தெய்வங்கள்

தெய்வங்கள்

இரவெல்லாம் மழை துளிகள்

இரவெல்லாம் மழை துளிகள்
இமைமூடா சிந்தனைகள்
மிதமான குளிர் காற்று
மீண்டு வரும் நினைவுகளால்

மழைநேர பொழுது என்னை
மறந்த நாட்களை நினைக்கிறது
பகல் வேளைக் காட்சிகளாய்
படம் காட்டிச் செல்கிறதே

மகிழ்ச்சியை மறந்து நானும்
மழை யழகை ரசிக்கின்றேதே
மரம் கொடிச்  செடிகளும்
 மலர்ந்து நிற்பதை காண்கிறதே

இமைமூடா நொடிப் பொழுதை
இன்முகமாய் வேண்டுகிறது
தேநீரும் பழரசமும் தேடியே
திசை யெங்கும் பார்க்கிறது

கனநேர மழை வீழ்ச்சி
காதோரம் இனிக்கிறது
கண்ண யர்ந்து தூங்கிடவே
கட்டளையும் எனக்கு வருகிறது





Comments

  1. /// தேநீரும் பழரசமும் தேடியே
    திசை யெங்கும் பார்க்கிறது... ///

    இனிமையை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு உங்களுக்குத் தேவைப்படாது

      Delete
  2. வணக்கம்

    அருமையான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி .தொடர்ந்து வாங்க

      Delete
  3. இனிமையான கவிதை... அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சே.குமார் அவர்களே

      Delete
  4. மழை குளிர் தூக்கம்....

    மழையே ஒரு கவிதைதான் இல்லையா, சூப்பர்....!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே.மழையும் கவிதைப் பாடும்,சொல்லும்,தேடும்?

      Delete
  5. கனநேர மழை வீழ்ச்சி
    காதோரம் இனிக்கிறது
    கவிதை பேசுகிறது..!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.உண்மைதான்

      Delete
  6. கனநேர மழை வீழ்ச்சி
    காதோரம் இனிக்கிறது
    கண்ண யர்ந்து தூங்கிடவே
    கட்டளையும் எனக்கு வருகிறது./// வார்த்தைகள் விளையாடி இருக்கிறது கவிஞரே..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.வாழ்த்துக்கும் வருகைக்கும்

      Delete
  7. இனிமையான கவிதை தந்த
    மழைக்கும் உங்களுக்கும் நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  8. கனநேர மழை வீழ்ச்சி
    காதோரம் இனிக்கிறது
    கண்ண யர்ந்து தூங்கிடவே
    கட்டளையும் எனக்கு வருகிறது

    எனகக்கு பிடித்த அருமையான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வேறன்ன மழைவந்தா நல்லத் தூக்கமும் வரத்தானே செய்யும்

      Delete
  9. #தேநீரும் பழரசமும் தேடியே
    திசை யெங்கும் பார்க்கிறது#
    இதை சுமந்து வருவதற்கு தேவதை வேண்டாமா ?

    ReplyDelete
    Replies
    1. வருவாளே ? ஆண்டவனுக்கே தேவையாம்

      Delete
  10. கண்ண யர்ந்து தூங்கிடவே
    கட்டளையும் எனக்கு வருகிறது
    >>
    யாருக்கிட்ட இருந்து கட்டளை?!

    ReplyDelete
    Replies
    1. அயர்ச்சி மழை வந்தாலே மனம் குளிருமே அப்புறமென்ன தூக்கம்தான்

      Delete
  11. அமைதியான தூக்கத்திற்கு வித்திட்டுச் செல்லும்
    மழைத் துளிகள் தொடர வாழ்த்துக்கள் சகோதரரே :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

      Delete
  12. கனநேர மழை வீழ்ச்சி
    காதோரம் இனிக்கிறது
    கண்ண யர்ந்து தூங்கிடவே
    கட்டளையும் எனக்கு வருகிறது

    சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்கள் .

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிங்கம்மா.

      Delete
  13. தூக்கமோ விழிப்போ தூங்கா உணர்வோடு துயர்தான்...!

    செறிந்த கருத்து! சிறப்பான வரிகள்!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் நல்லதுதான்.தூங்காவிட்டால் வேதனைதான்

      Delete
  14. இதமான கவிதை வரிகள் இமை மூடி ரசிக்க சொல்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பருவம் நன்றாக இருந்தால் எல்லாமே சுகம்தான்

      Delete
  15. இரவு மழை இங்கும் வந்தது. எனக்கு தூக்கம் வந்தது! உங்களுக்குக் கவிதை வந்தது!

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா .உண்மைதான் எனக்கு தூக்கம் வரவில்லை

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more