தெய்வங்கள்

தெய்வங்கள்

மீண்டும் சென்னைக்கே வந்துட்டேன்

அன்பான வலைத்தள நண்பர்களுக்கு
அடியேனின் பணிவான வணக்கங்கள்
மூன்று வருடத்திற்கு மேலாக- பணிக்கு
முடியாமல் தினமும் பயணமானேன்

நீண்ட காலம் சென்றபின்னும்
நேரம் கடந்து அங்கிருந்தேன்
பகையான நட்புக்களால் தினமும்
பரிதவித்துக் கண் கலங்கினேன்

தாண்ட முடியா சிரமங்களும்-மனதில்
தன்னிடமே கொண்டு வாழ்ந்தேன்
தகையோரின் பெரியோரின் ஆசியாலே
துயரமெல்லாம் தாங்கி நின்றேன்

தயவாக வேண்டியே விண்ணப்பித்து
தடம்மாறி மீண்டும் வந்திட்டேன்
உயர்வான எண்ணத்துடன் -இங்கே
ஊழியத்தை நன்றே செய்திடவே

பகைமாறி பாசமும் நேசமும்
பண்பாடும் நாகரீகம் போற்றியே
நெடுநாளாய் நானும் காத்திருந்து -மகிழ்ச்சியாய்
மீண்டும் சென்னைக்கே வந்திட்டேன்

Comments

  1. உயர்வான எண்ணத்துடன் -இங்கே
    ஊழியத்தை நன்றே செய்திடவே

    இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கம்மா

    ReplyDelete
  3. பகைமாறி பாசமும் நேசமும்
    பண்பாடும் நாகரீகம் போற்றியே - nice.,

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பாசமும் நேசமும் இருந்தால் பண்பாடு தானே வரும்

      Delete
  4. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே நீங்கள் சொன்னபடி எல்லாமே சிறப்பாய் அமையும்

      Delete
  5. நேசம் உள்ள இடத்திற்கே வந்து விட்டீர்கள். இனி மனதில் மகிழ்ச்சியே நிரம்பட்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.நிறைய நண்பர்கள் உள்ள இடம் சென்னைதானே

      Delete
  6. இதற்கு முன்பும் சென்னையில் தானே சார் இருந்தீங்க

    ReplyDelete
    Replies
    1. பணி நிமித்தமாக ராணிபேட்டைக்கு மாறி மூன்றரை வருடத்திற்குப் பின் இப்போதுதான் சென்னைக்கு மீண்டும் மாறுதலாகி வந்துவிட்டேன்

      Delete
  7. வாழ்த்துக்கள் ஐயா மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும் .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.இப்போது நான் தினசரி ரயில் பயணம் செய்ய வேண்டியதில்லை அதனால் மகிழ்ச்சியே

      Delete
  8. உங்களது எழுத்து நடை அருமை தோழர்.எண்ணங்களை வெளிப்படுத்திவதில் உங்களது எழுத்து அருமை தொடர்ந்து நான் கவனித்து வந்த காரணத்தால் உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
    உங்களுக்கு இருக்கும் ஆற்றலை சமுதாய நலன் சார்ந்து செயலாக்கினால் நாடு நாளை உங்களை வணங்கும் தோழரே!
    இளைஞர்கள் கொலை காரர்களாகவும் கொள்ளைக்காரனகவும் பாலியல் குற்றம் செய்பவனாகவும் திருடர்களாகவும் மாற்றுவதே காட்சி ஊடகங்கள் தான் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல கடந்த சில மதங்கள் முன்னர் கொள்ளையில் ஈடுபட்ட பலரது வயது 15 முதல் 20 க்குள் தான் இருக்கின்றது. கொள்ளைக்காக அவர்கள் கூறும் காரணம் தோழியுடன் ஊர் சுற்றவும் டிஸ்கோதே போன்ற கிளப்புகளுக்கும் பணம் கட்டவே என்பதாகும் அதில் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவன். இளைய சமுதாயத்தை சீரழிக்கும் காட்சி ஊடகங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் பிள்ளைகளுக்கு அவசியம் தேவை தோழரே. ஒரு இளைஞனாவது காப்பாற்றப் படுவான். இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பினும் எதிர்கால இளைஞர்களின் நலன் கருதி இந்திய நாட்டின் மனித வளம் காக்க சீரிய சமுதாயப் பனி செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    நட்புடன் பாலசுப்ரமணியன்

