நண்பனே நீயும் நலமா?
நண்பனே நீயும் நலமா
நங்கையின் உடலும் சுகமா
பண்பனே ஏன் பதறுகிறாய்
பயனின்றி ஏன் அழுகின்றாய்
உன்துணை நண்பர்கள் இருக்க
ஊராரும் உறவுகளும் உதவ
பெண்துணை பிணியும்தீரும்
பிறந்திடும் நல்கால முனக்கே
சிந்தனை முற்றும் மறந்திடு
சேர்ந்திட்ட நட்பால் மகிழ்ந்துடு
கந்தனை கடம்பனை நினைத்திடு
கஷ்டமும் விலகிடும் தெரிந்திடு
இத்துணை மக்கள் வாழ்கையில்
இல்லா துயரம் பார்த்தாயா
இதுவும் உனக்கு சோதனையே
இனிமேல் தீர்த்திடும் வேதனையே
தனமாய் தருவார் நண்பர்களே
தயவாய் இருப்பார் சொந்தங்களே
பிணியும் தீர்த்திடும் உள்ளத்திலே
பிறகேன் கவலை வாழ்கையிலே
நங்கையின் உடலும் சுகமா
பண்பனே ஏன் பதறுகிறாய்
பயனின்றி ஏன் அழுகின்றாய்
உன்துணை நண்பர்கள் இருக்க
ஊராரும் உறவுகளும் உதவ
பெண்துணை பிணியும்தீரும்
பிறந்திடும் நல்கால முனக்கே
சிந்தனை முற்றும் மறந்திடு
சேர்ந்திட்ட நட்பால் மகிழ்ந்துடு
கந்தனை கடம்பனை நினைத்திடு
கஷ்டமும் விலகிடும் தெரிந்திடு
இத்துணை மக்கள் வாழ்கையில்
இல்லா துயரம் பார்த்தாயா
இதுவும் உனக்கு சோதனையே
இனிமேல் தீர்த்திடும் வேதனையே
தனமாய் தருவார் நண்பர்களே
தயவாய் இருப்பார் சொந்தங்களே
பிணியும் தீர்த்திடும் உள்ளத்திலே
பிறகேன் கவலை வாழ்கையிலே
கவலையின்றி வாழ்வோம்..
ReplyDeleteஉண்மைதான் கவலையை மறந்தும் வாழலாம்
Deleteநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்காக எழுதிய கவிதை என்று நினைக்கிறேன் ...அவர் சகோதரி பூரண நலம் பெறவும் ,நண்பர் மகிழ்ச்சியாய் இணையம் பக்கமாய் விரைவில் வர வேண்டுமென்று உளமாறவேண்டுகிறேன் !
ReplyDeleteஅவர் எழ வென்றும் எல்லோருக்கும் பயன் வேண்டும்
Deleteஅழகான ஆறுதல் கவிதை !
ReplyDeleteநன்றிங்க ஸ்ரவாணி
Deleteஎந்த நண்பனை நினைந்துருகி இக் கவிதை வடித்தீர்களோ அவர்களுக்கு
ReplyDeleteநன்மையும் சேர வாழ்த்துக்கள் சகோ .
இன்னல்கள் தீர்ந்து இனியவை மலர நானும் வாழ்த்துகிறேன்
Deleteஉங்கள் நட்பின் ஆழம் கவியிலேயே தெரிகிறது...
ReplyDeleteஉங்களைப் போன்று நட்பினைப் பெற்ற உங்கள் நண்பர் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.
கவலையை விடுத்து வேண்டுதலைத் தொடருங்கள் சகோ!
அனைவருக்கும் நலமும் நன்மையும் பெருகிட நானும் உளமார வேண்டுகிறேன்.
எல்லோரும் நலமாகவும் மனம் வளமாகவும் இருக்கவே விரும்புகிறேன்
Deleteஅருமையான ஆறுதல் கவிதை
ReplyDeleteஉள்ளத்து உணர்வை அப்படியே கவியாய்ப்
பதித்தவிதம் மனம் கவர்ந்தது
அவர் துயரெல்லாம் கதிர் கண்ட பனியாய்
நிச்சயம் தீரும்.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
உண்மைதான் நிம்மதி கிடைக்கும் நேர்மையும் செயிக்கும்
Deleteஆறுதல் பெறட்டும் நண்பர் அழகிய கவிதையால்
ReplyDeleteத.ம7
எண்ணத்தில் உள்ளது எண்ணிக்கை வரவில்லையே
Deleteதகுந்த நேரத்தில் ஆறுதல் தரும் கவிதை. நண்பரின் துயரம் தீர வாழ்த்துகிறேன். கந்தன் அருளால் கவலைகள் தீர வேண்டும்.
ReplyDeleteதீரட்டும் நிம்மதி தழுவட்டும்
Deleteமனதை வருடும் வார்த்தைகளால் ஆறுதல் கூறியிருக்கிறீர்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து திரு தனபாலன் அவர்களின் சகோதரி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteஅவருக்கு ஆறுதல் கிடைக்கட்டும்
DeleteNanbarukku kavalaigal theerattum... nalamudan vala naanun ungal kaviyil inaikinren..
ReplyDeleteகவலையும் தீர்ந்தது உண்மைதான்
Delete