தெய்வங்கள்

தெய்வங்கள்

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே !

இளம் வயதிலேயே
இன்னலை தீண்டியவளே !

இதற்காகவா பிறந்தாய்
இவ்வளவுநாள் வளர்ந்தாய் !

உனக்காக வாழ்ந்திடு
 உணர்ச்சியை பகிந்திடு !

ஒரு  வருடஇன்பம்
ஒருவருக்கும் திருப்தி இல்லை

கணக்காக நடந்தால்
கண்ணியத்தில் குறையுமில்லை

பிறரருக்காக பார்க்காதே
பிறருக்காக வாழாதே!

இளைமை  என்பது
இன்றைய நாள்தான்

இனிமை என்பது
இளமைக்கும்  தேன்தான்

இன்றைய வாழ்வை
இனிமையாக்க  முயற்சி செய் !

இப்போதும் தப்பில்லை
இனிசொல்ல வழியில்லை

மாண்டு  போனவனுக்காக
மீண்டும் தப்பு செய்யாதே !

கோழைக்காக நீயும்
கேள்விக்குறியாய்  இருந்திடாதே !

நீ தான்  நீதிபதி
நின் வாழ்க்கைக்கு அதிபதி

மறுமணம் தப்பில்லை
மறுவாழ்வு கசப்பதில்லை

உருவாக்கு   புதுயுகம்
உனைபோற்றும் இந்த உலகம்

துணிந்திடு செயல்பாடு
துயரத்தை வென்றிடு !!!

Comments


  1. வணக்கம்!

    வாழ்வின் துணிவை வடிக்கும் வரிகளை
    ஆழ்ந்து படித்தல் அழகு

    ReplyDelete
  2. நன்றாய் இருந்தால் நலமே எனக்கு மகிழ்ச்சியே உங்களின் வருகைபோல.
    நீங்கள் இங்கு வந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  3. ''..மறுமணம் தப்பில்லை
    மறுவாழ்வு கசப்பதில்லை

    உருவாக்கு புதுயுகம்
    உனைபோற்றும் இந்த உலகம்.''
    my reply this poem. Please read this link and wreite your Words.
    http://kovaikkavi.wordpress.com/2010/10/31/6-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் .உங்களோட படைப்பையும் படிக்கிறேன்

      Delete
  4. மனதில் துணிவையும் நம்பிக்கையும் தருகிறது வார்த்தைகள்.நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உண்மை ,எல்லா இளம் வயதினருக்கும் அறிவுரைதான் குறிப்பாக இளம்விதைவைகளுக்கு.வந்ததுக்கு நன்றி

      Delete
  5. Replies
    1. ஆம்.நம்மால் சொல்ல தெரிந்த உண்மைகள்.
      நன்றிங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  6. ஆமாங்க நம் வாழ்க்கை நம் கையில்தான்.

    ReplyDelete
    Replies
    1. அவரவர் வாழ்க்கையை அவர்களே நிர்மானிக்கவேண்டும் என்பதுதான் உண்மை

      Delete
  7. கணக்காக நடந்தால்
    கண்ணியத்தில் குறையுமில்லை

    துணிவான வரிகள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,எல்லோருமே பின்பற்ற வேண்டிய வரிகள்

      Delete
  8. நல்ல கவிதை. ரசித்துப் படிக்க முடிந்தது. உங்களின் கருத்துக்களில் லயிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே ரசித்தமைக்கும் படித்தமைக்கும் நன்றி

      Delete
  9. "கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே" என்ற
    பாரதிதாசனின் பாடலை நினைவுறுத்திப் போனது
    தங்கள் அருமைக் கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கயா ,வாழ்த்துக்கும் வந்தமைக்கும்

      Delete
  10. நீ தான் நீதிபதி
    நின் வாழ்க்கைக்கு அதிபதி...
    மிகச்சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முடிவெடுக்கும் உரிமையுள்ளதை உணர்த்தும் .
      நன்றிங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  11. சிறப்பான சிந்தனை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மீண்டும் வாங்க கருத்தினை தாங்க

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

  13. விதவைகள் மறுமணம் செய்து கொள்வதே நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விருப்பத்தைபோல எல்லோரும் ஆதரிக்கணும்

      Delete
  14. அற்புத ...படைப்பு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அரசன் தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  15. அருமையான கருத்துக் கவிதை.

    ReplyDelete
  16. ///கோழைக்காக நீயும்
    கேள்விக்குறியாய் இருந்திடாதே !////

    எனக்குப் பிடித்த வரிகள்...

    அருமையான கவிதை ஐயா ....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே! மீண்டும் வாங்க மீதமும் படியுங்க

      Delete
  17. இளம் பெண்கள் மறுமணம் செய்ய முன் வரவேண்டும் என்று உங்களின் இந்தக் கவிதை மிகவும் நன்று.
    புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் கவிஞரே!
    இந்த புத்தாண்டு உங்களுக்கு மேலும் பல முன்னேற்றங்களை கொடுக்கட்டும்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more