ஆட்டோக்கார அண்ணாச்சி....
ஆட்டோக்கார அண்ணாசி
அறிவியல் கணக்கு என்னாச்சி
ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு
அரிப்பு அதிகமா போயிடுச்சி
சந்துபொந்தா போகுறீங்க
சாகசமெல்லாம் செய்யுறீங்க
கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு
கண்ணீரையும் வரவைக்கிறீங்க
மோட்டார் சைக்கிலபோறவங்க
முகத்திரையும் வீனா போச்சு
மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி
முனகிகிட்டே போக வைக்கிறீங்க
சுவாசகோளாறு உள்ளவங்க
மூச்சுவிட முடியலிங்க
சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
சுகாதாரம் பற்றி யோசிங்க
அறிவியல் கணக்கு என்னாச்சி
ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு
அரிப்பு அதிகமா போயிடுச்சி
சந்துபொந்தா போகுறீங்க
சாகசமெல்லாம் செய்யுறீங்க
கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு
கண்ணீரையும் வரவைக்கிறீங்க
மோட்டார் சைக்கிலபோறவங்க
முகத்திரையும் வீனா போச்சு
மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி
முனகிகிட்டே போக வைக்கிறீங்க
சுவாசகோளாறு உள்ளவங்க
மூச்சுவிட முடியலிங்க
சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
சுகாதாரம் பற்றி யோசிங்க
சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
ReplyDeleteசுகாதாரம் பற்றி யோசிங்க//
சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை நன்றாக இருக்கிறது.
உண்மைதாங்கம்மா.நான் சிரமப் பட்டதாலே சொல்லத் தோணுது
Deleteரசித்து படித்தேன் :)
ReplyDeleteஅழகிய விழிப்புணர்வு !
தொடர வாழ்த்துகள்...
நம்மால் முடிந்ததை நயமாக சொல்வது நம் கடமையல்லவா?
Deleteநீங்க வந்ததுக்கு நன்றி
ada...:
ReplyDeleteஉண்மைதான் நண்பரே.சரியாக சொன்னேனா?
Deleteஅண்ணாச்சி அறிந்தால் சரி...!
ReplyDeleteநண்பரே அண்ணாச்சி என்று அன்பாக நாகரீகமாக சொன்னேன்.நீங்க சொன்னதுபோல் புரிந்துகொள்ளணும்
Deleteசுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும்
ReplyDeleteசுகாதாரம் பற்றி யோசிங்க
ஆட்டோகார அண்ணாசி
அறிவியல் கணக்கு என்னாச்சி
அண்ணாச்சிக்கு அறிவுரை சொன்னாச்சி ..!
ஆமாங்க அம்மாச்சி .கார் இருந்தாலும் இப்போ உள்ள ட்ராபிக்ல கார் ஓட்டமுடியலே அதனாலே இருசக்கர வாகனம் தான் வசதியா இருக்கு ஆனாலும் புகையால ரோட்டுல்ல இருசக்கர வாகனம் ஓட்ட முடியல.
Deleteஅண்ணாச்சி அண்ணாச்சி
ReplyDeleteநீங்க சொன்னது எல்லாம் மனசிலாட்ச்சி
கவிதையும் மனதை கொள்ளையாச்சி
அப்படிங்களா சேச்சி.புரிய வேண்டியவங்க புரிச்சா பிரச்னை போச்சி
Deleteஅருமை! சமூகத்தை நாமதான் பாதுகாக்க முடியும்.
ReplyDeleteஒவ்வொருத்தருக்கும் கடமை உள்ளது நண்பரே .சிறுதுளி பெருவெள்ளம் போல.அசைக்க அசைக்க அம்மியும் நகரும்ன்னு சொல்வது சரிதான்
Deleteநன்று!
ReplyDeleteகருத்தே சொல்லாவிட்டாலும் நன்றிங்க நீங்க வந்ததுக்கு.
Deleteஅண்ணாச்சிக்கு நல்ல விழிப்பு.
ReplyDeleteஆட்டோக் கார அண்ணாச்சிக்குன்னு சொல்லுங்க.நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க
Deleteஆட்டோகாரர்களுக்கு சொன்ன அறிவுரைக்கு நன்றி
ReplyDeleteஎல்லோருக்கும் புரிய வைக்க சிறு முயற்சி.
Deleteசூப்பர்! நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅட.. அருமையாக இருந்திச்சு
அழகான கவிதையாச்சு
இதைதெரியாம பலபேரு
வாழ்க்கையுமே வீணாச்சு....
நன்றிங்க,உங்க கருத்துக்கும் வாழ்த்துக்கும்
Delete// ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு
ReplyDeleteஅரிப்பு அதிகமா போயிடுச்சி //
அவர்கள் மண்னெண்ணெய் கலந்தும் ஓட்டுவார்கள்.
உண்மைதான் நண்பரே.ஆனால் ஆயில்தான் தேவைக்கதிகமா போடுறாங்க .
Deleteபெட்ரோல் விலை அதிகரிப்பு
ReplyDeleteகண்ணை கட்டுது....
மாதாமாதம் உயர்த்திக்கொண்டே போகிறார்கள்.
எங்குதான் சென்று முடியுமென்று
தெரியவில்லை..
எதிலும் அவசரம் ..விரைவு என்றாகிப்போன இவ்வாழ்வில்...
தேவையான விழிப்பேற்றும் கவிதை ஐயா ...
உண்மைதான்.அவசரத்தில் ஆபத்தையும்தானே சந்திக்க உள்ளது
ReplyDelete