கல்வி (காசு பார்ப்போரின்) கடவுள்
கல்வி கடவுளென நேரில்
கண்டவர்கள் கூறுவதால்
சொல்லி கொடுத்த-நல்ல
ஆசிரியரை மறப்பது தகுமோ?
நல்லொழுக்கம்-நேர்மை
நற்பண்பை போதித்த
நம்பெற்றோரையும் -மறந்து
நாடுவது கோவில் தானோ
கல்வி கட்டணம்
அள்ளி கொடுத்தாலும்
கண்டபடி அங்கு-இருந்து
திட்டு வாங்கினாலும்
புத்தகத்தை துடைத்து-அதில்
அழகாய் பொட்டிட்டிட்டு
விபூதி பட்டையில்-விரைவாக
குங்குமம் சந்தனம் வைத்து
அர்ச்சனை செய்தால்-படிப்பு
அனைத்தும் புரியுமோ?
தட்சனை கொடுத்தால்-படிப்பின்
தரம் கூடுமோ?
நம்பிக்கை நல்லதே!
நாளும் படித்தால்
நல்ல மதிப்பெண்-வெற்றியும்
நன்றுகிடைக்குமே !!
வித்தியாசமாக இன்றைய நிலையைச்
ReplyDeleteசொல்லிப் போகும் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
Deleteயாரும் மறுப்பு சொல்ல முடியாது,இதையும் இந்த கடவுள்தான் ஆதரிக்கிறார்
அருமை.
ReplyDeleteநன்றி.
நன்றி ஐயா
Deleteதாங்கள் வாக்களித்தமைக்கு நன்றி
ReplyDelete