தெய்வங்கள்

தெய்வங்கள்

பாட்டன் பாட்டியை மறக்காதே

சின்னச் சின்ன பிள்ளைகளே

சிரிப்புக் காட்டும் குழந்தைகளே

எண்ணம் முழுதும் அப்படியே-அழகால்

எடுத்துக் கொள்ளும் செல்வங்களே



அன்னம் தவழ்ந்து வரும்

அழகு கொண்ட நடையும்

கன்னம் குழிவிழ சிரிப்பதையே-நான்

கண்டே உள்ளம் மகிழ்கிறதே



உண்ணச் சொன்னால் மறுத்தே

ஓடும் அழகை பார்பதினால்

எண்ணத் தோணுது உன்னோடு-எனக்கும்

எகிறிக் குதித்து விளையாட



சொன்னச் சொல்லை மீண்டுமே

சொல்லிச் சொல்லி வருகின்றேன்

இன்னும் புரியா பிள்ளையாக-அழகாய்

இதையே மீண்டும் கேட்கிறாயே



பள்ளிச் செல்ல மறுத்தே நீ

பயந்து ஒளிந்து ஓடாதே

பாடம் படித்து பெரியவனாய்-பின்பும்

பாட்டன் பாட்டியை மறக்காதே


Comments

  1. குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி இனிமையான உறவுகள்.. மறக்க மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்போது நாமும் சொல்லித்தரணும்.உறவுகளையே தெரியாமல் வளர்க்கும் இக்காலத்தில் இதுவும் அவசியமாகிறது

      Delete
  2. குழந்தைகள் அறிந்து கொள்ளவேண்டியதை
    குழந்தைகள் மொழியில் சொன்னது அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்.சொந்த பந்தம் சுற்றம் இப்போதெல்லாம் யாரும் சேர்க்க விரும்பாத இப்போது பாட்டன் பாட்டியைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது

      Delete
  3. குழந்தை மொழியில் அழகிய பாடல் அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே. தொடர்ந்து தளத்துக்கு வாங்க ஆதரவு தாங்க பிடிச்சிருந்தா.

      Delete

  4. பாப்பா பாட்டு! நன்று!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் அய்யா. நீங்க வந்ததுக்கு நன்றிங்க அய்யா

      Delete
  5. //பாடம் படித்து பெரியவனாய்-பின்பும்
    பாட்டன் பாட்டியை மறக்காதே// தாய் தந்தையையும் மறக்காதே என்று இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது... நன்று கண்ணதாசன் சார்..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானம்மா.அப்பா அம்மாவையும் சேர்ந்து என்று பொருள் கொள்ளவும்.நீங்க வந்தமைக்கு நன்றிங்கம்மா

      Delete
  6. சிறுவரின் செய்கையிலே சிரித்துமனம் சேர்கையிலே
    சிறப்பாக அறிவுரையும் சேர்த்துச்சொன்ன கவிஅருமை ...

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .நாம் அன்பை ஊட்டி வளரத்தால் நிச்சயம் பிற்காலத்தில் நம்பிள்ளைகள் புரிந்து நடப்பார்கள்.நீங்க வந்ததுக்குநன்றிங்கம்மா

      Delete
  7. அருமையான பாடல்... வாழ்த்துக்கள்...

    கொடுத்து வைக்காத தனிகுடித்தனக் குழந்தைகள் அறியாதது...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.தனிக்குடித்தனம் இப்போது தவறாகி வருவதை இப்போது கண்கூட காண்கிறோம்

      Delete
  8. மழலைப் பாட்டு அருமை. தாத்தா பாட்டிகளும் இந்த காலத்தில் பாசத்தோடு இருந்தால் சிறு பிள்ளைகள் பாசத்தோடு இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புக்கும் ஆதரவுக்கும் அவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள் .இப்போதே வயதானவர்களை மரியாதை செலுத்தச் சொல்ல வேண்டும்

      Delete
  9. பாட்டன் பாட்டியை மறக்காதே! நன்றாய் சொன்னீர்கள். இப்போதெல்லாம் தாத்த பாட்டியுடன் இருப்பது அரிதாகி வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ள கஷ்டம் இன்னும் பெரிதாகி விடுமுன்னே இப்பவே சொல்லி வளர்க்க வேண்டும்

      Delete
  10. மழலைச் செல்வம் மடிமீது
    தவழும் வரமோ தனி பேறு
    முழுதாய் பெற்றிட உதவுங்கள் -அந்த
    முதுமை மகிழ வைத்திடுங்கள்...!

    அழகிய பாடல் வரிகள்
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
  11. சரியா சொன்னீங்க நண்பரே .இதுபோல எல்லோரும் சபதமெடுத்து முதுமைக்கு மரியாதை செய்ய வேண்டும்.வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. ஐயா!
    இந்தச் சின்னஞ் சிறிசுகளுக்கு
    எந்த ஆளாலும் பாபுனைவது இயலாது
    தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது...

    இன்னும் கொஞ்சம் சொல்களை எளிமையாக்கலாம்

    எடுத்துக்காட்டாக

    பாட்டி சுட்ட வடையைப் பாரும்
    காக்கா தூக்கமுன் உண்போம் வாரும்

    தங்கள் சிறுவர் பாடல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கு நன்றி.நிச்சயம் இன்னும் வரும் அதில் கண்டிப்பாய் நீங்கள் ஆலோசனை சொன்னதுபோல் சேர்த்துக்கொள்கிறேன்.நன்றிங்கம்மா

      Delete
  13. அருமை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி .அடிக்கடி வாருங்கள் ஆதரவு தாருங்கள்

      Delete
  14. குழந்தைக் கவி அருமை.

    இறுதி வரிகள் இக் காலத்துக்கு அவசியமானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மாதேவி.குழந்தைகளுக்கு இப்போதே சொல்லித் தரவேண்டும்

      Delete
  15. பள்ளிச் செல்ல மறுத்தே நீ

    பயந்து ஒளிந்து ஓடாதே

    பாடம் படித்து பெரியவனாய்-பின்பும்

    பாட்டன் பாட்டியை மறக்காதே//

    குழந்தைகளுக்கு கல்விகற்றலும் அவசியம். பாட்டன், பாட்டியை மறக்காமல் இருப்பதும் அவசியம்.
    அழகாய் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க.பாட்டன் பாட்டியை பார்கிறவன் அப்பா அம்மாவை விட்டு விடுவானா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்

      Delete
  16. புத்திசாலி அய்யா நீங்கள்! ‘அப்பா அம்மாவை மறந்து விடு’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்! என்ன இருந்தாலும் பாட்டன் சொத்து பேரனுக்கே அல்லவா? மறக்கக் கூடாது தான்...!

    ReplyDelete
    Replies
    1. அய்யா அது அந்தகாலம் இப்போ நடப்பது உங்களுக்கே தெரியுமே.ஆனால் நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள் .பாட்டன் பாட்டியிடம் அன்பாய் இருப்பவன் பெற்றோரை மறக்க மாட்டான்

      Delete
  17. பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உறவுகள் பாட்டன் -பாட்டி! மறக்க முடியாத உறவு! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம்,மறந்துபோன உறவு மீண்டும் வரவேண்டுமென எண்ணியதால் இந்த கவிதை

      Delete
  18. பாப்பா பாட்டு அருமை

    ReplyDelete
    Replies
    1. தாத்தா பாட்டிக்கும் அப்பா அம்மாவுக்கும் உள்ளதே.மிக்க மகிழ்ச்சி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more