இரவில் இம்சை ஏன்?
மெல்ல சிணுங்கி வந்து
மேனியெல்லாம் தவழ்ந்து
செல்லாமாய் கடித்கும்
சின்னஞ் பிள்ளையா நீ!
நோயை பரப்பும்
நேசமில்லா எதிரியே!
இரவில் அழைத்து
இம்சிக்கும் இளவளே!
உறவுக்கா அல்லது
உனது உரிமைக்காகவா!
காதோரம் பாடுவது
கண்ணுரங்க முடியவில்லை....
அப்படியென்ன ரகசியம்?
அடிக்கடி தொல்லை செய்ய
வேண்டாமென்றாலும் மீறி
மீண்டும் மீண்டும் கடிக்கிறாய்.....
முத்தமிட்டு செல்கிறாய்
முடியவில்லை உன் தொல்லை
சத்தமும் பிடிக்கவில்லை
சரியாக தெரியவில்லை.
மெத்தையில் படுத்ததும்
மெல்ல கடித்து ஓடுகிறாய்
எனக்கு பிடிக்கா து
இருந்தாலும் கடிக்கிறாய்
இனி பொறுமையில்லை
உனக்கு வாழ்க்கையில்லை
ஒழிந்து போ கொசுவே
உன்னால் போச்சு தூக்கம்
ஒழிந்தாய் ! இறந்தாய்!!
இனிமேல் இனிமையாக உறங்குவேன்
இரசித்தேன்!அருமை!
ReplyDeleteநன்றி நட்பே,இன்றும் இம்சை தூக்கம் கேட்டு போச்சு
Delete