தெய்வங்கள்

தெய்வங்கள்

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல.........

வாகனம் ஓட்டிச் செல்லும்போது
வருகிறக் கோபத்தில் மறுந்துடாதீர்
வண்டியை வேகமாய் ஒட்டாதீர்
வழியில்  தவறாய் செலுத்திடாதீர்

தலையில் கவசம் அணிவதனால்
அழகும் கெட்டுப் போகாதே
தடுமாறிக் கீழே விழுந்தாலும்
தலையும் எங்கும் மோதாதே

கண்டவர் அருகே வந்தாலும்
கண்களை வேறங்கும் திருப்பாதீர்
கைபேசி அழைப்பையும் தவிர்த்திடுவீர்
கவனமாய் வாகனம் செலுத்திடுவீர்

நீண்ட தூரம் செல்லுகையில்
நிதானம் எப்போதும் இழக்காதீர்
இருக்கைப் பட்டையை அணிந்தே
இயல்பாய் வாகனம் செலுத்திடுவீர்

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல
வாழ்க்கை உண்டு மறந்துடாதீர்
தாகம் தண்ணீர் இடையிடையே
தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்




Comments

  1. வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல
    வாழ்க்கை உண்டு மறந்துடாதீர்
    >>
    மறக்கவும் கூடாது

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்கும் பொருத்தமாய் இருக்கிறதால் எப்போதும் இதையே கடைபிடிப்போம்.வருகைக்கு நன்றிங்க சகோ

      Delete
  2. நிதானம் பிரதானம்...

    நன்றாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. # தண்ணீர் இடையிடையே
    தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்#
    டாஸ்மாக் தண்ணியையும் தவிர்க்கணும் இல்லையா கவியாழி ?

    ReplyDelete
    Replies
    1. அவசியமானால் உங்கள் விருப்பம் போலப் படியுங்கள்

      Delete
  5. தாகத்துக்கு அருந்தம் தண்ணி போதுமானது .போதை தரும்
    தண்ணியைப் புறக்கணித்தாலே விபத்துக்கள் குறைந்து விடும் .
    சிறப்பான தலைப்பு .வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் போதையில் வாகனம் ஓட்டக்கூடாது.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  6. வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல
    வாழ்க்கை உண்டு மறந்துடாதீர்
    தாகம் தண்ணீர் இடையிடையே
    தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்/

    மித வேகமே விவேகம்
    வாழ்வே பிரதானம் என விளக்கிப்போகும்
    பதிவு வழக்கம்போல் அருமை
    தொடர வாழ்த்துக்கள்



    /

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  7. எளிமையான நடையில் அழகான கவிதை

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போதுமே எளிமையானவன் எளிமையைத் தொடருபவன்.தங்கள் வருகைக்கு நன்றிங்க தொடந்து வாங்க

      Delete
  8. சூழ்நிலைக்கு தகுந்த நல்லதொரு கவிதை

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாள் கழித்து வந்தாலும் உங்கள் வருகைக்கு நன்றிங்க

      Delete
  9. இலகு தமிழில் இதயம் தொட்ட கவிதை
    நிகழ்காலத்தின் அவசிய செயற்பாடுகள்


    அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க .எனக்கு இலகுத் தமிழில் எல்லோருக்கும் புரியும்படி எழுதப் பிடிக்கும்.

      Delete

  10. வணக்கம்

    நல்ல கருத்தை நவின்ற கவியாழி
    வல்ல பதிவரென வாழ்த்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கத் தமிழ்த் தலைவரே

      Delete
  11. தாக சாந்தி அடைந்து வாகனம் ஓட்டாதீர்கள்.

    வேகம் மகிழ்சி ஆனால் மரணம் நொடியில்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க நண்பரே. வேகம் விரைவில் மரணத்தைத் தழுவும்

      Delete
  12. அவசியமான அறிவுரை.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே பொதுவானது.வருகைக்கு நன்றி

      Delete
  13. தலையில் கவசம் அணிவதனால்
    அழகும் கெட்டுப் போகாதே
    தடுமாறிக் கீழே விழுந்தாலும்
    தலையும் எங்கும் மோதாதே

    உண்மை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு நல்வரவாகுக.வருகைக்கு நன்றிங்கய்யா

      Delete
  14. வேகம் விவேகமல்ல என்று நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். கைபேசியில் பேசிக் கொண்டே போகிறவர்களை என்ன செய்வது? யார் சொன்னாலும், எத்தனைமுறை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்களே!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more