தெய்வங்கள்

தெய்வங்கள்

பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

              பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

                                                             ***********


"பட்டகாலில்படும் கெட்ட குடி கெடும்" இது பழமொழி என்பது எல்லோரும் அறிந்ததே .ஆம் நண்பர்களே  நேரத்தில் இந்த பழமொழியை  பொருத்தமான தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.நமது தமிழ்ச்  சொந்தங்களை இழந்து தவிக்கும் நம் மக்களின்மீது மீண்டும் குற்றம் சுமத்தி கொல்லும் செயலுக்கு நம்மினத்தவர்களே துணைபோகலாமா? நம் தமிழ் மக்ககளே குடிகெட்டு கஷ்டப்படுகிறார்கள் 

நம்மைக் கெடுத்து நம்மவரையே கொன்று இன்று நம் நாட்டில் நல்லவர்போல் 
நடிக்கும் திறமை யாருக்கு வரும்  அரசியல் என்ற போர்வையில் ஆளுக்கொரு நியாயம்  அவசியமா ? தகுமா?அதிலும் தமிழனே சாதனைப் படைக்கிறான்.
மற்ற இனத்தினர் வேடிக்கைப் பார்க்க நம் மக்களே சண்டை போட்டுக் கொள்ளும் கொள்ளும் போக்கு தேவைதானா?

இன்றைய சூழலில்சொந்தங்களை இழந்து சொத்துக்களையும் இழந்து தவிக்கும் நம் மக்களுக்கு உதவ முன்வராதவர்களே நம் மக்களைப் பழித்தும் இழித்தும் பேசும் நிலை தேவைதானா ? அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அரசியலே தீர்வே அன்றி இத்தனைபேர் உயிர்துறக்கும்  இழிநிலைக்கு துணை புரியும் கொடுமை எங்கேனும் உள்ளதா? 

எத்தனை உயிர்கள் ஏதுமறியா நிலையில் எண்ணிலடங்கா குழந்தைகள் பெரியவர்கள் என்ன  தவறிழைத்தார்கள்.உயிர்பிழைக்கவேன்டியே ஒளிவிடம் தேடியவர்களை  கொத்துக் கொத்தாய் கொன்றது நியாயமா?போன உயிர் திரும்ப வராது ஆனால்  அந்த ஆன்மாக்கள் அவர்களைச் சும்மா விடுமா?

எல்லா மதமும் ,இனமும் கொலை,கொள்ளை  பாவம் செய்வதை  தவறென்றே  சொல்கிறது.ஆனால் நம்மினம் மட்டுமே அதையும் நியாயப்படுத்துகிறது.ஏன் இந்த முரண்பாடு அரசியல் பிழைப்புக்காக அம்மா.அப்பா,அண்ணன் ,தம்பி ,அக்கா,தங்கை போன்ற உறவுகளையே  இழந்தும் அதை நியாயப்படுத்துவது  சரியா? முறையா?

மீண்டும் மீண்டும் நம்மீதே பழிசுமத்தி நமக்குள்ளே ஒற்றுமையை  நசுக்கி காரியம் சாதிக்கும் கயவர்கள் நிச்சயம் உலக மக்களால் பழிக்கப்படுவார்கள் .அதன்பின் பாவத்தின் கொடுமையை நிச்சயம் அனுபவிப்பார்கள்,காலமும் மாறும் ஒருநாள் காட்சியும் மாறும் சற்றே சிந்திப்பீர் கொடுமையா?அரசியல் கோட்பாடா? நியாயமில்லையே

ஆம் தமிழா நமக்காக அப்போதே இந்த பழமொழியை சொன்னார்களோ .இப்போது நடக்கும் எல்லா நிகழ்வுகளுமே நம்மினத்தைக் கொண்டே நம்மையே அழிக்கும் இச்செயலுக்கு நம்மவர்களே  நம் மக்களையே  காட்டிக் கெடுக்கலாமா? எனவே சிதறுண்டு கிடக்கும் நம் மக்கள் மனதால் மேலும் சிதைக்கப் படாமல்  ஒற்றுமையாய் வாழ  மறுவாழ்வுக்கு உதவ வேண்டும்.

