தெய்வங்கள்

தெய்வங்கள்

முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்

அப்பனுக் கிணையாக உலகில்
ஆயிரம்த் தெய்வமும் உண்டோ
ஆண்டவன் என்று சொன்னால்-முதலில்
அப்பனையே நாளும் தொழுவேன்

கற்பனைக் கெட்டாத கனவுகளுடன்
கைபிடித்து நடக்கச் செய்து
கண்விழித்துக் கதைசொல்லி-தினமும்
கருத்துக்கள் ஆயிரம் சொல்வார்

வார்த்தையில் மட்டும் சொல்லாமல்
வாழ்க்கையைக் கற்றுத் தந்ததார்
போர்கலம் தான் வாழ்க்கையென-தினம்
புலர்ந்ததும் சொல்லி வைத்தார்

ஏற்பதும் படிப்பதும்  வாழ்க்கையென
எப்போதும் சொல்லியே வளர்த்தார்
எந்நாளும் அறிவையே எப்போதும்-நல்லவை
எடுத்துரைத்தே  படிக்க வைத்தார்

சொல்லாத வார்த்தையை செய்கையில்
செய்துகாட்டி புரிய வைத்தார்
இல்லாமை இல்லையென-திறமை
இருப்பதை  காட்டி வளர்த்தார்

அறிவையும் அன்பையும் வளர்த்து
ஆணவம் என்பதை வெறுத்து
துணிவையும்  தூய்மையும் கொடுத்து-மனதில்
துணையாக எப்போதும் இருந்திடுவார்

ஆயிரம் வார்த்தையில் அடங்காது
ஆணவம் எப்போதும் தோன்றாது
அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள்
அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்





Comments

  1. //
    சொல்லாத வார்த்தையை செய்கையில்
    செய்துகாட்டி புரிய வைத்தார்
    இல்லாமை இல்லையென-திறமை
    இருப்பதை காட்டி வளர்த்தார்
    //

    அழகான வரிகள் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  2. //ஆயிரம் வார்த்தையில் அடங்காது
    ஆணவம் எப்போதும் தோன்றாது
    அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள்
    அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்//

    அருமையாகச் சொன்னீர்கள். நல்ல கருத்துச்செறிவான கவிதை.
    வாழ்த்துக்கள்!

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா அம்மாவுக்கு அன்பு மட்டுமே தெரியும் அப்பாவின் கடமையோ அளவில்லாதது.மிகச்சாதாரணமாக சொல்லமுடியாதது

      Delete
  3. அன்னை தந்தையைப் போற்றும் அழகிய கவிதை.

    ReplyDelete
    Replies
    1. அமாங்க.ஆனாலும் அப்பாவுக்கே முதலிடம்

      Delete
  4. அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள்
    அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்...
    இன்றைய தலைமுறைகள் உணரவேண்டிய வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நீங்க வந்தமைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க

      Delete
  5. அருமையாகச் சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  6. //அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள்
    அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்//- அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.அவர்கள்தானே தெய்வங்களை கண்டு சொன்னவர்கள்

      Delete
  7. அன்னை தந்தை பற்றி எவ்வளவு எழுதினாலும் மனம் நிறைவடைவதில்லை. எவ்வளவு மழை பொழிந்தாலும் கடல் நிரம்பி வழிவதில்லையே!

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் தந்தையின் உழைப்பு ஊக்கம் அளவிடமுடியாதது.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  8. ஆயிரம் வார்த்தையில் அடங்காது
    ஆணவம் எப்போதும் தோன்றாது
    அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள்
    அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்

    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ..!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்கம்மா .அப்பாவுக்கு இணையாக சொல்ல முடியாது.உயிர் கொடுத்தவன் உழைப்பாளி

      Delete

  9. நன்று உங்கள் பாசம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா உங்களின் நேசம்

      Delete
  10. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! அருமையான கவிதை தந்து தந்தைகளை கவுரவித்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உன்மைத்தான்.தந்தையை விட வேறொருவர் இணையாக முடியாது

      Delete
  11. தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை என்பதை வலியுறுத்தும் கவிதை வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நானிங்கு அப்பா அம்மாவையே தெய்வமாக்கிவிட்டேன் அதற்க்குபின்பே தெய்வம் என்பது எனது கருத்து

      Delete
  12. அன்னை தந்தையைப் போற்றும் அருமையான கவிதை. பெற்றவர்களை மறந்தும் வெறுத்தும் புறந்தள்ளும் பிள்ளைகள் கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று. மனமார்ந்த பாராட்டுகள் தங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் உணர வேண்டும் .நீங்க வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றிங்கம்மா

      Delete
  13. மாதா பிதா பின் தெய்வம் என்பார்கள். நீங்களோ அப்பாவும் அம்மாவுமே தெய்வம் என்கிறீர்கள். அப்படியே உங்கள் வரிகளை வழி மொழிகிறேன்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .வாழும், நமக்காக வாழ்ந்த ,நமது நலனைப் பார்த்துப் பார்த்து செய்தவைகளை மறக்க முடியுமா?

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more