய்ந்து படுத்துக் கிடந்தேநீ
    உறங்கி வாழ்வை இழக்காதே//

    நல்ல அறிவுரை.... கவிதைப் படைப்புக்கு பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more