Friday, 2 August 2013

நல்லவங்க சேரும் கூட்டம்.....01.09.2013

வில்லு வண்டி பூட்டிகிட்டு
வீதிவழிப் போற மச்சான்
சொல்லுறத கேளுங்களேன்
சித்த நேரம் நில்லுங்களேன்

நாலுஊரு தாண்டி நானும்
நல்ல சேதி கேட்கப்போறேன்
நின்னுகிறேன்  சொல்லுபுள்ள
நேரம் பார்த்துப் போகணுமே

பல்லு இல்லா கிழவனுமே
பார்த்து என்னை சிரிக்கிறாங்க
பத்திரமா போயி சீக்கிரம்
பார்த்தசேதி சொல்லு மச்சான்

மத்த ஊருபோல இல்ல
மாமன் பெத்த செல்லக்கிளி
சத்தியமா நானும் வந்து
சங்கதிய சொல்லப் போறேன்

நம்ம தமிழ் நாட்டுலத்தான்
நடக்கப் போற கூட்டத்துக்கு
நாலுஊருத் தள்ளி நீயும்
நாலுசேதி கேட்டுவாயேன்

உள்ளதையே சொல்லப் போனால்
ஊருக்குப் போறவேலை
 நல்லவங்க சேரும் கூட்டம்
சென்னையிலே நடக்குதடி

சீக்கிரமா போயிவந்து
சீருகொண்டு வாங்க மச்சான்
சேலையோட தாலியோட
சீர்திருத்த மணம் பண்ணிக்கலாம்
38 comments:

 1. ஹா ஹா ஹா ஹா கவிதையாகவே அழைப்பு வச்சிட்டீங்களா ? அருமை அருமை...!

  ReplyDelete
  Replies
  1. சிரிப்புக்கும் சிறப்புக்கும் நன்றிங்க மனோ.

   Delete


 2. நல்லவங்க சேரும் கூட்டம்.....01.09.2013

  வாழ்த்துகள்..!

  ReplyDelete
 3. நான் இம்புட்டு நல்லவன்னு இதுவரைக்கும் எனக்கே தெரியாமே போச்சே !நேர்லே வந்து மீதியை தெரிஞ்சுக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் பற்றி தெரிஞ்சுக்க உங்க நண்பர்களோட வாங்க

   Delete
 4. அப்போ வராதவங்கலாம் கெட்டவங்கன்னு சொல்ல வர்றீங்க?! நாங்களும் கொளுத்தி போடுவோமில்ல!!

  ReplyDelete
  Replies
  1. அதனால தவறாம வந்துடுங்க.இன்னும் சில புதுப் பதிவர்களயும் அழைத்துவாங்க

   Delete
 5. இதுக்கே கூட்டம் கூடனுமுள்ள... அற்புதம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தம்பி.நம்மால முடிஞ்சத செய்யுறேன்

   Delete
 6. நீங்க சினிமாவுக்கு பாட்டு எழுதலாங்க. நல்லா சந்தத்தோட வரிகள் வந்து விழுது. படிக்கறப்பவே மனசுக்குள்ள ஒரு ராகமும் சேந்துக்கிட்டு ஒரு ஜதி பாடல் பாடுன எக்ஸ்பீரியன்ஸ்:))

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு வந்தா இலவசமாகவே எழுதித் தருவேன் .பாட்டெழுத எனக்கும் ஆசைதான்

   Delete
 7. கிராமத்து மணம் கவிதையில் கமழுது சார் ...

  ReplyDelete
  Replies
  1. அப்படிங்களா நன்றிங்க தம்பி

   Delete
  2. அப்படியா
   நன்றிங்கதம்பி

   Delete
 8. சீருகொண்டு வாங்க மச்சான்
  சேலையோட தாலியோட
  சீர்திருத்த மணம் பண்ணிக்கலாம்//

  இந்த சீர் என்பது வரதட்சணையா சார்?

  ReplyDelete
  Replies
  1. உண்மையில சீர் திருத்த திருமணம்தான். மாப்பிள்ளைய சீர் ( வரதட்சனைதான்)கொண்டு வரச் சொல்லறாரே,
   கவியாழின்னா சும்மாவா?

   Delete
  2. சீர் என்பது.வெற்றிலை,பாக்கு பழங்கள்,தேங்காய் ,பூக்கள் ,துணிகள் ,இனிப்புகள் என்பதாய் அர்த்தம்.தவறான அர்த்தமாய் என்ன வேண்டாம்.
   சீர்திருத்தத் திருமணம் என்பது அறிவார்ந்த பெரியோர்கள்,
   பெற்றோர்கள்,உறவினர்கள் நண்பர்கள் சேர்ந்து மேளதாளம் முழங்க எல்லோரின் நடத்தி வைக்கும் திருமணம் சீர்திருத்தத் திருமணம்

   Delete
  3. விளக்கத்திற்கு நன்றி ...
   வெறும் சீரோட என்று நிறுத்தியிருந்தால் இந்த குழப்பம் எனக்கு வந்திருக்காது ..
   அடுத்த வரியில் சேலையோட , தாலியோட என்று குறிப்பிடுகையில் தான் எனக்கு குழப்பம் வந்தது! இரண்டு வரிகளில் ஏதாவது ஒன்று போட்டாலே போதும் என்று நினைக்கிறேன்!

   இலவச இணைப்பாக சீர்திருத்த திருமணத்திற்கு விளக்கம் தந்தமைக்கு என் நன்றிகள்

   Delete
 9. மண் வாசனையோடு மகிழ்வான பாடலொன்று...

  அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி.

   Delete
 10. கிராமிய மணத்தில் பதிவர் திருவிழா அழைப்பு அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சுரேஷ்

   Delete
 11. பதிவர்கள் திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்.
  நல்லவங்க சேரும் கூட்டம் நல்மாய் நடக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க .உங்களுக்குத் தெரிந்தவங்களையும் அழைத்துவாங்க

   Delete
 12. கிராமத்து மணத்துடன் "நல்லவங்க சேரும் கூட்டம்
  சென்னையிலே நடக்குதடி" சிறப்புற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வரலாமே .அருகில்தானே இருக்கிறீர்கள்

   Delete
 13. அசத்தல்.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

   Delete
 14. அருமை கவியாழி சார். நாட்டுப்புற பாடலால கலக்கிட்டீங்க!

  ReplyDelete
 15. வித்தியாசமான அழைப்பு. நல்லவங்க மட்டுமில்ல, வல்லவங்களும் கூடும் கூட்டம்!

  ReplyDelete
  Replies
  1. சரியாச்சொன்னீங்க நம்மவங்க சேரும் கூட்டம்

   Delete
 16. இந்தமுறை எனக்குத் தெரிந்த, இதுவரை நேரில் பார்த்திராத பதிவர்களையும் பார்க்கலாம் என்ற உற்சாகத்தில் இருக்கிறேன்.

  அழைப்பிதழ் கவிதை அருமை! உங்கள் வரிகளில் மயங்கி வராதவர்களும் வந்து விடுவார்கள்!

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்