உடல் முழுதும் வியர்த்தாலும்.....
(நன்றி கூகிள்)
பாய்ந்து வரும் காளையது
பார்தவுடன் வியந்து விடும்
பருவமான உடல தனால்
புகுந்து விளையாடி வரும்
கருப்பு வெள்ளை நிறமாக
காளையது துணிந்து நிற்கும்
கன்னியரைக் கண்டுவிட்டால்
கழுத்தை தூக்கி முட்டவரும்
ஊர் முழுக்க நின்றாலும்
உரியதையேத் தேடிவிடும்
உள்ளமதைக் கொள்ளை யாக்கி
உறவுக்காக் ஏங்கி நிற்கும்
பரிதவிக்கும் நிலத்திலே
பக்குவமாய் விதை விதைக்கும்
பாத்தியிலே விதைத்து விட்டு
பாதயதைத் தேடித் போகும்
உருவமதைக் கண்டவுடன்
உடல் முழுதும் வியர்த்தாலும்
விதியதனை எழுதி விட்டு
விரைவாகப் பதுங்கி விடும்
அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நண்பரே
Deleteகாளை கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க எஸ்.சுரேஷ்
Deleteகாளையை பற்றிய கவிதை சிறப்பு. ஆனா, சில நேரத்துல அது படும் இம்சையை பார்க்கும்போது ஐயோ பாவமா இருக்கும்.
ReplyDeleteஆமாம்மா அய்யோ பாவம்தான் என்ன செய்வது
Deleteகாளைகளை பசுக்கள் போல கவனிப்பதில்லைதான் நல்ல கவிதை
ReplyDeleteஆமாம் .உங்கள் வருகைக்கு நன்றி
Deleteஇதுவரையில காளையை பற்றியநான் வாசிக்கும் முதல் கவிதை இதுதான்
ReplyDeleteஅப்படிங்களா நல்ல இருக்கிறதா.
Deleteஇன்றுகாலை கிராமத்திற்குச் சென்றீர்!!!! அதன் பலனா! காளையைக் கடத்தி வந்தீர்!
ReplyDeleteநாட்டுக் கோழியைத்தான் கொண்டுவந்தேன் அய்யா.ஆனால் காளையைக் கண்டு வந்தேன்
Deleteகாளை கவிதை அருமை.
ReplyDeleteஅருமை அய்யா. நன்றி
ReplyDeleteநன்றிங்கநண்பரே
Deleteஅருமை. ராஜி சொல்லும் உணர்வு எனக்கும் உண்டு.
ReplyDeleteபரவாயில்லையே
Deleteசிறப்பான கவிதை
ReplyDeleteசிந்தனைச்செய்தால்நன்று
Deleteகிராமத்துக் கவிதை. மிகவும் அருமை.
ReplyDeleteபாவம் காளை.இப்போ உங்க கையிலயும் சிக்கிடிச்சா !
ReplyDeleteவேறவழி....
Delete