தெய்வங்கள்

தெய்வங்கள்

பேரழகி வட்ட நிலவு


 பேரழகி வட்ட நிலவு









ஊரெல்லாம் காணாது 
உன்னை நான் மறைத்திருக்க
உள்விளக்கு எரியாமல்
உன்னோடு சேர்ந்திருக்க

பாரெங்கும் சுத்திவரும்
பேரழகி வட்டநிலவும்
பார்த்து விட்டு போகாமல்
பைந்தமிழ்லாய் பார்பதேனோ

நீ  விடும் முச்சு
நிம்மதியை கெடுபதாலோ
நிலவுக்கே போட்டியாக
நின்னலகை கண்டதாலோ

மான் கூட்டமெல்லாம்
மறுபடியும் பார்க்கவேண்டி
மயிலிறகு தோகையுடன்
மறைந்திருந்து காண்பதேனோ

மலர்படுக்கை மஞ்சத்தில்
பஞ்சனையும் மெதுவாக
கொஞ்சனைக்க  வேண்டியே
கெஞ்சுதடி வஞ்சியே

வீண் பேச்சு பேசாமல்
விடியும்வரை உறங்காமல்
நானுன்னை பருகிடுவேன்
நல்லிரவு விடியும்வரை

ஊர்பார்த்து வந்தவுடன்
உள்ளவர்கள் ஆசியுடன்
பார்போற்ற உன் கை
பற்றிடுவேன்  நங்கையே





Comments

  1. ம்ம் சுவாரசியமான கவிதை. வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,ஏதோ ஞாபகம் என்ன செய்ய! எழுதத்தான் முடியுது

      Delete
  2. அருமையான கவிதை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,மீண்டும் வருக ஆதரவு தருக

      Delete
  3. ம்ம்ம் மிக அற்புதமான வரிகள் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,மீண்டும் வாங்க

      Delete
  4. ஊர்பார்த்து வந்தவுடன்
    உள்ளவர்கள் ஆசியுடன்
    பார்போற்ற உன் கை
    பற்றிடுவேன் நங்கையே
    >>
    அண்ணிக்கு இந்த மேட்டர் தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கே தெரியும்போது அவங்களும் தெரிஞ்சுகுவாங்க ?

      அட்டிக்கடி வாங்க ஆதரவு தாங்க !

      Delete
  5. நீங்கள் இளமையாக இருக்க இதுதான் காரணமோ !

    ReplyDelete
    Replies
    1. நல்லா கேட்டீங்க டீடைல்லு ? மனதை அழகா வைத்திருந்தாலே இளைமை எப்போதும் நீடிக்கும்

      Delete
  6. படிப்போரை அசத்தும் அசத்தல் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்,எல்லாம் உங்க ஆசிர்வாதம்

      Delete
  7. அருமையான கவிதை கவிஞரே..


    வட்ட நிலவு பேரழகிதான்.

    ReplyDelete
    Replies
    1. நிலவு மங்கை நீள வானத்தில் கங்கை?
      நன்றி மீண்டும் வருக

      Delete
  8. நன்றிங்க ,ஏதோ ஞாபகம் என்ன செய்ய! எழுதத்தான் முடியுது

    ஹா, ஹா, எழுதவாவது முடியுதே இல்லியா அதுக்கு சந்தோஷப்படுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே முடியும் இப்போதும் ஆனாலும் சரிங்க சந்தோசம்தான் ?

      Delete
  9. கவிதையை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கும் நன்றிங்க சார்

      Delete
  10. அழகு கவிதை

    ReplyDelete
  11. நிலவுக்கவிதை மிகச்சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே மீண்டும் வாங்க

      Delete
  12. நல்லதொரு கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மேடம்,மீண்டும் வாங்க ஆதரவு தாங்க

      Delete
  13. அருமையான வரிகள் பகிர்த்து கொண்டமைக்கு நன்றி.இது என்னுடைய முதல் வருகை உங்களின் தளத்திற்கு.மீண்டும் வருவேன்.....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே ,எனது எல்லா கவிதைகளையும் படித்து கருத்து தாருங்கள்

      Delete
  14. ''..மான் கூட்டமெல்லாம்
    மறுபடியும் பார்க்கவேண்டி
    மயிலிறகு தோகையுடன்
    மறைந்திருந்து காண்பதேனோ..''
    நன்று நல்வாழ்த்து.
    சகோதரா எழுத்துப் பிழைகள் உள்ளது.
    கொஞ்சம் கவனியுங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ,சகோ நான் விடியற்காலை கனவு கலைந்து எழுந்தவுடன் எழுதியது .இனி சரிபடுத்திவிடுகிறேன்

      Delete
  15. வரவர காதல் பொங்கி வழியுது! என்னமோ, ஏதோ நடக்குது! எப்படியும் எனக்குத் தேரியாமலா போய்விடும் ?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாமலா? புது வருஷம்போல புது வசந்தம்

      Delete
  16. வரவர காதல் பொங்கி வழியுது! என்னமோ, ஏதோ நடக்குது! எப்படியும் எனக்குத் தேரியாமலா போய்விடும் ?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மீல்பதிவுபோல எனக்கும்.

      Delete
  17. வரவர காதல் பொங்கி வழியுது! என்னமோ, ஏதோ நடக்குது! எப்படியும் எனக்குத் தேரியாமலா போய்விடும் ?

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more