Showing posts with label கவிதை/சமூகம்/மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label கவிதை/சமூகம்/மகிழ்ச்சி. Show all posts

Sunday, 1 September 2013

பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்


பதிவர்கள் எழுச்சியைக் கண்டேன்
பறந்து வருவதை அறிந்தேன்
உறவை வளர்க்க துணிந்தேன்
உங்களை வரவேற்று மனம் கனிந்தேன்

சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்லியச் சிரிப்பினை உதிர்த்தேன்
மீண்டும் மீண்டுமே சிரித்தேன்

நட்பில் நானும் மிதந்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசியப் பின்பு நினைத்தேன்

வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
தொலைவில் இருப்பதை அறிந்தேன்
தூய நட்பால் தொடர்ந்தேன்

நேரில் காண இருந்தேன்
நேரமின்றி நான் தவித்தேன்
தமிழைத் தேனாய் குடித்தேன்
தாகம் தீர்ந்து முடித்தேன்

Friday, 23 August 2013

இரவெல்லாம் மழை துளிகள்

இரவெல்லாம் மழை துளிகள்
இமைமூடா சிந்தனைகள்
மிதமான குளிர் காற்று
மீண்டு வரும் நினைவுகளால்

மழைநேர பொழுது என்னை
மறந்த நாட்களை நினைக்கிறது
பகல் வேளைக் காட்சிகளாய்
படம் காட்டிச் செல்கிறதே

மகிழ்ச்சியை மறந்து நானும்
மழை யழகை ரசிக்கின்றேதே
மரம் கொடிச்  செடிகளும்
 மலர்ந்து நிற்பதை காண்கிறதே

இமைமூடா நொடிப் பொழுதை
இன்முகமாய் வேண்டுகிறது
தேநீரும் பழரசமும் தேடியே
திசை யெங்கும் பார்க்கிறது

கனநேர மழை வீழ்ச்சி
காதோரம் இனிக்கிறது
கண்ண யர்ந்து தூங்கிடவே
கட்டளையும் எனக்கு வருகிறது

Thursday, 22 August 2013

நண்பர்கள் தினம்

ஊருமில்லை உறவுமில்லை
உடன்பிறந்த சொந்தமில்லை
பாசமான பந்தமில்லை
பிரிந்திடாத நட்பே உண்மை

தேவையென வரும் போதும்
தேடிவந்து உதவி செய்யும்
தோழமையின் தொடர் அன்பை
தொடரவுமே  நன்றி சொல்வோம்

நாளை முதல் நன்றியினை
நண்பருக்கு வாழ்த்து ரைப்போம்
நலவனாய் மாற்றிடவும் நாம்
நட்பாக தொடர்ந்து செல்வோம்

காலை மாலைக்  கைகூப்பி
கண்டவுடன் வாழ்த்து சொல்வோம்
கன்னியரும் காளையரை கண்டதுமே
கைபிடித்து மகிழ்ச்சி செய்வோம்

வேலை இந்த வேளையிலே
வேதனைகள் மறந்து சிரித்து
வேற்றுமையை தள்ளி வைப்போம்
வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்

Wednesday, 31 July 2013

கணினியைத் திறந்தால்............


(நன்றி கூகிள்)விடியலைக் கண்டதும்
         வேகமாய்த் தேடினேன்
விளக்கைப் போட்டதும்
        விசையை அழுத்தினேன்
தனக்குள்ளே சிரித்து
       தகவலாய் வந்தது

கணக்குப் பார்க்க
       கணினியைத் திறந்தால்
கண்டவர் எண்ணிக்கை
        காண்டேன் இருநூறு
கொண்டேன் கவலை
       குறைய வேண்டாமென


தமிழ்மணம் சென்றேன்
    தளத்தினைப் பார்த்தேன்
அமிழ்தாய் வேண்டும்
    அப்போதே கைஅமுக்கி
இதழ்த் திறந்து
      இனிய வாக்கிட்டேன்

புனிதமாய் போற்ற
         கணினிதான் எனக்கு
இனிமையைத் தருது
         இன்னலைமறக்குது
மனதும் மகிழுது
          மாலையிலும் தொடருது

