காடுகளில் மரம் வளர்ப்போம்
காடுகளில் மரம் வளர்ப்போம்
கழனி ஓரம் செடி விதைப்போம்
நாடு முழுக்க இயற்கையை
நாடிச் செல்ல அறிவுறுத்துவோம்
ஆடுமாடு மேச்சலுக்கு அங்கங்கே
தேடித்தேடி செடி வளர்ப்போம்
அதனுடைய சாணத்தையே
அடியுரமாய் போட்டிடுவோம்
சாலை ஓரம் மரங்களும்
சமதூரம் நட்டு வந்து
வேளை தோறும் நீரூற்றி
வளரும் வரை காத்திடுவோம்
தூரம் செல்லும் மக்களுக்கு
துணையாக நிழல் கொடுப்போம்
தொடர்ந்து வரும் சூரியனை
தூரமாக நின்று பார்ப்போம்
ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து
ஏரிக்குளம் அருகில் வளர்த்து
பாலை நிலமும் பக்குவமாய்
பரந்த காட்டையும் அமைப்போம்
வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
விளைவித்தே தினம் உண்போம்
காடு கழனி குன்றெல்லாம்
காக்கும் மரங்களை வளர்ப்போம்
கழனி ஓரம் செடி விதைப்போம்
நாடு முழுக்க இயற்கையை
நாடிச் செல்ல அறிவுறுத்துவோம்
ஆடுமாடு மேச்சலுக்கு அங்கங்கே
தேடித்தேடி செடி வளர்ப்போம்
அதனுடைய சாணத்தையே
அடியுரமாய் போட்டிடுவோம்
சாலை ஓரம் மரங்களும்
சமதூரம் நட்டு வந்து
வேளை தோறும் நீரூற்றி
வளரும் வரை காத்திடுவோம்
தூரம் செல்லும் மக்களுக்கு
துணையாக நிழல் கொடுப்போம்
தொடர்ந்து வரும் சூரியனை
தூரமாக நின்று பார்ப்போம்
ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து
ஏரிக்குளம் அருகில் வளர்த்து
பாலை நிலமும் பக்குவமாய்
பரந்த காட்டையும் அமைப்போம்
வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
விளைவித்தே தினம் உண்போம்
காடு கழனி குன்றெல்லாம்
காக்கும் மரங்களை வளர்ப்போம்
வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
ReplyDeleteவிளைவித்தே தினம் உண்போம்
காடு கழனி குன்றெல்லாம்
காக்கும் மரங்களை வளர்ப்போம்
பசுமைப் பகிர்வுகள்.
பாராட்டுக்கள்..
பாராட்டுக்கு நன்றிங்கம்மா
Delete#காடுகளில் மரம் வளர்ப்போம்#அது சரி ,மரம் வெட்டுபவர்கள் சிந்திக்கட்டும் !
ReplyDeleteஉண்மைதான்.புரிஞ்சுக்கோணும்
Deleteஇன்னிக்கு மரங்கள் இல்லாத காடுகள்தான் இருக்கு. சிந்திக்க வேனிட்ய தலைப்பு.., காடுகளில் மரம் வளர்ப்போம்!! தலைப்பே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுது. கவிதை பகிர்வுக்கும் நன்றி !!
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்க ராஜி.
Deletetha.ma 4
ReplyDeleteஅழகான கருத்துக்களை அழகா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஆனா சந்தம் இல்லாம புதுக்கவிதை மாதிரி ஒன்னு சொல்லுங்களேன்...
படிக்கறப்போ வார்த்தைகள் எதுகை மோனையோடு விழாம.... இன்னும் நல்லாவே இருக்கும்...
முடிந்ததை யோசிக்கிறேன்
Deleteகாடு வளர்க்கும் கவிதை அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க எஸ்.சுரேஷ்
Deleteவீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
ReplyDeleteவிளைவித்தே தினம் உண்போம்
காடு கழனி குன்றெல்லாம்
காக்கும் மரங்களை வளர்ப்போம்//
வரிக்கு வரி அருமையான செய்திகள்.
நல்ல விழிப்புணர்வு கவிதை.
பசுமையை மீட்க முயலுவோம் ஒவ்வொருவரும்.
நன்றி
உங்க வீட்டுத் தோட்டப் பதிவு பார்த்தபின்புதான் எனக்கு எழுத தோன்றியது .நன்றி உங்களுக்குத்தான்
Delete//வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
ReplyDeleteவிளைவித்தே தினம் உண்போம்
காடு கழனி குன்றெல்லாம்
காக்கும் மரங்களை வளர்ப்போம்//
மானுடம் பயனுரும் வரிகள், மகிழ்ச்சி பாராட்டுக்கள்
யாராவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதை விட்டு, நாமே முதலில் தொடங்குவோம்
நாமே தொடங்கி உதாரணமாய் இருப்போம்.நல்ல யோசனை
Deleteவெட்டினா கூட பயன் தர்ற மரம்.. வளர்த்தா எவ்வளவு பயன் தரும். சுற்று சூழல் பாதுகாப்பை சொல்லி அழகான கவிதை!
ReplyDeleteமகிழ்ச்சி வேண்டுமானால் சுட்டறு சூழல் அவசியம் என்பதை சொல்வதும் உண்மைதான்
Deleteகவிதை அருமை...
ReplyDeleteநன்றிங்க ஜனா அவர்களே
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்
Deleteபசுமையைப் போற்றும் அழகான வரிகள். காட்டைவெட்டி நாட்டைப் பரப்புபவர்கள் சிந்திக்க வேண்டியதை மிகச் சிறப்பாகக் கூறினீர்கள்.
ReplyDeleteஅருமை சகோ! வாழ்த்துக்கள்!
உலக நன்மைக்காக எல்லோருமே மரம் வளர்த்தால் நல்லது
Deleteபசுமைப் புரட்சி!
ReplyDeleteஆம்.அய்யா முடிந்தது
Deleteஉள்ள வயல்கள் எல்லாம் கருவேலி மரங்கள் எங்க , எதிர்பார்ப்போம் வருங்காலத்தில் ? நல்ல கவிதை !
ReplyDeleteஓங்கி வளர்ந்த மரங்கள்
ReplyDeleteதாங்கி நிற்கும் பூமி...
==
காடுகள் எவ்வளவு அவசியம்...
==
அருமையான பதிவு பாவலரே...
This comment has been removed by the author.
ReplyDeleteகாடுகளில் மரம் வளர்க்கும்
ReplyDeleteகண்ணியத்தை நீங்கள் கூற
மேடுகளில் நீர் நிறையும்
மேதினியும் பசுமைபெறும்
ஊரெல்லாம் ஒன்று பட்டால்
உழைத்திடலாம் என்றுணரும்
நம்பிக்கை நாம் கொண்டால்
நலமுறுமே நம் தேசம் ..!
அர்த்தமுள்ள கவிதை
அழகு ,வாழ்த்துக்கள் கவிஞரே
வாழ்கவளமுடன்