தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்திரையே வருக





சித்தரை மாதமே சீக்கிரம் வா
சிந்தனை அதிகம் எனக்குத் தா
நித்திரை கெட்டுப்போவதாலே-கவிதை
நிறைய எழுத நிம்மதித் தா

அதிக மழைபொழியும் ஆடியில்
அன்பாக இருந்து உருவாகி
அறிவாக பிறந்த நீ-அன்பால்
அடிமையாக்க அசைந்து நீ வா

தவறாக சொல்வோர் இருப்பார்
தை மாதம் பிறப்பு என்பார்
மைகொண்ட உன் விழியால்-எம்மை
மகிழ்ச்சி கொடுக்க நீ வா

கோடை வெயில் கொளுத்தினாலும்
குறைச் சொல்லி யுன்னை மறுக்காமல்
முக்கனியும் சக்கரையும் வைத்து-உன்னை
முழுமனதோடு வரவேற்கிறேன் நீ வா

இன்னலைத் தீர்க்க இன்று வா
ஈழத்தில் அமைதி நிலவ வா
இனிமையான சித்திரையே வா-தமிழர்
இன்னலைத் தீர்க்க ஓடி வா

மழையோடு சேர்ந்து நீ வா
மகிழ்ச்சியாய் பொழிந்து நீ வா
மக்களின் துயர் நீக்க வா
மனிதநேயம் காக்க மீண்டும் வா

Comments

  1. அதே விருப்பத்தோடு நானும் அழைக்கிறேன் சித்திரை திருமகளை....

    தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மாதத்தின் பெருமை அருமை !


    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  3. வருஷ கவி அருமை! விரைவில் வருஷிக்கட்டும் மழை! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  4. அருமை. அழகிய கவிதை.

    உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி,தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  5. சித்திரையை வாழ்த்தி வரவேற்கும் இனிய பாடலில் அவள் அகமகிழ்ந்து போவாள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி,தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  6. மழையோடு வரசொன்னீங்களே நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மழையும் சேர்ந்து வந்தால் மகிழ்ச்சி அதிகமாகும்.,தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  7. தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  8. தை மாதம் முதல்நாள் தான் தமிழர் புத்தாண்டு என்பது வரலாறு கண்ட உண்மை நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா அய்யா நான் இதுவரை கொண்டாடியது சித்திரைதான்.
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  9. புத்தாண்டை இனிய கவிதையுடன் வரவேற்று இருக்கிறீர்கள்.
    இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா எல்லோரும்போல நானும் எழுதினேன்
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  10. இனிய கவிதை

    உளமார்ந்த சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  11. மழையோடும் மனிதநேயத்தோடும் வரச்சொன்னது மிகவும் அழகு...அருமையான கவிதை...நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இப்போது ரெண்டுமே நமக்கு தேவையானது ,நன்றிங்கம்மா வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more