தெய்வங்கள்

தெய்வங்கள்

முதுமையின் ஏக்கம்








அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய்
அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம்
துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில்
தொண்டையைக் கம்ம செய்து  தொடருதே

நடை பயில திறன் மறந்து
நடப்பதற்கு துணை யழைத்து
வளர்த்திட்ட பிள்ளையும்  மறந்து-வாழ்வில்
கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும்


பஞ்சமில்லை பணம் பொருளுக்கும்
எஞ்சி நின்ற சொத்து மிழந்தும்
தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு
மஞ்சமென நான் கிடந்து  மடிவேன்

எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும்
பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு
தரும்  கடைசி பாலும் கொடுக்க -தவறும்
பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா

ஏழுகடல்  தாண்டி என்ன பயன் ?
ஏழுலகம் போற்றி என்ன பலன் ?
படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும்
கிடைக்காதோ நாளை இந்த நிலை

சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி
இந்தநிலை  பலர் இழித்தும்  வாழ்வா?
பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ்
எந்தம் பண்பென விரைந்து வா

அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில்
அழகு தமிழின் நல்ல கருத்துக்களை
உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு
இணைந்து  வா இறுதி காலத்திலாவது

Comments

  1. ஏழுகடல் தாண்டி என்ன பயன்
    ஏழுலகம் போற்றி என்ன பலன்
    படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும்
    கிடைக்காதோ நாளை இந்த நிலை...
    நல்ல கேள்வி உணர்ந்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி,
      ஆம்.அனைவருக்குமான போது கேள்வி

      Delete
  2. நல்ல பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பூவில்
    வரம் வாங்கி வந்தால்தான்! மற்றும் "வேர்களை மறவா விழுதுகள்" இடுகைகளை நேரம் கிடைக்கையில் படிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் படிப்பேன் ,தங்களது கருத்துக்கு நன்றி,இதுபோன்ற கேள்விகளை கேட்டாலவது இனி மாறலாம் என்ற எண்ணம் உருவாக வேண்டும் நன்றி நட்பே

      Delete
  3. முதுமைக்கு தேவை ஆதரவு.எல்லோருக்கும் ஒரு நாள் முதுமை வரத்தானே போகிறது. நல்ல கருத்தை உணர்த்தும் கவிதை.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்த்துக்கு நன்றி,முதுமை வரும் முன்னே நாமெல்லாம் யோசிக்க வேண்டியதை உள்ளது ? எதிர்பார்த்து தானே ஆகவேண்டும்

      Delete
  4. ஏழுகடல் தாண்டி என்ன பயன்
    ஏழுலகம் போற்றி என்ன பலன்
    படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும்
    கிடைக்காதோ நாளை இந்த நிலை

    //உருக வைக்கும் வரிகள்! என்னுடைய வலைப்பூவில் http://esseshadri.blogspot.in/2012/04/blog-post_12.html

    http://esseshadri.blogspot.in/2012/09/blog-post.html

    படிக்க வேண்டுகிறேன்.நன்றி!

    ReplyDelete
  5. இப்போதுதான் கவனித்தேன் படித்து சொல்கிறேன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more