தெய்வங்கள்

தெய்வங்கள்

தினம் தாலாட்டுக் கேட்கும்.....

கொன்றை மலர்க் குலுங்கும்
குளமெல்லாம் அல்லி மலரும்
கொஞ்ச வேண்டி சூழ்நிலைகள்
கொண்டாட்டம் ஏங்கி  நிற்கும்

வானமும் மகிழ்ச்சிக் காட்டும்
வயலில் நண்டுகள்  ஓடும்
மணம் முடிக்கும் மங்கைக்கு
மலரும் மகரந்தமும் பிடிக்கும்

தலைநிறைய பூச்சூடி துணையோடு
தினம் தாலாட்டுக் கேட்கும்
தனிமையும் வெறுக்கும்  ஏக்கம்
தனியறையில் தானாகப் பேசும்

ஆனால்.....

ஆடியில் சேர்ந்தாலே ஆபத்தென
அன்றே தவறாய் சொல்லி
அன்பான தம்பதியைப் பிரித்து
ஆருடமாய் சொல்லி வைத்தார்கள்

மருத்துவ வசதி இன்றி
மறுப்பவர் எவரும் இன்றி
வீணான கற்பனையில் அன்று
வேதனையாய் பிரித்து விட்டார்கள்

மேமாதம் சூரியன் மேகமின்றி
மேனியில்  வெயில் படும்போது
சான் உடம்பு குழந்தைக்கும்
சங்கடங்கள் வந்து சேருமென்றே

தோதான சோதிடமும் சொல்லி
தொலைவிலே  தள்ளி  வைத்தார்கள்
விஞ்ஞான வளர்ச்சியிலே தேவையில்லை
விரைவான மருத்துவம் உண்டு

சிந்தித்து செயல்படுங்கள்  இன்று
சேர்ந்தவரை மகிழ்வாய் விடுங்கள்
இன்பத்தில் மகிழ்வோரை இணைத்து
இளமையை உணர வாழ்த்துங்கள்


Comments

  1. அதானே...! சிந்தித்து 'செயல்பட' வேண்டியது தான்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இன்னும் புரியாம பிரிச்சு வைக்கிறாங்க

      Delete
  2. சரியாகச் சொன்னீர் அய்யா. அன்று விஞ்ஞானத்தை ஆன்மீகத்தில் கலந்து கொடுத்தன் விளைவு, விஞ்ஞானத்தை மறந்து,ஆன்மீகத்தை மட்டுமே நினைவில் கொண்டுவிட்டோம்

    ReplyDelete
    Replies
    1. இன்று விஞ்ஞான வளர்ச்சியில் அவசியமில்லை.ஆன்மீகமும் மக்களைக் கெடுக்கிறது

      Delete
  3. சரிதான் ஐயா... அந்தக்காலத்தில் மருத்துவ வசதி குறைவென்பதால் அவ்வாறு செய்தார்கள்... இப்போது தேவையில்லையே...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அவசியமில்லாத ஆர்பாட்டம்.

      Delete
  4. வித்தியாசமான அருமையான காலச்சூழலுக்கேற்ற சிந்தனை ஒப்பிட்டவிதம் மனம் கவர்ந்தது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  5. இளம் தம்பதிகளை பிரித்துவைத்து வருத்தப்பட வைக்கவேண்டாம் என்று ,இன்றைய ஆடிப்பிறப்புக்கு பொருத்தமான கவிதை !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ங்க இதிலென்ன அவசரமோ தெரியவில்லை. இளசுங்களை சந்தோசமா இருக்க விடுங்க

      Delete
  6. சிந்தித்து செயல்பட வைக்கும் அருமையான கவிதை வரிகள்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஆடியிலே மட்டும் அவசியமா?

      Delete
  7. ஆடிக்கு ஏற்ற சிந்தனை கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தொடர்ந்து வாங்க

      Delete
  8. சிந்தித்து செயல்படுங்கள் இன்று
    சேர்ந்தவரை மகிழ்வாய் விடுங்கள்//

    ஆடிக்கு மாத சிறப்புக் கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. சரிதான்.என நினைக்கிறன் நீங்களும் என்னைபோலவே சொல்லுங்கம்மா

      Delete
  9. திருமணமான பெண்ணுக்கு, ஒரு வேளை புகுந்த வீட்டு உறவுகள சரியா வாய்க்காம அல்லல்பட்டால், அம்மா வீட்டில், கொஞ்ச நாட்களுக்கு சுதந்தரமா இருக்க இது ஒரு சாக்கு. அதனால, ஆடில புது மணப்பெண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டி போறதில் தப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. அது உங்க காலம் .இப்போ யாரைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்.கூட்டிக்கிட்டுப் போகட்டும் பிரிக்கவேண்டாம்

      Delete
  10. மொட்டு மலரவும் சிட்டுகள் சேரவும்
    கட்டுப் பாட்டினைக் காட்டிய தெல்லாம்
    உற்ற காரணம் உணர்ந்தே கூறினர்
    பற்றிடல் கேடிலை பயனது மிகவே!

    கருத்தினை ரசித்தேன். வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  11. ஆடிக்கு ஏற்றக் கவிதை... பலரோட கஷ்ட்டம்... இந்த விஞ்ஞான காலத்திலும் பல தொந்தரவுகள் குழந்தைக்கு வெயில் காலத்தில் வரத்தானே செய்கிறது...

    ReplyDelete
  12. ஆடிக் கவிதை அருமை! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் சரி!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.சிந்திக்க வேண்டிய வரிகள்

      Delete
  13. Replies
    1. வருகைக்கு நன்றிங்க கருண்.

      Delete
  14. சிந்தித்து செயல்படுங்கள் AAmmmm!!!!...
    best wishes.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  15. நான் சொல்வது தவறா இல்லை உண்மையா?

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more