தொடந்து வரவே
          தினமும் விரும்புது
தூக்கம் என்னை
          தவிக்கவும் விடுது
அறியாத நிகழ்ச்சிதான்
          ஆனாலும் மகிழ்ச்சிதான்

Monday, 22 July 2013

பதிவர் கூட்டம் 01.09.2013


பதிவுலகில் கூட்ட மொன்று
பழகி சேர்ந்து வளருது
பண்புடனே அனைவருமே
பாசம் கொண்டு தொடருது

 கலை இலக்கியம் நாடகமும்
கல்விப் பற்றி விழிப்புணர்வும்
உலகமெல்லாம் நடக்கின்ற
உயர்ந்த பல விஷயங்களுடன்

வலையுலகில் அனைவருமே
வாழ்த்துப் பாடி மகிழுது
வேறுநாட்டு மக்களுடன்
வலையில் சேர விரும்புது

வரும் 01.09.2013 அன்று
சென்னையிலே இணைய வேண்டி
வருக வருக வென்றே
வலை யுலகை அழைக்குது

அனைவருமே வந்திடவே
அழைப்புச் சொல்லி வருவதால்
ஆர்வமுடன் கலந்து கொள்ள
ஆசை எனக்கும் தூண்டுது

வலையுலகில் பவனி வரும்
வயதோரும் முதியோரும்
வருங்காலச் சரித்திரமாய்
வந்திணைந்து சேர்ந்திடுங்கள்


Thursday, 18 July 2013

தாய்நாடு அழைக்கின்றது..........

அவசர உலகமோ அதற்குள்ளே
அனைத்து உறவையும் கெடுக்கிறதே
மிகச்சரியாகப் புரிகிறதே உண்மை
மீண்டும் நம்மூர் அழைக்கிறதே

எல்லா உறவும் மறக்கிறதே
ஏற்றத் தாழ்வும் வருகிறதே
என்பதை எண்ணியே மனமே
எரிமலையாய் இன்று வெடிக்கிறதே

நம்மூரைப் பார்க்க துடிக்கிறதே
நல்லதும் கெட்டதும் காண்பதற்கு
இல்லமும் தேடி அலைகிறதே
இன்பமாய் இதுவே இருக்கிறதே

காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே
கனவுகள் எல்லாம் நிஜமானதே
ஊர்விட்டு மறந்து போன 
உறவினை மீண்டும் நினைக்கிறதே

இத்தனை நாள் மறந்திருந்த
இன்பம் மீண்டும் வருகிறதே
இங்கேயே நான் தங்கிடவே
இன்று மனம் துடிக்கிறதே

அப்பாவின் அன்பு மகிழ்கிறதே
அம்மாவின் உணவும் ருசிக்கிறதே
இப்போதும் உறவுகளை எண்ணி
இனித் திரும்ப தருகின்றதே

Wednesday, 17 July 2013

தினம் தாலாட்டுக் கேட்கும்.....

கொன்றை மலர்க் குலுங்கும்
குளமெல்லாம் அல்லி மலரும்
கொஞ்ச வேண்டி சூழ்நிலைகள்
கொண்டாட்டம் ஏங்கி  நிற்கும்

வானமும் மகிழ்ச்சிக் காட்டும்
வயலில் நண்டுகள்  ஓடும்
மணம் முடிக்கும் மங்கைக்கு
மலரும் மகரந்தமும் பிடிக்கும்

தலைநிறைய பூச்சூடி துணையோடு
தினம் தாலாட்டுக் கேட்கும்
தனிமையும் வெறுக்கும்  ஏக்கம்
தனியறையில் தானாகப் பேசும்

ஆனால்.....

