உடல் தானம் செய்வீர்

உடல் தானம் செய்வீர் உன்னத முடிவெடுப்பீர் கடல் கடந்து பார்த்தால் கட்டாயம் நீயும் செய்வீரே உயிர்போன பின்னே உடம்பென்ன செய்யும் மண்ணரித்து புழுதின்னும் மரம்செடி கொடியே வளரும் பொன்னெழுத்தில் போற்ற புகழோடு பலர் வாழ என்னிருத்தி பாருங்கள் எண்ணியதை சொல்லுங்கள் அவயம் இல்லார்க்கு அனைத்தும் கிடைக்கும் அடுத்தவர் நலம் வாழ அவசியமான முடிவு செய்