தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆழாக்கு சாம்பல் மட்டுமே....

பணத்தை சேர்க்கும் பயனையும்
பசியில் சேர்த்துப் பாருங்கள்
பகிர்ந்தே உணவைப் போடுங்கள்
பயனோர் மகிழ்வய் காணுங்கள்

இந்தப் பிறவியில் வாழ்வதையே
இனிமை யாக்கி  உணருங்கள்
இறுதி நாட்களில் மகிழுங்கள்
இன்பம் மனதில் சேருங்கள்

மகிழ்வாய் வாழப் பழகுங்கள்
மனதை போற்றி உணருங்கள்
மக்கள் துயரைத் போக்கியே
மானிடம் புகழ வாழுங்கள்

இனிமேல் புதிதாய் விதிசெய்வீர்
இனிமை பணத்தில் இல்லாமல்
தலைமேல் பணத்தை சுமக்காமல்
தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே

ஆழாக்கு சாம்பல் மட்டுமே
அறிந்தோர் கையில் கிடைக்குமே
அதற்காய் பணமேன் சேர்க்கணும்
அதையும் தவிர்த்தும் சாகனும்

Comments

 1. ஆழாக்கு சாம்பல் மட்டுமே
  அறிந்தோர் கையில் கிடைக்குமே
  அதற்காய் பணமேன் சேர்க்கணும்
  அதையும் தவிர்த்தும் சாகனும்//

  சரியாகச் சொன்னீர்கள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பணத்துக்காக எத்தனையோ நல்ல உள்ளங்களை நோகடித்தும் சாகடித்தும் சேர்க்கும் பணத்தால் யாருக்கு என்ன நன்மை என்பதை சாடிச் சொன்னக் கவிதை.
   தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

   Delete
 2. Replies
  1. முதலில் வாக்கிட்டமைக்கு நன்றிங்க சார்

   Delete
 3. // ஆழாக்கு சாம்பல் மட்டுமே
  அறிந்தோர் கையில் கிடைக்குமே... //

  சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அவன்கூட பார்க்க முடியாது.வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

   Delete
 4. பணத்தை சேர்க்கும் பயனையும்
  பசியில் சேர்த்துப் பாருங்கள்
  பகிர்ந்தே உணவைப் போடுங்கள்
  பயனோர் மகிழ்வய் காணுங்கள்//

  தானத்தில் சிறந்தது அன்னதானம். பசித்து இருப்போருக்கு அன்னம் அளித்தால் அவர்கள் அகமும் புறமும் மலரும் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சரியாய் புரிந்து கொண்டீர்கள்.நன்றிங்கம்மா

   Delete
 5. பணம் பிரதானமல்ல! மனமே பிரதானம் எனும் அருமையான கவிதை! வரிகள் சிறப்பு சேர்த்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மனதைப் போற்றுவோம் பணத்தை செலவு செய்வோம்.வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

   Delete
 6. முடிவு வரிகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. சரியாய் இருக்கிறதா? தங்களின் வருகைக்கு நன்றிங்க அய்யா

   Delete
 7. அடங்கிடும் சாம்பல் அழியுமே வீணே
  அடங்கா மனமேன் அலைந்து!

  சிறந்த சிந்தனை! அழகிய வரிகள்!
  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.5

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் கவிதை வரிகளுக்கும் நன்றிங்க சகோ

   Delete
 8. ''..ஆழாக்கு சாம்பல் மட்டுமே
  அறிந்தோர் கையில் கிடைக்குமே...''
  அதற்குள் தான் எத்தனை பாடு!.
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. யாருக்குப் புரிகிறது.அதையேன் சேர்க்கணும்

   Delete
 9. நல்ல யோசனைகளை நயமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. இது யோசனை அல்ல.மனித வாழ்வின் உண்மை

   Delete
 10. அடுத்தவன் வயிற்றில் அடித்து சாப்பிடுவது அரசியல்வியாதிகளும், பைனான்ஸ் கம்பெனிக்களும்தான் ஆனால் அவர்கள் மரணம் நீங்கள் சொன்னது போல ஆழாக்கு சாம்பல்தான் - அருமையாக கவிதை வடித்து விட்டீர்கள்...!

  ReplyDelete
 11. சிலநாட்கள் காணவில்லையே .இந்தப் பதிவை நீங்களும் படிக்கவேண்டுமென நினைத்தேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. ஆழாக்கு சாம்பல் மட்டுமே....இதற்குள்தான் எத்தனை ஆட்டம்.நல்லதைச் செய்து நல்லபடி வாழ்வோம்.நல்லதொரு கவிதை !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இதைப் புரிந்தால் ஆசையும் பணமும் மனதில் அண்டாது

   Delete
 13. சிறப்பான கவிதை.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

   Delete
 14. நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete

Post a comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more