அழகிய கனிகளைப் பார்த்தேன்......
(நன்றி கூகிள்)
அழகிய கனிகளைப் பார்த்தேன்
அதையே கைகளில் எடுத்தேன்
தாங்கிய கிளையைக் கண்டேன்
தாவியே ஓடிப் பறித்தேன்
இளமை அழகை கண்டேன்
இதழில் சுவையைக் கொண்டேன்
பழகிய சுவையை உணர்ந்தேன்
பழத்தை முழுவதும் ரசித்தேன்
பதமாய் ரசத்தைப் பிழிந்தேன்
பருகிப் பருகி மகிழ்ந்தேன்
திரண்ட முழுதும் சுவைத்தேன்
தீண்டியே மகிழ்ச்சியில் திளைத்தேன்
தினமும் வேண்டியே நின்றேன்
தெகிட்டா தமிழை மணந்தேன்
கலையாய் அதையே கனித்தேன்
கவிதையை அதனால் படைத்தேன்
இனிமை
ReplyDeleteநன்றி
Deleteதமிழை மணந்ததால் கவிதைக் குழந்தைகள்
ReplyDeleteகணக்கில்லாமல் பிறக்கட்டும்',
இதற்கில்லை கட்டுப்பாடு.
இனிய கவிதை,
பதமாக ரசம் பிழிந்த கவிதை,
ரசிக்கவைத்த கவிதை.
வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக் கண்டு மகிழ்ந்தேன்.வாழ்த்துக்கு நன்றி
Deleteதமிழையும் மணந்துக் கொண்டதால் நிறைய கவிதைக் குழந்தைகளைப் பெற்றுத் தள்ள வாழ்த்துகள் !
ReplyDeleteநன்றிங்க நண்பரே அதையும் செய்கிறேன்.வாழ்த்துக்கு நன்றி
Deleteதேன் தேன் என்றே முடிந்த உங்கள் கவிதை வரிகளை ரசித்”தேன்”.
ReplyDeleteமகிழ்ந்தேன்
Deleteதமிழ்க் க(ன்)னியின் சுவை அறிந்தவர்!
ReplyDeleteஎல்லாம் அறிந்த தங்களின் முன் நான் சிறிய தூசு .இன்னும் வளரவேண்டும் அய்யா?
Deleteகனி தந்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதேனாக இருந்திருக்குமே நண்பரே
Deleteஒப்பீடு அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்க வந்தாதான் எனக்கு நிம்மதி .தேனோடு பாலும் கலந்து தீஞ்சுவையாய் பருகிய இன்பம் வருது
Deleteதங்களின் அழைப்புக்கு நன்றி. நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் என்பதை அறிவீர்கள்.அதையே மீண்டும் மீண்டும் நீங்கள் படிக்கவேண்டுமா ? இதோ http://kaviyazhi.blogspot.com/2013/07/blog-post_2179.html
ReplyDeleteதமிழ் கவிதை அழகு.
ReplyDeleteநன்றிங்கம்மா
Deleteகவிதை சுவை
ReplyDelete