தாய்நாடு அழைக்கின்றது..........
அவசர உலகமோ அதற்குள்ளே
அனைத்து உறவையும் கெடுக்கிறதே
மிகச்சரியாகப் புரிகிறதே உண்மை
மீண்டும் நம்மூர் அழைக்கிறதே
எல்லா உறவும் மறக்கிறதே
ஏற்றத் தாழ்வும் வருகிறதே
என்பதை எண்ணியே மனமே
எரிமலையாய் இன்று வெடிக்கிறதே
நம்மூரைப் பார்க்க துடிக்கிறதே
நல்லதும் கெட்டதும் காண்பதற்கு
இல்லமும் தேடி அலைகிறதே
இன்பமாய் இதுவே இருக்கிறதே
காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே
கனவுகள் எல்லாம் நிஜமானதே
ஊர்விட்டு மறந்து போன
உறவினை மீண்டும் நினைக்கிறதே
இத்தனை நாள் மறந்திருந்த
இன்பம் மீண்டும் வருகிறதே
இங்கேயே நான் தங்கிடவே
இன்று மனம் துடிக்கிறதே
அப்பாவின் அன்பு மகிழ்கிறதே
அம்மாவின் உணவும் ருசிக்கிறதே
இப்போதும் உறவுகளை எண்ணி
இனித் திரும்ப தருகின்றதே
இனிய நினைவுகளின் ஏக்கம் புரிகிறது ஐயா...
ReplyDeleteபுரிய வேண்டிய மக்களுக்குப் புரிந்தால் சரிதான் நண்பரே
Deleteசொந்த ஊருக்கு போற சுகம் இருக்கே அது தாய் மடிபோல சுகம் - கவிதை இனிக்கிறது...!
ReplyDeleteஎவ்வளவு நாள் தங்கினாலும் மறக்க முடியாத சுகமாய் இருக்கும்
Delete..
ReplyDeleteஅப்பாவின் அன்பு மகிழ்கிறதே
அம்மாவின் உணவும் ருசிக்கிறதே
இப்போதும் உறவுகளை எண்ணி
இனித் திரும்ப தருகின்றதே
..
உண்மைதான் உறவின் நினைவுகள் அருமை...
உறவின் பிரிவை உணரும் தருணம் .பிரிவை நினைத்து புலம்பும் நேரம்
Deleteநான் எழுதணும்னு நினைச்சதே சங்கவி எழுதிட்டார். மற்ற வரிகளும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லோர் உணர்வும் எழுத்திலும் அடங்காதது .தொடர்ந்து வாங்க
Deleteஊர்விட்டு மறந்து போன
ReplyDeleteஉறவினை மீண்டும் நினைக்கிறதே
// உண்மை...
ஆமாம்.புறப்படும்போதே நினைவு பிறந்த இடத்திற்கு வந்துவிடும்.ஆனந்தம் ஆரம்பமாகிவிடும்
Deleteஅனைவருக்கும் தங்கள் பிறப்பிடத்தைத்
ReplyDeleteதொடுகையில் ஏற்படும் உணர்வுதான் ஆயினும்
எத்தனைபேரால் இத்தனை அருமையாகச் சொல்லமுடியும்
(தலைப்பு தாய் மண் அல்லது தாய் பூமி என இருந்திருக்கலாமோ)
எண்ணம் தான் இங்கு அழைக்கிறது .உள்ளம் செல்லத் துடிக்கிறது.உணர்வு பறந்து வந்து விடுகிறது
Deletetha.ma 4
ReplyDeleteஉங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க சார்.
Deleteசொந்த ஊர் பாசம் மறக்க கூடியதா? அருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க .எஸ்.சுரேஷ்
Deleteமனமதில் அனைவருக்கும் நிறைந்திருக்கும் ஏக்கமதனை
ReplyDeleteமிகமிக அழகாகத் தந்தீர்கள்! அருமையான நினைவுகள்!
வாழ்த்துக்கள் சகோ!
தாயவள் மடியும் தவழ்ந்த மண்ணும்
நோயதைத் துரத்தி நிம்மதி காக்கும்
சேயெம் வாழ்வில் சேர்ந்திடும் ஆவல்
பாயினில் விழுமுன் பார்த்திடக் கூடுமோ?...
ஆஹா...உங்களின் ஏக்கம் புரிகிறது. நீங்க தாய்நாடு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்குமென நினைக்கிறேன்
Deleteஇத்தனை நாள் மறந்திருந்த
ReplyDeleteஇன்பம் மீண்டும் வருகிறதே
இங்கேயே நான் தங்கிடவே
இன்று மனம் துடிக்கிறதே
இனிய நினைவுகள்..!
மறக்க கூடாத நினைவுகள்.நிகழ்வுகள்
Deleteஉண்மை. தாயின் மடியைப் போல் தாய் மண்ணும் சுகம் தான்.
ReplyDeleteசொல்ல இயலாதது.சோகமான அனுபவம்ஆனால் தாய்மண்ணைப் பற்றி நினைத்தாலே இன்பமாய் இருக்கும்.தொடர்ந்து வாங்க
Deleteதாயும், தாய் மண்ணும் என்றுமே சுகம்தான்
ReplyDeleteஉண்மைதான்.சுகமாகவே இருக்கும்
Delete//காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே
ReplyDeleteகனவுகள் எல்லாம் நிஜமானதே//
ஏக்கம் கலந்த வரிகள் மிக அருமை!
நிச்சயம் வெளிநாட்டில் வசிப்போருக்கு தாய்நாடு செல்லும்போது இம்மாதிரியான உணர்விருக்கும்.
Deleteஎங்களுக்குளும் உறைந்து கிடக்கும் உணர்வு இது .
ReplyDeleteவேதனைக்குரியதே .நன்றி சகோதரரே பகிர்வுக்கு .
ஆம்.உங்களுக்கும் ஏக்கமும் இருக்கும் எதிர்பார்ப்பும் இருக்கும்.வருகைக்கு நன்றிங்க
Deleteவணக்கம் அன்பரே...
ReplyDeleteகண்ணதாசன் என்ற பெயருக்கு கவிதை சுமார் தான்..
ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
தொடர்ந்து எல்லா கவிதைகளையும் படித்துப் பாருங்கள் .நான் கவிஞர் கண்ணதாசன் அல்ல.கவிதை எழுத முயற்சிக்கும் கண்ணதாசன்
Deleteநன்றி...
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க நண்பரே
ReplyDelete