உங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு
எல்லோருக்கும் நன்றி மொத்தப் பதிவுகள் ; 295 கருத்துரைகள் ; 6,073 வருகைத் தந்தவர்கள் ; 37,943 வலையில் இணைந்தவர்கள் ; 131 நிலையாக ஒன்றே சொல்லாமல் நில்லாது தினமே எழுதியுமே சுவையாக மகிழ்வாக இருந்திடவே சுறுசுறுப்பாய் எழுதியது அத்தனையும் விலைக்காக எதையுமே எழுதவில்லை வேதனையும் யாருக்குமே தந்ததில்லை கலையாக எண்ணியேக் கவிதைகளை காலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன் குறுகிய காலத்தில் இத்தனையும் குறையாத அன்போடு என்னுடனே குறைவான எண்ணிக்கையில் வந்தாலும் குற்றமென எந்நாளும் கூறாமல் பிடிக்காமல் போனாலும் பழிக்காமல் பிழைகளை தவறாக எண்ணாமல் தமிழ் மணத்தில் இடம்பிடிக்க தந்திட்டீர் ஐந்தாவது இடத்தினையே நிலையாக இவ்விடத்தில் நிரந்தரமாய் நிற்பதற்கு என்னாலே இயலாது ஆனாலும் தந்திடுவீர் ஆதரவை அன்புடனே நல்லாசி வேண்டுகிறேன்