ஆடியில் சேர்ந்தாலே ஆபத்தென
அன்றே தவறாய் சொல்லி
அன்பான தம்பதியைப் பிரித்து
ஆருடமாய் சொல்லி வைத்தார்கள்

மருத்துவ வசதி இன்றி
மறுப்பவர் எவரும் இன்றி
வீணான கற்பனையில் அன்று
வேதனையாய் பிரித்து விட்டார்கள்

மேமாதம் சூரியன் மேகமின்றி
மேனியில்  வெயில் படும்போது
சான் உடம்பு குழந்தைக்கும்
சங்கடங்கள் வந்து சேருமென்றே

தோதான சோதிடமும் சொல்லி
தொலைவிலே  தள்ளி  வைத்தார்கள்
விஞ்ஞான வளர்ச்சியிலே தேவையில்லை
விரைவான மருத்துவம் உண்டு

சிந்தித்து செயல்படுங்கள்  இன்று
சேர்ந்தவரை மகிழ்வாய் விடுங்கள்
இன்பத்தில் மகிழ்வோரை இணைத்து
இளமையை உணர வாழ்த்துங்கள்


Monday, 1 July 2013

எனக்கும் பெண்ணைப் பிடிக்கும்...

சின்ன வயதில் எனக்கு
சிரித்துப் பேசிப்பழக பிடிக்கும்
எண்ணமதைக் கவிதையாக
எழுதிப் பார்க்கப் பிடிக்கும்

வஞ்சிக்கொடி இடைப் பிடிக்கும்
வண்ண வண்ண உடைபிடிக்கும்
கொஞ்சிப் பேசும் எண்ணமுடன்
கூடிப்பேசும் இடம் பிடிக்கும்

தஞ்சம் தேடும் விழியாளின்
தாக்கும் பார்வைப் பிடிக்கும்
தள்ளி நின்று அவளருகே
தஞ்சம் கேட்கப் பிடிக்கும்

நித்திரையில் அவள் வந்து
நினைவதில ணைக்கப் பிடிக்கும்
நீண்ட நேரம் கனவுலகில்
நேர்மையாக பழகப் பிடிக்கும்

நல்ல நல்ல கவிதைகளை
நண்பியிடம் சொல்லப் பிடிக்கும்
நீண்டநேரம் பேசுகின்றப் பெண்
நட்பினையும் எனக்குப் பிடிக்கும்

அஞ்சி நின்று குறுகுறுன்னு
அவளிழிதலை சுவைக்கப் பிடிக்கும்
ஐந்திரண்டு நிமிடம் அவளழகை
ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும்

எத்தனையோ சொல்ல வேண்டும்
என்நினைவை அழைக்க வேண்டும்
பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
போற்றவேண்டும் பாடவேண்டும்
Wednesday, 29 May 2013

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே-- பாடல் 2

நேத்துநானே சொல்லிபுட்டேன்
நேரத்தோடு வந்து விட்டேன்
காத்திருந்து வாசல்வரைக்
கண்டவுடன் துள்ளி ஓடுறாயே

ஊர்ச் சனமும் வந்திடுச்சு
உறவுகளும் இங்கே கூடிடிச்சு
காய்ப் பழங்கள் கனிகளும்
கண்ணே உன்னைத் தேடுதே

அத்தர் செண்டும் போட்டு
அஜந்தாப் பவுடரும் பூசி
அத்த மகளுணைக் காண
அழகாய் வந்தேன் பாரேன்

முன்னே அருகில் வந்து
முறையாகச் சிரித்து விட்டு
பின்னால் திரும்பி என்னை
பெண்மையால் வீழ்த்த வாடி

கூட்டத்துல நீ ஒளிஞ்சி
நோட்டமிடும் உன் நிழலை
பாத்துப் பிட்டேன் பேரழகி
பக்கத்துல எப்போ வாரே

Thursday, 23 May 2013

நெடுநெடுவென வளர்த்தவள்............நெடுநெடுவென வளர்த்தவள்
நேர்ப் பார்வை இல்லாதவள்
சிடுசிடுவென இன்று எரிகிறாள்
சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள்

கடுகடுவெனும் காரணம் காணாது
கண்ணைக் கசக்கி அழுகிறாள்
விடுவிடுவென எதேயோ தேடி
வழியை நோக்கியேப் பார்க்கிறாள்

தடதடவென வண்டியில் அவன்
தலையைக் கண்டதும் மகிழ்கிறாள்
குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி
கொஞ்சி அவனை அணைக்கிறாள்

கிடுகிடுவென இடியின் சத்தம்
கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள்
சலசலவென மழையைப் பார்த்ததும்
சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள்

