காவிரித்தாயின் வருகையும் கண்கொள்ளாக் காட்சிகளும்
நான் கடந்த வாரம்எனது மகிழுந்தில் ஒகேனக்கல் செல்வதாய் திட்டமிட்டு தருமபுரி வழியாக பெண்ணாகரம் என்ற ஊர் சென்று ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிக்கலாமென ஆவலோடு சென்றேன் .ஆனால் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக வழியிலேயே காவல்துறையினர் அன்போடு மறுத்தார்கள்.ஆனாலும் சில கட்டுப்பட்டுகளுடனும் அங்கு சென்றாலும் குளிக்க தடை இருப்பதால் அனுமதிக்க மாட்டர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.அவர்கள் சொல்லியதுபோல் அருவிப் பக்கம் யாரையுமே அனுமதிக்கவில்லை.அங்கே கடை வைத்தவர்களையும் அனுமதிக்கவில்லை.எக்கசக்க கட்டுப்பாடு இருந்தாலும் வேறு வழியாக நீர் வரும் வழியில் சென்றுப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ந்தோம்.
நீர் வரத்து அதிகமாக இருகரைகளையும் அடக்கி கரைபுரண்டோடியது கண்டதும் பயமும் தொற்றிக் கொள்ள குளிக்க முடியாமல் திரும்பினோம்
ஒகேனக்கல் அருவி அருகே எடுத்தப் படங்கள்
ஒகேனக்கல் சென்று விட்டு மீண்டும் பெண்ணாகரம் வந்து மேச்சேரி வழியாக மேட்டூர்அணை அணையாவது பார்க்கலாம் என்று வந்தால் அணையை ஒட்டிய பதினாறு கண் வழியே செல்லவும் தடை இருந்ததால் .மேட்டூர் அணை நிரம்பி வழிந்த காட்சியைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சேலம் கிளம்பி மீண்டும் சென்னை வரும்படியாகிவிட்டது.
ஒகேனக்கல்லில் குளிக்கும் திட்டமே முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியதாயிட்று.பின் மேட்டூர் வந்தும் ஏமாற்றமே .இருந்தாலும் மேட்டூர் அணையின் நிரம்பி வழியும் அழகைப் படமெடுத்த மகிழ்ச்சியோடு சேலம் திரும்பினேன்.
மின்சாரம் உற்பத்தி நிலையம்
மேட்டூர் அணையின் கண்கொள்ளாக் காட்சி
அணையின் இருபகுதியிலும் வெளியேறும் நீர்
அணையின் எழில்மிகுத் தோற்றம்
நிரம்பி வழியும் மேட்டூர்அணையின் கண்கொள்ளாக் காட்சி
-கவியாழி-
உங்கள் பதிவின் மூலம்
ReplyDeleteநாங்களும் அணையின் அழகையும்
காவிரித் தாயின் களி நடையையும் கண்டு மகிழ்ந்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteமுதலில் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க சார்
ReplyDeleteகாவிரித்தாயின் வருகையும் கண்கொள்ளாக் காட்சிகளும் உற்சாகம் நிரம்பித்ததும்பும் காட்சிகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்கம்மா
Deleteநிறைந்தோடும் அருவியும் மேட்டூர் அணையும் அழகாக இருக்கின்றன.
ReplyDeleteஒகேனக்கல் நான் மிகவும் ரசித்த இடம். பரிசல் பயணம் மகிழ்ச்சியானது.பழைய நினைவுகளை கொண்டுவந்தது.
பகிர்வுக்கு நன்றி.
அப்படியா? மிக்க மகிழ்ச்சி.மீண்டும் வாருங்கள் மகிழ்ச்சியில் தவழுங்கள்
Deletenantri!
ReplyDeleteவருக வணக்கம்
Deleteஅருமை! அருவியிலும் அணையிலும் நீர் அதிகமா..மகிழ்ச்சியாக இருக்கிறது...ஊர் செழிக்கட்டும். படங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கவியாழி ஐயா!
