வண்டின்சுவைத் தெரிவாயா ?.........
வண்டின் சுவைத் தெரிவாயா?
--------------------------------------------
மல்லிகைப் பூ தொடுத்து
மலராக அசைந்து வந்து
சொல்லாமல்ச் சொல்லியதாய்
செல்லமாய்ச் சீண்டுகிறாய்
சிறைபிடித்துத் தாண்டுகிறாய்
துள்ளி ஒடும் மானைப்போல
தோகைவிரித்த மயிலைப்போல
மேல்லபேசும் தேனிப்போல
மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே
மேனியெல்லாம் சிலிர்க்குதடி
காரிகையே கற்கண்டே
காலம் சொல்லும் பூச்செண்டே
கற்பனையை கடந்து வந்து
கட்டியணைக்க மாட்டாயா
கனிரசத்தை உணர்வாயா
உள்ளமெல்லாம் புஞ்சையாக
உழவனுக்கு மழையாக
எண்ணிகொள்ளத் தோனுதாடி
ஏக்கமின்னும் கூடுதடி
என்னருகே செல்லும்போது
வானமின்று வெளிச்சமழை
வந்திறங்கும் நேரமுன்னே
வாசமுல்லை மார்கழியே
வந்தென்னை அணைப்பாயா
வண்டின்சுவைத் தெரிவாயா
--------------------------------------------
மல்லிகைப் பூ தொடுத்து
மலராக அசைந்து வந்து
சொல்லாமல்ச் சொல்லியதாய்
செல்லமாய்ச் சீண்டுகிறாய்
சிறைபிடித்துத் தாண்டுகிறாய்
துள்ளி ஒடும் மானைப்போல
தோகைவிரித்த மயிலைப்போல
மேல்லபேசும் தேனிப்போல
மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே
மேனியெல்லாம் சிலிர்க்குதடி
காரிகையே கற்கண்டே
காலம் சொல்லும் பூச்செண்டே
கற்பனையை கடந்து வந்து
கட்டியணைக்க மாட்டாயா
கனிரசத்தை உணர்வாயா
உள்ளமெல்லாம் புஞ்சையாக
உழவனுக்கு மழையாக
எண்ணிகொள்ளத் தோனுதாடி
ஏக்கமின்னும் கூடுதடி
என்னருகே செல்லும்போது
வானமின்று வெளிச்சமழை
வந்திறங்கும் நேரமுன்னே
வாசமுல்லை மார்கழியே
வந்தென்னை அணைப்பாயா
வண்டின்சுவைத் தெரிவாயா
''..காரிகையே கற்கண்டே
ReplyDeleteகாலம் சொல்லும் பூச்செண்டே..''
நல்ல வருணனை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றிங்கம்மா.நீங்க வந்ததுக்கும் வாழ்த்தியமைக்கும்
Deleteநல்ல உவமானங்களுடன் அழகிய கவிதை! ரசித்தேன்... வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க இளமதி.தொடர்ந்து படிங்க கருத்து போடுங்க
Deleteஅட அட அட !!!காதல் ரசம் சொட்டுது...அருமையா இருக்கு
ReplyDeleteநன்றிங்கம்மா. நல்லா இருக்குங்களா அப்பா தொடர்ந்து படிங்கம்மா
Deleteமனம் மயக்கும் வார்த்தைகள் ஐயா...
ReplyDeleteநன்றிங்க நண்பரே.நீங்க தளத்துக்கு வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க
Deleteஎளிமையான உவமைகளுடன் சுவையான கவிதை...
ReplyDeleteஆம் எளிமையாகதான் எழுதினேன்.நீங்க தளத்துக்கு வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க
Delete"உள்ளமெல்லாம் புஞ்சையாக
ReplyDeleteஉழவனுக்கு மழையாக"... மிகவும் அருமை! நல்ல கவிதை!
நன்றிங்க கிரேஸ்.ஒடர்ந்து தளத்துக்கு வாங்க உங்க கருத்தை சொல்லுங்க
Deleteமிகவும் அருமை....
ReplyDeleteநன்றிங்க தனபாலன்
Deleteவானமின்று வெளிச்சமழை
ReplyDeleteவந்திறங்கும் நேரமுன்னே
வாசமுல்லை மார்கழியே
அழகான கவிதைக்கு வாழ்த்துகள்..
வாழ்த்துக்கு நன்றிங்கம்மா.தொடர்ந்து படிங்கம்மா
Deleteஉள்ளமெல்லாம் புஞ்சையாக
ReplyDeleteஉழவனுக்கு மழையாக
எண்ணிகொள்ளத் தோனுதாடி//
காதல் கவிதையிலும் உழவன் நலம்!
அருமையான கவிதை.
நன்றிங்க .தொடர்ந்து படிங்க கருத்துக்களைச் சொல்லுங்க
Deleteகாதல் ரசம் அருமை
ReplyDeleteநன்றிங்க.தொடர்ந்து படிங்க
Deleteஅன்புள்ளம் கொண்ட கவியாழி சாருக்கு,
ReplyDeleteநான் கொடுத்த வாக்கை மீறுவதாக நினைக்கவேண்டாம், பெற்றோரை வனங்கும் உம் உத்தம குணத்தை பாராட்டவே கருத்திடுகிறேன். வலைப்பதிவுகளில் தம் பெற்றோரை குறிப்பிடுவதை இப்போது இரண்டாவது முறை கானூறும் போது மகிழ்சியடைந்தேன். பதிவர் ”பெயர் சொல்ல விரும்பவில்லை” (அவரு பேரே அதாங்க) இது போல் பெருமைப்படுத்தி இருப்பார்.
வந்தது வந்துட்டேன் உங்க கவிதை பத்தி ஒரு வரி: அபாரம்.
திருவாடானை ஆற்றலரசு.
வாசமுல்லை வந்து மயக்குகின்றாள்.
ReplyDeleteஅப்படிங்களா அப்பா தொடர்ந்து வாங்க
Deleteகவர்ந்திழுக்கிறது கவிதை.ஓசை நயம் இன்பம்
ReplyDeleteநன்றிங்க முரளிதரன்
Deleteகண்ணதாசன்,
ReplyDeleteகாரிகையே கற்கண்டே
காலம் சொல்லும் பூச்செண்டே
மற்றும்
மேல்லபேசும் தேனிப்போல
மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே
மேனியெல்லாம் சிலிர்க்குதடி
அழகான இந்த வரிகள் தந்த உற்சாகத்தில் விசிலடித்தேன்.அருமை அருமை. காதல்கவிதைகளில் பின்னுகிறீர்கள்.
சந்தானகிருஷ்ணன்
வண்டுக்குத் தெரியும் மலரின் சுவை(தேன்);மலரும் தெரிந்துகொள்ள வேண்டும் வண்டின் சுவை!
ReplyDeleteநன்று கண்ணதாசன்
உண்மைதான் அன்பரே.நீங்கள் என்பக்கத்துக்கு வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்
Delete