    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.எனது படைப்புகளை தொடர்ந்து படிப்பதாகவும்" உங்களுக்கு இருக்கும் ஆற்றலை சமுதாய நலன் சார்ந்து செயலாக்கினால் நாடு நாளை உங்களை வணங்கும் தோழரே!" என்று கூறியமைக்கு நன்றி.நிச்சயம் இந்த பிறப்பில் நம்மால் முடிந்த தெரிந்தவைகளை கூறினால் நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் உபயோகமாய் இருக்குமென நம்புகிறேன்.தொடர்ந்து படியுங்கள்.இன்னும் என்னால் முடிந்தவரை சமூக கருத்துக்களை சொல்லுவேன்.எனக்கு சமூக சேவையிலும் விருப்பமே எனக்கு சந்தர்ப்பம், நேரம் கிடைத்தால் செய்வேன்

      Delete
  9. உயர்வான எண்ணத்துடன் -இங்கே
    ஊழியத்தை நன்றே செய்திடவே//

    உங்கள் விருப்பம் போல பணி சென்னையில் கிடைத்தது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.ராணிபேட்டையில் இருந்து சென்னைக்கு மாறுதலாகி வந்துவிட்டேன்.வாழ்த்துக்கு நன்றி

      Delete
  10. தண்ணீர் இல்லாத காடு; மின்சாரம் இல்லாத வீடு; போக்குவரத்து சாலைகள் இல்லாத ரோடு....சென்னைக்கு வந்து விட்டீர்கள்!...சரி, உங்கள் தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்? ஏதோ, எங்களைப் போலவே நீங்களும் அனுபவியுங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா நான் பணி நிமித்தமாகவே மாறுதலாகி இருந்தேன்.இப்போதும் சென்னையில்தான் வசிக்கிறேன் நானும் இங்கு மற்றவரைப் போலவே இருந்துவருகிறேன்.நீங்கள் சொல்வதுபோல் சில அசௌகரியங்கள் இருந்தாலும் வாழத்தானே வேண்டும்.இங்கும் ஏறக்குறைய இரண்டு கோடிபேர் வசிக்கிறார்கள் என்பதும் உண்மையே.

      Delete
  11. தங்கள் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி நல்லவைகள் யாவும் தொரடட்டும்

    ReplyDelete
    Replies
    1. பணிமாற்றம் கிடைத்ததில் மகிழ்ச்சியே

      Delete
  12. எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  13. உங்கள் விருப்பம்போல பணி சிறப்புற வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. உங்களின் எழுத்துக்களில் இதைவிட வேறென்ன மகிழ்வு உங்களுக்கு இருக்கப்போகிறதெனத் தெரிகிறது. நல்லதே...

    மனம்போல் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா,பணிமாற்றம் என்பது தவிர்க்க முடியாதது.இனி இன்னும் எழுத நேரம் கிடக்கலாம்

      Delete
  15. உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றிங்க அய்யா

      Delete
  16. நல்லதே நடக்கட்டும்!நல்வரவு!
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே நல்லது

      Delete
  17. சென்னை உங்கள் வருகையால் சிறப்படையட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பணியிடம்தான் மாறியுள்ளது நான் இப்போதும் சென்னைவாசிதான் அதுவும் தி.நகர் .நன்றிங்க நண்பரே

      Delete
  18. மிக்க சந்தோஷம்
    இனி தங்க்கள் அருமையான பதிவுகளை
    அதிகம் எதிர்பார்க்கலாம்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எழுத ஊக்கமளிக்கும் நல் இதயம் உள்ளவர் உங்களைப்போல்
      இருக்க எனக்கு மகிழ்ச்சியே இன்னும் எழுதுவேன் உங்கள் ஆசியுடன்

      Delete
  19. தினமும் பயணிக்கும் சுமை இனி இல்லை. நிறைய நேரம் கிடைக்கும். நிறைய எழுதுங்கள். எல்லாம் இனிதாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். இனி நேரம் கிடைக்கும்,நீங்க வந்ததுக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more