சிடுசிடுவும் எங்கோ மறைந்தது
சீக்கிரம் உண்மையும் தெரிந்தது
படபடவென இதயம் துடித்ததும்
பயமும் அவளுக்குத் தெளிந்தது
Wednesday, 22 May 2013

தேனாய் சுவையாய் இனிக்குமாம்

முள்ளு முள்ளாய் இருக்குமாம்
முக்கனியுள் பெருத்து வளருமாம்
வேலிபோட்ட காவல் தாண்டி
வேண்டியது இனிப்பாய் மணக்குமாம்

வண்ணம் ஒன்றே மஞ்சளாம்
வாசனை எப்போதும் கெஞ்சலாம்
வண்ணப் போர்வைப் போர்த்தியே
வாழும் நாளோ சேர்த்தியாம்

எல்லா நாளும் கிடைக்குமாம்
எல்லோர் மனதும் விரும்புமாம்
இல்லா மக்கள் மனதுமே
இதனை சுவைக்க விரும்புமாம்
தின்னத் தின்ன திகட்டுமாம்

தேனாய் சுவையாய் இனிக்குமாம்
திரும்பத் திரும்பக் கேட்குமாம்
தேனில் ஊறியே சாப்பிட்டால்
தேனமுதாய் மனதும் மகிழுமாம்

எல்லை யில்லா மகிழ்ச்சியே
எல்லோர் மனதில் இருக்குமாம்
பிள்ளைமுதல் கிழவர்வரை
கொள்ளைப் பிரியம் விரும்புமாம்


---பெயரென்ன???


Tuesday, 7 May 2013

கனவு-சின்ன வயது நிகழ்வேஉண்மை சொல்ல முடியா
உணர்வை காண தெரியா
கண்ணு றக்க கனமே-நமது
கனவு என்ற நிசமாம்

சின்ன வயது நிகழ்வே
சொல்லி வந்த வார்த்தை
மெல்ல பேசும் உளறல்-மீண்டும்
சொல்லி பார்க்க விடுமாம்

வண்ண இளமை நாளை
வாழ்ந்து முடிந்த வேளை
திண்ணை தோறும் சென்று-அதை
தெருவில் பேச விடுமாம்

உண்ண முடியா விருந்தய்
உறக்கம் கூட தொடரா
வண்ண மேனி கனவே-காதல்
வாசல் தேடி தருமாம்

சின்ன பெரிய சனங்க
சிரித்துப் பேசும் மனங்க
எண்ணம் பேசும் நிசமே-காலை
எழுமுன் வரும் கனவாம்

எண்ணம் போல வருமாம்
இந்த உண்மை நிசமாம்
வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு
வாசம் கூட தருமாம்

Monday, 29 April 2013

மகிழ்வாய் நானும் வணங்குகிறேன்

கடந்தன நாட்கள் -200
கண்ட பதிவுகள்- 200
பார்த்தவர் பார்வைகள்- 20,000மகிழ்ச்சியாக உள்ளது
மனமெழுதச் சொன்னது
நெகிழ்சியான தொடக்கமே-200
நாட்களை தாண்டியது

மெய்யாய் கொடுத்த
முடிந்தோர் ஆதரவில்
அடியேன் முடித்தேன்-200
அடங்கும் பதிவுகள்

புகழ்ச்சிக்காக சொல்லவில்லை
பெருமையாக எண்ணவில்லை
உருக்கமான பயணத்தில்-20000
உண்ர்வுடன் வந்தனரே

தொடர்ந்து வந்து
துணைபுரிந்த தோழர்களை
கிடந்தே நானும்- நன்றியுடன்
மகிழ்ந்து வணங்குகிறேன்


