கணினியைத் திறந்தால்............
(நன்றி கூகிள்)
விடியலைக் கண்டதும்
வேகமாய்த் தேடினேன்
விளக்கைப் போட்டதும்
விசையை அழுத்தினேன்
தனக்குள்ளே சிரித்து
தகவலாய் வந்தது
கணக்குப் பார்க்க
கணினியைத் திறந்தால்
கண்டவர் எண்ணிக்கை
காண்டேன் இருநூறு
கொண்டேன் கவலை
குறைய வேண்டாமென
தமிழ்மணம் சென்றேன்
தளத்தினைப் பார்த்தேன்
அமிழ்தாய் வேண்டும்
அப்போதே கைஅமுக்கி
இதழ்த் திறந்து
இனிய வாக்கிட்டேன்
புனிதமாய் போற்ற
கணினிதான் எனக்கு
இனிமையைத் தருது
இன்னலைமறக்குது
மனதும் மகிழுது
மாலையிலும் தொடருது
தொடந்து வரவே
தினமும் விரும்புது
தூக்கம் என்னை
தவிக்கவும் விடுது
அறியாத நிகழ்ச்சிதான்
ஆனாலும் மகிழ்ச்சிதான்
யதார்த்தமான வரிகள்.. அருமை..
ReplyDeleteதமிழ்மணத்தில் மூன்றாமிடத்தைப் பிடித்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றி.
Deleteஎன்றும் மகிழ்ச்சி தான் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்
Deleteநித்தம் நித்தம் நமக்குள் ஏற்படும் எண்ணங்களை கவிதையாய் வடித்துவிட்டீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉண்மைதான் ஸ்கூல் பையா.(தம்பி)
Deleteஅருமையான வரிகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்....
புனிதமாய் போற்ற
ReplyDeleteகணினிதான் எனக்கு
இனிமையைத் தருது
இன்னலைமறக்குது
>>
அருகில் இருப்பவற்றை ரசிக்க நேரமில்லாத நாம் கணினியில் அமர்ந்து உலகை ரசிக்கிறோம்.
உண்மைதான் .நீங்கள் சொல்லும் அர்த்தம் எனக்கும் புரிகிறது
Delete//கண்டவர் எண்ணிக்கை
ReplyDeleteகாண்டேன் இருநூறு
கொண்டேன் கவலை
குறைய வேண்டாமென//
தீயா வேலை செய்யறீங்க சார்.. கவிதை அருமை.
நன்றிங்க நண்பரே.வேண்டும் நண்பர்கள் இன்னும் நிறைய வேண்டும்
Deleteஎப்படிங்க இப்படி சரளமா, அதுவும் தினமும் ஒரு கவிதைன்னு..... ரூம் போட்டு யோசிச்சாலும் வரமாட்டேங்குதே:))
ReplyDeleteஉங்களோட ஆதரவும் அன்பும் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது
Deleteஅருமையான வரிகள்... தினமும் இப்படித்தான் நடக்குது...
ReplyDeleteஎன்ன செய்ய இப்போதெல்லாம் எண்ணிக்கையும் எண்ணங்களும் கணினியைச் சார்ந்தே இருக்கிறது
Deleteகாலையும் நீயே மாலையும் நீயே என்று கணினியைக் கொண்டாடி ஒரு கவிதை! கவிஞரே! அடிமையாகிப் போய் விடாதீர்கள். அவனியில் நமக்கென்று பல கடமைகள் உண்டு என்பதனை மறந்து விடாதீர்கள்.
ReplyDeleteஆனாலும் இப்போ இதை மறக்க முடியவில்லை என்பதை மறுக்காமல் சொல்ல வேண்டியுள்ளது
Deleteஇனிமையைத் தருது
ReplyDeleteஇன்னலைமறக்குது
மனதும் மகிழுது//
உண்மைதான்.
ஆமாம்.எல்லோரும் மறுக்க முடியாத உண்மை
Deleteகணினியைத் திறந்தால்
ReplyDeleteஇணையத்தை விரிக்கிறேன்
இணையத்தை விரித்தால்
தமிழ்மணம் பார்க்கிறேன் என
தங்கள் பட்டறிவோடு
கணினிநுட்ப வளர்ச்சியையும்
அழகாக வெளிப்படுத்துவதை
என்னால் உணரமுடிகிறதே!
தங்கள் வருகைக் கண்டு மகிழ்ந்தேன் .இன்பத் தமிழ்த் தேனையும் குடித்தேன்
Deleteபுனிதமாய் போற்ற
ReplyDeleteகணினிதான் எனக்கு
இனிமையைத் தருது
இன்னலைமறக்குது
மனதும் மகிழுது
மாலையிலும் தொடருது
மகிழ்ச்சிதான் ..!
தொழில் நுட்ப வளர்ச்சியை நாமும் அனுபவித்து மகிழ முடிந்தாலும், அடிமை ஆகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் மிகவும் அவசியம்.
ReplyDeleteஒவ்வொரு பதிவரின் மனநிலையையும் வார்த்தைகளில் வடித்துவிட்டீர்கள்!