தெய்வங்கள்

தெய்வங்கள்

நாய்க்குட்டி.....செல்லமே.

 


மனிதன்  என்னை மதிக்கா விட்டாலும்
மண்டி இட்டு நன்றி சொல்லும்
மனதுள் என்னையே தினம் நோக்கும்-மகிழ்ச்சியாய்
மதித்து வாலாட்டி நன்றி செய்யும்

என்னைப் பார்க்க யார் வந்தாலும்
முன்னே வந்து முறைத்து நிற்கும்
பின்னே சென்று சுற்றி வந்து-முகர்ந்து
பின்னங் கால்களை ஒட்டி நிற்கும்

கருப்பாய்  நிறம் கொண்டிருந்தாலும் அது
பொறுப்பாய் தான் இருக்கும் அருமையாக
வெறுப்பாய் நான் திட்டி சொன்னாலும்-நகராது
வெகு அருகில் நின்று கொண்டிருக்கும்

செல்லமாய் சீண்டி அதட்டி விட்டால்
சீக்கிரம் பயந்து குரைத்து விடும்
ஆத்திரம் கொண்டு அடித்து விட்டால்-பிறரை
அடுத்த நொடியே கடித்து விடும்

பொன்னை  பொருளை காத்து நிற்கும்
புதிதாய் இருந்தால் நுகர்ந்து செல்லும்
மண்ணையும் மனதில் பதிந்து கொண்டு-நினைவாய்
மண்டியிட்டு உடனே  நக்கி திண்ணும்


தூங்கும் போதும் அதன் கவனம்
துணையாய் மட்டும் தான் இருக்கும்
நல்ல நண்பன் தான் என்றாலும்-நல்லதில்லை
உள்ளபடி  சொல்வ தென்றால் ஒவ்வாமை

பெற்றோரும் நண்பர்களும் மனைவியும் மகளும்
மற்றோரும் மறந்தாலும் மறவேனே உன்னை

உற்ற  நண்பநென பற்றோடி ருப்பேன்-இன்பமாய்
 உயிருள்ளவரை உன்னை  நன்று காப்பேன்

நன்றி  சொல்ல வார்த்தை இல்லை
நான் மறந்து உண்ட தில்லை
கொண்ட நட்பு கொஞ்சமில்லை -அதை
கோபம் கொண்டு பார்க்காமல் இருந்ததில்லை





Comments

  1. நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    நான் மறந்து உண்ட தில்லை
    கொண்ட நட்பு கொஞ்சமில்லை -அதை
    கோபம் கொண்டு பார்க்காமல் இருந்ததில்லை

    அருமை தோழமையே..........

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி,மற்ற கவிதைகளையும் பாருங்களேன்

      Delete
  2. அன்பு நாய்க்கு அழாகான கவிதை.
    குறுகிய காலமே எங்களுடன் இருந்த எங்கள் செல்ல ஜூனோ வின் இறப்புக்கு இரங்கல் கவிதையும் எழுதிற் இருக்கிறேன். அய்யா! நாய்களின் அன்பு மறக்க முடியாதவை.அது பற்றிய ஒரு தொடர் பதிவு கூட எழுதி இருக்கிறேன்.
    ஜூனோ! எங்கள் செல்லமே!

    ReplyDelete
    Replies
    1. நமக்குள்ள நட்பைவிட அதன் நட்பு மிகவும் அலாதியானது-கருத்துக்கு நன்றி

      Delete
  3. மனிதன் என்னை மதிக்கா விட்டாலும்
    மண்டி இட்டு நன்றி சொல்லும்...Good

    ReplyDelete
  4. தூங்கும் போதும் அதன் கவனம்
    துணையாய் மட்டும் தான் இருக்கும்
    நல்ல நண்பன் தான் என்றாலும்-நல்லதில்லை
    உள்ளபடி சொல்வ தென்றால் ஒவ்வாமை//அருமை அன்பு நண்பரே .. அழகிய கவிதை

    ReplyDelete
    Replies
    1. உண்மையாலும் நன்றியோடு உங்களின் கருத்தை வரவேற்கிறேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more