தெய்வங்கள்

தெய்வங்கள்

நினைத்தேன் சொன்னேன்....

ஒதுங்கி வாழ்வது தவறு
ஒற்றுமை காப்பதே சிறப்பு
ஒன்றி ணைந்து  சேர்ந்தால்
ஒளிமயமாகு முன் வாழ்வு
                   *****
சினம் கொள்ள மறந்தால்
சிரிப்பை துணைக்கு அழைத்தால்
செழிப்பை முகத்தில் காணலாம்
சிறப்பாய் உடலைப் பேணலாம்
                     *****
வாழ்க்கை என்றப் பாதை
வட்டமானது வண்ணம் மிகுந்தது
எளிமையும் மனதில் ஏழ்மையானது
எப்படியும் வாழலாம் வாழ்ந்திடு
                     *****
உள்ளம் சொல்வதைக் கேட்டு
உரியவர் மனதை அறிந்து
செய்யும் செயலை துணிந்து
செய்திடும் காரியம் ஜெயமே
                      ******
Comments

 1. நினைத்த எண்ணங்கள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க DD

   Delete
 2. தன்னம்பிக்கை தருகிர வரிகள்,நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க விமலன்.தொடர்ந்து வாங்க

   Delete
 3. நினைத்ததை சொன்னது நம்பிக்கையை விதைத்தது

  ReplyDelete
 4. சரிங்க கவியாழி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க புலவரைய்யா

   Delete
 5. ஒற்றுமை காப்பதே சிறப்பு
  ஒன்றி ணைந்து சேர்ந்தால்
  ஒளிமயமாகு முன் வாழ்வு

  சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

   Delete
 6. உள்ளத்து நல் எண்ணங்கள் அனைத்தும் உயர்வான எண்ணங்கள்.... அழகான கவிதை வரிகள்.... வாழ்த்துகள் ஐயா !!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க முகில்.தொடர்ந்து வாங்க

   Delete
 7. நன்நாலு அடிகளில்
  நல்லன எல்லாம் மின்னிட
  பயன்தரும் பதிவிது.

  ReplyDelete
  Replies
  1. அய்யாவின் வருகை எனக்கு ஆனந்தமே

   Delete
 8. நினைத்ததை சொல்லி விட்டீர்கள். சிலசமயம் சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை என்று ஆகிவிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் உங்கள் தளத்தில் சொல்லியது எல்லோருக்குமே புரிந்து எழுச்சியாய் நிச்சயம் மாறும்.எல்லோருமே மறந்த விஷயத்தை புதுப்பிக்கும் தருணம் வந்துவிட்டது

   Delete
 9. Replies
  1. நன்றிங்க .தொடர்ந்து வாங்க

   Delete
 10. நாலுமே நல்ல வாழ்க்கை டிப்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. பயனிருந்தால் சரிதான்.வருகைக்கு நன்றி

   Delete
 11. எண்ணங்களும், கவிதையும் அருமை..

  ReplyDelete
 12. "ஒற்றுமை காப்பதே சிறப்பு." இந்த எண்ணம் இருந்தால் நன்று.

  அழகிய கவியாக தந்துவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க மாதேவி.தொடர்ந்து ஆதரவு தாங்க

   Delete
 13. ஒதுங்கி வாழ்வதால் ஒற்றுமை நலியாது
  பதுங்கி வாழ்தலே பகையும் பாவமானது...

  உங்கள் கவிகள் அருமைதான் சகோ!
  ஆனாலும் என்பார்வை சற்று வித்தியாசமானது.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

  ReplyDelete

Post a comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more