எனக்கு ஊக்கம் கொடுத்து "அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும் தருவாயா" என்றமுதல் புத்தகத்தை வெளியிட முன்னுரை எழுதித் தந்துஎன்னை உற்சாகப் படுத்திய மரியாதைக்குரிய புலவர்.ராமாநுசம் அய்யா ,திருவாளர்.எஸ்.ரமணி திருவாளர்.பாலகணேஷ் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.மேலும் எனக்கு பிளாக்கைதொடங்கி கொடுத்த திருமதி.சசிகலா சங்கர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.எனக்கு எப்போதும் அன்போடு என்னை வழிநடத்திய நண்பர்கள் மதுமதி,திண்டுக்கல்.தனபாலன்,பட்டிக்காட்டான் ஜெய்,
கூகுள்,தமிழ்மணம்,வலைச்சரம் குழு,தமிழ்10,இன்ட்லி,முரளிதரன்,மற்றும் உடன் வந்து ஊக்கப்படுத்திய இளமதி,ஹேமா,குட்டன்,சௌந்தர்,
தமிழ்இளங்கோ,அம்பாள்அடியாள்,எஸ்.சுரேஷ் ,அய்யா.வைகோ,பிரியா,முருகானதம்,கவிஞர்.பாரதிதாசன்,எஸ்.டினேஷ்.யோகசாமி,
மஞ்சுபாஷினி,,மாதேவி,காசி ராஜலிங்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம்,ராஜராஜேஸ்வரி,கீதமஞ்சரி,பூவிழி,அய்யா.ஜனா,கோமதி அரசு,
ரஞ்சனி நாராயணன்,உஷா அன்பரசு,கோவைக்கவி,கவிஞர்.பாரதிதாசன்,அருணா செல்வம் ,கருண்,தனஞ்சய்,சேட்டைக்காரன் ,போன்றோரோடு மறந்துபோன மற்ற நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.

தொடர்ந்து வாருங்கள் என்னை ஊக்கப் படுத்த உற்சாகப் படுத்த ஆதரவு தாருங்கள்

Monday, 22 April 2013

முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்

அப்பனுக் கிணையாக உலகில்
ஆயிரம்த் தெய்வமும் உண்டோ
ஆண்டவன் என்று சொன்னால்-முதலில்
அப்பனையே நாளும் தொழுவேன்

கற்பனைக் கெட்டாத கனவுகளுடன்
கைபிடித்து நடக்கச் செய்து
கண்விழித்துக் கதைசொல்லி-தினமும்
கருத்துக்கள் ஆயிரம் சொல்வார்

வார்த்தையில் மட்டும் சொல்லாமல்
வாழ்க்கையைக் கற்றுத் தந்ததார்
போர்கலம் தான் வாழ்க்கையென-தினம்
புலர்ந்ததும் சொல்லி வைத்தார்

ஏற்பதும் படிப்பதும்  வாழ்க்கையென
எப்போதும் சொல்லியே வளர்த்தார்
எந்நாளும் அறிவையே எப்போதும்-நல்லவை
எடுத்துரைத்தே  படிக்க வைத்தார்

சொல்லாத வார்த்தையை செய்கையில்
செய்துகாட்டி புரிய வைத்தார்
இல்லாமை இல்லையென-திறமை
இருப்பதை  காட்டி வளர்த்தார்

அறிவையும் அன்பையும் வளர்த்து
ஆணவம் என்பதை வெறுத்து
துணிவையும்  தூய்மையும் கொடுத்து-மனதில்
துணையாக எப்போதும் இருந்திடுவார்

ஆயிரம் வார்த்தையில் அடங்காது
ஆணவம் எப்போதும் தோன்றாது
அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள்
அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்

Friday, 19 April 2013

மழலையின் சிரிப்பு மத்தாப்புமத்தாப்பு பூத்ததுபோல்
மழலையின் சிரிப்புதனை
தப்பாக பேசமுடியுமா
தவறாக சொல்லலாகுமா

கத்தாளை உடம்புபோல
காட்சியாக இருந்தாலும்
கருப்பாக வழுக்கையாய்
தூங்குமூஞ்சி ஆனாலும்

சிட்டாக தாவிவரும்
சிறுநீரை கழித்தாலும்
மொட்டான மலர்களை
திட்டத்தான் இயலுமா

பூவைத்து பொட்டிட்டு
புதுசட்டையும் போடாமல்
புன்சிரிப்பாய் ஓடிவரும்
பிள்ளைகளை பார்த்ததும்