தமிழ்க் குடிக் கெடக்கூடாது  ஒன்றுபடுவோம் ...வெல்வோம்.... தமிழால் உயர்வோம் .

*** கவியாழி***
      சென்னை

Comments

  1. ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்...

    நல்வாழ்வு விரைவில் மலர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விருப்பம் போலவே நடக்கும்.நாம் ஒற்றுமையுடன் இருந்தால்

      Delete
  2. தமிழ்மணம் காலை முதல் வேலை செய்யவில்லை...

    சிறிது நேரத்திற்கு முன் தமிழ்10...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே

      Delete
  3. தமிழ்க் குடிக் கெடக்கூடாது ஒன்றுபடுவோம் ...வெல்வோம்.... தமிழால் உயர்வோம் . நல் வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுபடுவோம் வெல்வோம் பின் தமிழ் உலகையே ஆள்வோம்

      Delete
  4. நல்ல ஆக்கம். சிந்தனைக்குரிய பதிவு...

    ”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே”

    நன்றாய் நாம் சிந்திதித்துச் சிறந்தால்
    வென்றே தீருவோம் பகையை
    வேரொடு சாய்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நடக்கும் நிம்மதி கிடைக்கும்

      Delete
  5. ஒன்று படுவோம் போராடுவோம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசியுடன் வெற்றி பெறுவோம்

      Delete
  6. மீண்டும் மீண்டும் நம்மீதே பழிசுமத்தி நமக்குள்ளே ஒற்றுமையை நசுக்கி காரியம் சாதிக்கும் கயவர்கள் நிச்சயம் உலக மக்களால் பழிக்கப்படுவார்கள் .அதன்பின் பாவத்தின் கொடுமையை நிச்சயம் அனுபவிப்பார்கள்,காலமும் மாறும் ஒருநாள் காட்சியும் மாறும் சற்றே சிந்திப்பீர் கொடுமையா?அரசியல் கோட்பாடா? நியாயமில்லையே

    உண்மைதான் ஐயா இது ஒரு வகையான தொற்று நோய் இதற்க்கு முக்கிய காரணம் சுயநலமே என்று இந்த சுயநலம் ஒழிகிறதோ அன்றுதான் எமக்கு விடிவு காலம் பிறக்கும் .இந்த சுயநல தொற்று நோயினால் தான் நாம் இன்று எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்கின்றோம் .இது மிகவும் வேதனைக்குரிய செயல் என்பதை சமந்தப் பட்ட சுயநல வாதிகள் உணரும் காலம் விரைவில் வரும் வர வேண்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  7. நிச்சயம் உணர்வார்கள் நேர்மையாய் நடப்பார்கள் .எல்லாமே மாறும் எல்லாமும் நாமே

    ReplyDelete
  8. உண்மைதான் ஐயா ,...நமக்குள்ளே ஒற்றுமை இருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட வாய்ப்பில்லை..(சாமானியர் முதல் அரசியல்வாதிகள் வரை )
    பார்ப்போம்... நம்மின் உண்மையான ஆதரவைத்தருவோம்

    ReplyDelete
    Replies
    1. அமைதியான போராட்டம் அடையும் நிச்சயம் வெற்றியை

      Delete
  9. பார்ப்போம் ............கண் கெட்ட பிறகாவது ............

    ReplyDelete
  10. இப்போதுதானே விழிப்பு வந்துள்ளது.அறவழியில் அமைதியான போராட்டம் நிச்சயம் வெற்றியைத் தரும்

    ReplyDelete
  11. நல்ல சிந்தனை.

    ReplyDelete
  12. நல்ல சிந்தனை.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more