வறுமைப் போக்கிட உதவுங்கள்....
காலைச் செய்திகள் படிப்பதில்லை
கடமை சீக்கிரம் முடிப்பதில்லை
வேளைதோறும் உணவையும் மறந்து
விழுந்தேன் வலையில் தினந்தோறும்
முக்கிய நிகழ்வுகள் மறந்தாலும்
முகப் புத்தகம் பார்ப்பதாலே
முகமே பார்க்கா நண்பருக்கு
முதலில் வணக்கம் சொல்லுகிறேன்
இடமோ ஊரோ தெரியாமல்
இளமை முதுமை அறியாமல்
இணைந்தே இன்றும் நண்பர்களாய்
இனிதாய் பழகி வருகிறேனே
தலைமைப் பண்பும் வளர்த்திடவே
தகவல் இணைந்தே பகிர்ந்திடவே
தினமும் நடக்கும் நிகழ்வுகளே
துணையாய் நமக்கு கிடைக்கிறதே
வலையைத் தினமும் பாருங்கள்
வாழ்க்கை முறையை நாடுங்கள்
வறியவர் மாணவர் இல்லார்க்கும்
வறுமைப் போக்கிட உதவுங்கள்
நல்லது தலைவரே...
ReplyDeleteநம்மால சொல்ல தெரிந்ததை சொல்லுவோமே.வருகைக்கு நன்றிங்க சௌந்தர்
Deleteமீள முடியாத வலை...? அருமையாக முடித்துள்ளீர்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் ஐயா...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க தனபாலன்
Deleteநல்ல கருத்துக்களை சொன்ன கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteநல்ல கருத்துகளை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள் கவிஞரே!!!
ReplyDeleteத.ம: 4
நன்றிங்க தொடர்ந்து வாங்க.
Deleteநம் உள்ளங்களில், எண்ணங்களிலுள்ள வறுமையை நீக்கிட்டால்
ReplyDeleteஇல்லாதோர்க்கு இரப்பது சுலபமாகிவிடும்.
வறுமை பற்றி அருமை உங்கள் வரிகள்!
வாழ்த்துக்கள் சகோ!
உண்மைதான் சகோ.சரியாகச் சொன்னீர்கள்.உங்கள் வருகைக்கு நன்றி
DeleteArumai
ReplyDeleteநடத்துங்க! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சுரேஷ்
Deletetha.ma 6
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteவலைதனில்
ReplyDeleteவளரட்டும் தோழமை
தொடர்ந்து வாருங்கள் தோழமைத்தாருங்கள்
Deleteஇணையவலை மக்களை எத்துனை தொலைவிலிருந்தாலும் இணைத்து வைக்கிறது.
ReplyDeleteநம்மை இன்றும் இணைத்துக் கொள்கிறது.வருகைக்கு நன்றிங்க
Deleteஇணையம் இணைப்புப் பாலமல்லவா? நன்றி
ReplyDeleteஎல்லோரையும் இல்லாரையும் இணைக்கும் பாலம் என்பது உண்மைதான்
Delete//இடமோ ஊரோ தெரியாமல்
ReplyDeleteஇளமை முதுமை அறியாமல்
இணைந்தே இன்றும் நண்பர்களாய்
இனிதாய் பழகி வருகிறேனே//
நல்ல கவிதை. உண்மைக் கவிதை. ஆனால் அதில் நன்மையே கவியாழி. மகிழ்வுடன்.
நன்றிங்கம்மா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Delete