தெய்வங்கள்

தெய்வங்கள்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே-- பாடல் 2

நேத்துநானே சொல்லிபுட்டேன்
நேரத்தோடு வந்து விட்டேன்
காத்திருந்து வாசல்வரைக்
கண்டவுடன் துள்ளி ஓடுறாயே

ஊர்ச் சனமும் வந்திடுச்சு
உறவுகளும் இங்கே கூடிடிச்சு
காய்ப் பழங்கள் கனிகளும்
கண்ணே உன்னைத் தேடுதே

அத்தர் செண்டும் போட்டு
அஜந்தாப் பவுடரும் பூசி
அத்த மகளுணைக் காண
அழகாய் வந்தேன் பாரேன்

முன்னே அருகில் வந்து
முறையாகச் சிரித்து விட்டு
பின்னால் திரும்பி என்னை
பெண்மையால் வீழ்த்த வாடி

கூட்டத்துல நீ ஒளிஞ்சி
நோட்டமிடும் உன் நிழலை
பாத்துப் பிட்டேன் பேரழகி
பக்கத்துல எப்போ வாரே

Comments

  1. ரசிக்க வைக்கும் விளையாட்டு... வாழ்த்துக்கள் ஐயா...

    ™+1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தனபாலன் சார்.எல்லாமே தமாசுதான்

      Delete
  2. நிழல்லேயே பேரழகின்னா,நேர்லே பார்க்க எனக்கும் ஆசைவருதே !

    ReplyDelete
    Replies
    1. கனவுகாணுங்கள் அப்புறமே கண்டுபிடியுங்கள் ஆசையும் தீரும் ஆனந்தமும் கூடும்

      Delete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்.

      Delete
  4. அத்தை மகளின் வெட்கம் நல்லாத்தானிருக்கு..!

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா சந்தோசம்தான் அடுத்தும் வரும் ஆனந்தம் தரும்

      Delete
  5. அழகாயொரு கிராமியப்பாடல். அத்தர் செண்டும் அஜந்தா பவுடரும் போட்டுமா அத்தைமகள் அருகில் வரவில்லை... ரசிக்கவைத்த பாடல். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அந்த நாட்களில் கிடைக்கும் அழகுபூச்சு அதுதானே.பாராட்டுக்கு நன்றிங்கம்மா

      Delete
  6. கடந்த கால நினைவுகளோ கலக்கல் :) வாழ்த்துக்கள் ஐயா
    மனம் இனிக்கும் கவிதை வரிகள் மேலும் தொடரட்டும் .
    தமிழ் மணம் 3 :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அம்பாள் அடிகளே

      Delete
  7. அழவே உருவாய் கிராமியப் பாடலை படைத்தமைக்கு நன்றி அய்யா. அத்தர் செண்ட்டும், அஜந்தா பவுடரும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க

      Delete
  8. ஆஹா! இங்கேயும் நிழலை மட்டுமே பார்த்தீர்களா?
    போன பகுதியில் சொன்னதுபோல மஞ்ச தாலியுடன் போய் நில்லுங்கள், நிச்சயம் கையில் அகப்படுவாள்!

    மிகவும் எளிமையான வரிகளில் உங்கள் உள்ளக் கிடக்கையை சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more