பதிவர்கள் கூட்டம்
நான் சுய அறிமுகம் செய்யும்போது
நண்பர்களுடன் நான்(நன்றி வெங்கட்)
ஆர்வமாய் வந்தார்கள் அனைவரும்
ஆங்காங்கே பேசினார்கள் மகிழ்ந்தார்கள்
ஆனந்தமாய் சிரித்தார்கள் இணைந்தார்கள்
அன்பாய் எல்லோரும் இருந்தார்கள்
இன்பமே முகத்தில் தெரிந்தது
இளமையாய் இருந்தது மகிழ்ந்தது
துன்பமும் மறந்தது நட்பால்
தூரமாய் அன்றுமே விலகியது
பண்பால் சிறந்த படைப்பாளிகள்
பசியைத் துறந்த உழைப்பாளிகள்
நல்லதே சொல்லும் நல்லோர்கள்
நட்பையே போற்றும் நல்பதிவர்கள்
இளமை மறந்த பெரியோர்கள்
இன்பமும் வெறுக்காத இளைஞர்கள்
இன்னுமே மணமாக பையங்கள்
இனிமேல் தேடப்போகும் அவர்களும்
சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள்
சூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள்
சொந்தம் கொண்டு அழைத்தார்கள்
சொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள்
---கவியாழி---
மறக்க முடியாத இனிய சந்திப்பு...
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Deleteஉங்கள் சிரிப்பு தெய்வீக (சிறப்பு) சிரிப்பு...
ReplyDeleteஅப்படீங்களா மிக்க நன்றி
Deleteதீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...
ReplyDeleteலிங்க் : ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி
பார்த்தேன் .பங்குகொள்கிறேன்
Deleteசொந்தம் கொண்டு அழைத்தார்கள்
ReplyDeleteசொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள்
>>
நிஜம்தான். இன்னும் அந்த மகிழ்ச்சி அலை மனசுல ஓடிக்கிட்டுதான் இருக்கு
அப்படிங்களா? மச்சானிடம் சொல்லி அடுத்தமுறை அழைசுக்கிட்டுவாங்க
Deleteஅத்தனை சிறப்புகள் அங்கு கண்டே
ReplyDeleteஇத்தனை மகிழ்வாய் எடுத்தியம்பி சித்தம்
மகிழ்ந்திடச் சீரெடுத்துப் பாடினீர் அதனழகு
முகிழ்கிறதே சிரிப்பாய் உம் முகத்தில்!
உங்கள் படமும் கவிதையும் சிறப்போ சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோதரரே!
நன்றிங்க சகோ.உங்களிடம் கைபேசியில் பேசியது மிக்க மகிழ்ச்சி
Deleteஎன்னால் சந்திப்புக்கு வர இயலவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக சந்திப்போம்.
ReplyDeleteநீங்கள் விரும்பியிருந்தால் வந்திருக்க முடியும்
Deleteஅந்த விழாவுலயே புன்சிரிப்போடு மேடைக்கு வந்து அதே சிரிப்போடு அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரே பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன். உங்க கவிதை மாதிரியே அழகா இருக்குங்க உங்க புன்னகையும்... keep it up.
ReplyDeleteஅப்படிங்களா மிக்க மகிழ்ச்சி.நன்றிங்க ஜோசப்.
Delete''..சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள்
ReplyDeleteசூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள்..''
nanru. vaalka.
Vetha.Elangathilakam.
உண்மைதான்.எல்லோருமே எப்போதுமே மகிழ்ச்சியாய் சந்தித்து உரையாடிக்கொண்டே இருந்தார்கள்.நானும் அப்படித்தான்
Deleteநான் உங்களை மதியம் சந்தித்தபோது வேறு உடையில் இருந்தீர்களே!
ReplyDeleteஉங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி!
ஆமாம்.அவசர வேலையாய் வீட்டிற்க்கு சென்று திரும்பினேன்.உங்களை கண்டதும் எனக்கும் மகிழ்ச்சியே.சென்னை மீண்டும் வந்தால் கைபேசியில் அழைக்கவும். வீட்டுக்கு வாங்க
Deleteஅருமையான சந்திப்பை அழகாய் சொன்னது கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுரேஷ்.உங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி
Deleteசொந்தம் கொண்டு அழைத்தார்கள்
ReplyDeleteசொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள்//
அழகான கவிதை .
வாழ்த்துக்கள்.
நடந்ததை நினைத்தேன் எழுதினேன்.நன்றி
Deleteடிபிஆர்.ஜோசப்5 September 2013 12:30
அந்த விழாவுலயே புன்சிரிப்போடு மேடைக்கு வந்து அதே சிரிப்போடு அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரே பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன். உங்க கவிதை மாதிரியே அழகா இருக்குங்க உங்க புன்னகையும்... keep it up.
நான் உணர்ந்த உணர்வை அப்படியே
ReplyDeleteபடம் பிடித்துக் காட்டிய அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்களோடு இருந்த மூன்று நாட்களும் எனக்கு மகிழ்ச்சியும் புத்துணர்வும் தந்தது
Deleteஎல்லோரும் புகைப்படம் போட்டு கலக்கும்போது நீங்க கவிதையால் மகிழ்வுபடுத்துகிறீர்கள்
ReplyDeleteஉணர்ச்சியை எனக்குத்தெரிந்த மொழியில் வித்தியாசயமாய் கூறுகிறேன்.
Deleteஅவரவர் வலைப்பக்கத்தில் எழுத்துக்களைப் பிரசவித்து வந்தவர்களின் இன்முகங்களை நேரில் கண்டு பரவசம் அடைந்தவராய் கவிதைகளில் அனுபவத்தை வடித்துள்ள விதம் அருமை அய்யா. அடுத்த வருடம் தங்களுடைய இன்முகம் காண காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களில் நானும் அடக்கம் என்று சொல்வதில் மகிழ்ச்சி. நன்றி அய்யா.
ReplyDeleteஓஹோ...இப்பவே வரிசைக்கு வந்தாச்சா? சரிங்க நண்பரே வாங்க
Deleteகவிதை கலக்கல் ஐயா..
ReplyDelete"நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்களோ அதிலேயே விளக்கும் போது எல்லாமே பளிச்சிடும்" என்று ஒரு ஆங்கிலக் கவிஞன் கூறியது போல நீங்கள் சிறந்து விளங்கும் கவிதை வாயிலாக பதிவர் சந்திப்பை விளக்கியது சிறப்பு.
நன்றிங்க ஆவி.முடிந்ததை செய்கிறேன் முயற்ச்சியில் எழுதுகிறேன்
Deleteசொந்தம் கொண்டு அழைத்தார்கள்
ReplyDeleteசொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள்! அருமை கற்பனையில் உணர்கின்றேன் கடல் கடந்து!
அடுத்தமுறை நீங்களும் வாங்க .இந்த நிகழ்வு இனிமேல் தமிழ் பற்றுள்ள அனைத்து நாட்டினரும் பங்குபெரும்படி இருக்கும் என்பது எண்ணம்.
Deleteபடங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவஸந்த நினைவுகளை மீண்டும்
ReplyDeleteநினைவூட்டியமைக்கு நன்றி
வாழ்த்துக்களுடன்
தங்களின் சித்தம் என் மகிழ்ச்சி
Delete