தொல்லைகளை மறந்து
தோளில் சுமத்தியதும்
மனதில் மகிழ்ச்சியை-யாரும்
மறைக்கத்தான் முடியுமா

Thursday, 18 April 2013

மீண்டும் சென்னைக்கே வந்துட்டேன்

அன்பான வலைத்தள நண்பர்களுக்கு
அடியேனின் பணிவான வணக்கங்கள்
மூன்று வருடத்திற்கு மேலாக- பணிக்கு
முடியாமல் தினமும் பயணமானேன்

நீண்ட காலம் சென்றபின்னும்
நேரம் கடந்து அங்கிருந்தேன்
பகையான நட்புக்களால் தினமும்
பரிதவித்துக் கண் கலங்கினேன்

தாண்ட முடியா சிரமங்களும்-மனதில்
தன்னிடமே கொண்டு வாழ்ந்தேன்
தகையோரின் பெரியோரின் ஆசியாலே
துயரமெல்லாம் தாங்கி நின்றேன்

தயவாக வேண்டியே விண்ணப்பித்து
தடம்மாறி மீண்டும் வந்திட்டேன்
உயர்வான எண்ணத்துடன் -இங்கே
ஊழியத்தை நன்றே செய்திடவே

பகைமாறி பாசமும் நேசமும்
பண்பாடும் நாகரீகம் போற்றியே
நெடுநாளாய் நானும் காத்திருந்து -மகிழ்ச்சியாய்
மீண்டும் சென்னைக்கே வந்திட்டேன்

Saturday, 13 April 2013

சித்திரையே வருக

சித்தரை மாதமே சீக்கிரம் வா
சிந்தனை அதிகம் எனக்குத் தா
நித்திரை கெட்டுப்போவதாலே-கவிதை
நிறைய எழுத நிம்மதித் தா

அதிக மழைபொழியும் ஆடியில்
அன்பாக இருந்து உருவாகி
அறிவாக பிறந்த நீ-அன்பால்
அடிமையாக்க அசைந்து நீ வா

தவறாக சொல்வோர் இருப்பார்
தை மாதம் பிறப்பு என்பார்
மைகொண்ட உன் விழியால்-எம்மை
மகிழ்ச்சி கொடுக்க நீ வா

கோடை வெயில் கொளுத்தினாலும்
குறைச் சொல்லி யுன்னை மறுக்காமல்
முக்கனியும் சக்கரையும் வைத்து-உன்னை
முழுமனதோடு வரவேற்கிறேன் நீ வா

இன்னலைத் தீர்க்க இன்று வா
ஈழத்தில் அமைதி நிலவ வா
இனிமையான சித்திரையே வா-தமிழர்
இன்னலைத் தீர்க்க ஓடி வா

மழையோடு சேர்ந்து நீ வா
மகிழ்ச்சியாய் பொழிந்து நீ வா
மக்களின் துயர் நீக்க வா
மனிதநேயம் காக்க மீண்டும் வா

Thursday, 11 April 2013

பாட்டன் பாட்டியை மறக்காதே

சின்னச் சின்ன பிள்ளைகளே

சிரிப்புக் காட்டும் குழந்தைகளே

எண்ணம் முழுதும் அப்படியே-அழகால்

எடுத்துக் கொள்ளும் செல்வங்களேஅன்னம் தவழ்ந்து வரும்

அழகு கொண்ட நடையும்

கன்னம் குழிவிழ சிரிப்பதையே-நான்

கண்டே உள்ளம் மகிழ்கிறதேஉண்ணச் சொன்னால் மறுத்தே

ஓடும் அழகை பார்பதினால்

எண்ணத் தோணுது உன்னோடு-எனக்கும்

எகிறிக் குதித்து விளையாடசொன்னச் சொல்லை மீண்டுமே

சொல்லிச் சொல்லி வருகின்றேன்

இன்னும் புரியா பிள்ளையாக-அழகாய்

இதையே மீண்டும் கேட்கிறாயேபள்ளிச் செல்ல மறுத்தே நீ

பயந்து ஒளிந்து ஓடாதே

பாடம் படித்து பெரியவனாய்-பின்பும்

பாட்டன் பாட்டியை மறக்காதே