சுற்றமும் நட்பும் எங்கே?
சுகம்வரும் செல்வமும் சேரும்
சுற்றமும் நட்பும் சூழ்ந்துவரும்
அகம் மகிழ அன்புடன் தேடிவரும்
அனைத்தும் மகிழ்ந்தே பணம்தரும்
வினைசேரும் விதியும் மாறும்
வீழ்ச்சி கண்டபின்னே தேடும்
விடியலே கேள்வி கேட்கும்
விரும்பிய எல்லாமே போகும்
சுமையோடு கடன் சேர்ந்தால்
சுற்றம் எங்கே நட்பு எங்கே
சோதனையை மறப்பதெங்கே
சொந்தமும் சென்ற இடமெங்கே
நிம்மதி எங்கே நீதிஎங்கே
நித்தமும் மகிழ்ந்த நண்பநெங்கே
பணம் எங்கே பாசம் எங்கே
பகைவனைத் தவிர தெரிந்தவனங்கே
அற்பமாய் வாழும் வாழ்க்கையை
அன்றே மறந்து திருந்திடு
ஆணவம் அழியும் நேரத்தில்
அதிசயம் நடக்கும் புரிந்திடு
உலகம் ஒருநாள் மாறும்
உள்ளம் மகிழ்ச்சியில் சேரும்
கஷ்டமும் தீர்ந்தே இனிமேல்
கவலை எனக்கும் தீரும்
நேற்றைய வாழ்வும் உணமையல்ல
நடந்ததும் முடிந்ததும் வாழ்க்கையல்ல
நேர்மை மட்டுமே நிரந்தரமாய்
நித்தமும் என்னையே மாற்றிடுமே
நானும் ஜெயிப்பேன் வாழ்வேன்
நன்றிமறாவா நண்பனாய் இருப்பேன்
நாவில் நல்லதை சொல்வேன்
நாடும் போற்றிட வாழ்வேன்
நேற்றைய வாழ்வும் உணமையல்ல
ReplyDeleteநடந்ததும் முடிந்ததும் வாழ்க்கையல்ல
நேர்மை மட்டுமே நிரந்தரமாய்
நித்தமும் என்னையே மாற்றிடுமே
மாற்றம் ஒன்றே மாறாதது ..!
ஆம் நேர்மையான நியாயமான வாழ்கையை யாராலும் மாற்ற முடியாது
Deleteநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு காலம் வரும் காத்திருந்து பாரு ராஜா பாட்டு நியாபகத்துக்கு வந்து போகிறது...!
ReplyDeleteஉண்மைதான்.எனக்கும் தோற்றியது இந்தப் பாடலின் வரிகள்தான்.நீங்கள் நேற்று விடுமுறையா? வலைக்கு வரவில்லையே?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசந்தேகம்? இருந்தால் தனியே கேட்கவும் .
DeleteThis comment has been removed by a blog administrator.
Delete''..அற்பமாய் வாழும் வாழ்க்கையை
ReplyDeleteஅன்றே மறந்து திருந்திடு..''
ஆம்! அறிவுரை வரிகள் .
மிக நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நீர்க் குமிழி நிலை வாழ்விது
ReplyDeleteபோர்க் குணமேன் புகல்!
அருமையான சிந்தனை வரிகள் சகோ!
வாழ்த்துக்கள்!
த ம.4
வாழ்த்துக்கு நன்றி கவிதாயினி
Delete// சுமையோடு கடன் சேர்ந்தால்
ReplyDeleteசுற்றம் எங்கே நட்பு எங்கே
//
நீயாயமான ,உண்மையான வரிகள்
நன்றிங்க .தொடர்ந்து வாங்க
Deleteவாழ்வாங்கு வாழும் வழி!
ReplyDeleteஆம்.தெரிந்த மொழி
Deleteநேர்மை மட்டுமே நிரந்தரமாய்//
ReplyDeleteநேர்மையான வாழ்வு மட்டுமே தரும் நிம்மதி.
அழகிய கவிதை. வாழ்த்துக்கள்.
நம்பிக்கை தரும் வரிகள்.
ReplyDeleteநம்மாளுகளுக்கு நல் வழிகாட்டல்.
நன்றிங்கயா.தொடர்ந்து வாங்க
Deleteவிற்பனைப் பொருளாய் வாழ்வும்
ReplyDeleteவிதியினை ஏலம் வைக்கும்
கற்பனைக் கடல் போல் ஊரில்
நற்றிணை என்றும் நலிந்தே போகும் ...!
இயல்பான வார்த்தைகளில் இயங்கியலை சொன்னவிதம் அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வாழ்த்துக்கு நன்றிங்க அய்யா
Deleteநாடும் போற்றிட வாழ்வேன்
ReplyDeleteஆம் நல்லோரும் போற்றிட வாழுங்கள்
Deleteநன்றிங்க சார்
ReplyDelete