தெய்வங்கள்

தெய்வங்கள்

அந்த நேரங்களில்.......

யாரும் பார்க்காத  நேரத்தில்
எப்படி நீ முத்தமிட்டாய்

நான் பேசாமல் இருந்தபோது
பிறகெப்படி கட்டியனைதாய்

தூங்காமல் நடிக்கும்போது ஏன்
துணையாக சேர்த்தனைதாய்

தீண்டாத நேரத்தில் நீ
தீயைஏன்  தூண்டிவிட்டாய்

வேண்டாமென நினைத்தபோது
வேண்டுமென்று அடம்பிடித்தாய்

வேண்டியதை  தூண்டிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே

தூண்டிலில் மண்புழுவாய்
துடிக்கவைத்து ரசிக்கிறாயே

இருநிமிட மௌனத்தில்
இடையிடையே கதைபடித்தாய்

இன்னுமின்று வேண்டினாலே
எதையோ பார்த்து சிரிக்கிறாயே

Comments

  1. இப்படி தூண்டி விட்டு வேடிக்கை காட்டுவதல்லவோ சுகம்...!!

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைப்புதான் அண்ணாச்சி பழைய நினைப்புதான்

      Delete
  2. Good post. This is really inspiring. Thank you.
    cricket live streaming

    ReplyDelete
  3. வண்டி வேகமாகப் போகிறது

    ReplyDelete
    Replies
    1. வீடு வந்து விட்டால் வேகமேடுக்கத்தானே செய்யும் அய்யா

      Delete
  4. அழகான சொல்லாடல், அருமை. வாழ்த்துக்கள் சகோதரரே!

    எப்படி எப்படி இது ஆகும் என்றே
    செப்படி செப்படி என்கின்றீர் உம்
    சொற்படி கவியும் சொலிக்கிறதேயென
    இப்படிச் சொன்னேன் வாழ்த்துக்களே!

    ReplyDelete
    Replies
    1. நற்கவி படைதிட்ட நங்கையே
      பொற்கிழி கொடுக்கத்தான் ஆசை

      Delete
  5. நாதெள்ள முத்துகிருஷணாவும் கோபு சன்முகமும் அப்போ என் தோழர்கள். முத்து புளியோதரை விரும்பி சாப்பிடுவான் ஆனால் சன்முகத்துக்கு கணக்கு சரியாக வராது என்பதால் புளிசாதத்தை தொட மாட்டான். இப்போ முத்து பெரிய கணக்கராக இருக்கிறான். ஆடி கார் ஓட்டுகிறான். சன்முகம் பெயிண்டர் ஆகிவிட்டான் ஆனால் இன்னும் கோண்டா பைக் தான் ஓட்றான்.

    புதிதாக நினைவுகளை கட்டுரையாக சமைக்க பழகுகிறேன். நல்லா வந்திருக்கா சார்?

    ReplyDelete
  6. Replies
    1. நன்றிங்க சார் சீக்கிரம் தமிழுக்கு வாங்க

      Delete
  7. தீண்டாத நேரத்தில் தீயை ஏன் தூண்டி விட்டாய்? நல்ல கேள்வி! தூண்டி விட்டு ரசிப்பதில்தான் அழகிருக்கிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தூண்டிவிட்டு துரோகம் செய்யக்கூடாது

      Delete
  8. கவியாழி ஐயா...
    என்ன இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்...?
    நான் என்னவென்று பின்னோட்டமிடுவது....?

    ReplyDelete
    Replies
    1. உங்களினால் எப்படி எழுதசொல்லுவது ? சரியோ தரவறோ சொன்னால்தான் எனக்குத்தெரியும்

      Delete
  9. //தூண்டிலில் மண்புழுவாய்
    துடிக்கவைத்து ரசிக்கிறாயே//
    ரசித்த வரிகள்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more