ReplyDeleteநன்றிங்க தம்பி .நாடு செழித்தால் நாமும் செழிப்புருவோம்
Deleteஒகேனேகல்லுக்கும் மேட்டூருக்கும் செல்லாமலேயே காவிரியை காண செய்துவிட்டீர்கள். அழகிய படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றிங்கயா.உங்களின் சார்பாக நானே சென்று வந்துவிட்டேன்
Deleteகவிஞர் கவிதையைக் கை விட்டாலும்,படங்கள் கவிதையாக!
ReplyDeleteநன்றிங்கையா இதுவும் கவிதைதானே
Deleteவருசம் ஆச்சு இப்படி ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்து
ReplyDeleteஉண்மைதான்.வறண்ட ஆறு வழிந்தோடும் காட்சி அற்புதமாய் உள்ளது
Deleteபடங்கள் மூலம் ரசித்தேன்.
ReplyDeleteஇனிய நன்றி. வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கு நன்றிங்கம்மா
Deleteமேட்டூர் அணைக்கு தண்ணீர் வராதா, வராதா என்று காத்திருந்த யாருமே இவ்வளவு விரைவில் வந்துவிடும் என்று எதிர்பார்த்திருக்க் மாட்டார்கள்! இனி போதும் என்கிற அளவுக்கு காவிரித்தாய் கண் திறந்துவிட்டாள். அந்த அழகை பலமுறை தொலைக்காட்சியில் கண்டிருந்தாலும் உங்கள் புகைப்படங்கள் வழியாக மீண்டும் ஒருமுறை பார்க்க வைத்ததுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த வருடம் குறைவில்லை. இனியும் தொடர்ந்து முழுக் கொள்ளளவை கொண்டிருக்கவேண்டும்
Deleteஉங்கள் மூலம் ஒக்கனேக்கல் சென்ற திருப்தி...
ReplyDeleteபடங்களை கொஞ்சம் பெரிதாகி பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்...
உங்களின் வேண்டுகோளை நிறைவேற்றி பெரிதாக்கிவிட்டேன்.மகிழ்ச்சியா?
Deleteஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திலும் இந்த முறை காவேரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறாள் என்று கேள்விப் பட்டேன். மனது நிறைய சந்தோஷம். உங்கள் புகைப்படங்கள் பார்த்து இன்னும் அதிக மகிழ்ச்சி!
ReplyDeleteஇது தொடரவேண்டும் என்று நாமும் வேண்டுவோமாக.
Deleteஆசை தீரக் குளிச்சவனும் இல்லேன்னு சொல்வாங்க...குளிக்க முடியலேன்னு ஒண்ணும் வருத்தப் படாதீங்க...கண்ணுக்கு நிறைவா பொங்கி வர்ற காவிரியைப் பார்க்கவும் கொடுத்து வச்சுருக்கணும் !
ReplyDeleteஉண்மைதான் நண்பரே.இன்னொருமுறை போகும்போது உங்களையும் அழைக்கிறேன் வாருங்கள்
Deleteகாவிரி பெருக்கெடுத்து ஓடுகிறாள் என்பதை கெட்கவெ மகிழ்ச்சியாக இருக்கிறது. பார்த்த உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்!
ReplyDeleteமகிழ்ச்சியோ மகிழ்ச்சி
Deleteபார்க்கக் கண்கொள்ளாக் காட்சிகள். இது மாதிரி வழியுமளவு நீரைப் பார்த்தே நாட்களாகி விட்டன.
ReplyDeleteஆம்.ஒருமுறை சென்று பார்த்துவிட்ட வாருங்கள்
Deleteகண்கொள்ளாக் காட்சிகள் ஐயா. படத்தில் பார்க்கவே பிரமிப்பாய் இருக்கின்றதே, நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். வாழ்த்துக்கள் ஐயா. கொடுத்து வைத்தவர் நீங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க அய்யா.மகிழ்ச்சியாய் இருந்தேன் மனதில் புத்துணர்ச்சி அடைந்தேன்
Deleteநன்றி
ReplyDeleteஅருமையான படங்கள்.... நன்றி..
ReplyDeleteவருகைக்கு நன்றி
Delete