தெய்வங்கள்

தெய்வங்கள்

"முயன்றால் முடியும்"

        வழக்கத்தில்  " முயன்றால் முடியும்" , "முயற்ச்சித் திருவினையாகும் ", "முயற்சியில்லாதார் தோல்வி அடைவார்கள் ", "முயற்சி இல்லாதார் இகழ்ச்சி அடைவர்" இப்படி பல பொன்மொழிகளையும் பழமொழிகளையும் நாம் அறிந்தே கேட்டுவருகிறோம் சொல்லிவருகிறோம். உண்மை என்ன?

            அதற்காக என்னென்ன திட்டமிடல் செய்து வருகிறோமா இல்லையே அதையும் முயற்சிச் செய்யவேண்டும் என்றே ஒவ்வொருமுறையும் காலம் கடத்தி வருகிறோம்.இதனால் யாருக்கு என்ன பயன்  என்பதை அறியாமலே சிலநேரங்களில் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வதாய்  அமைந்துவிடுகிறது.  ஆனால் முயன்றால்  மனதும்  நம்மை அவ்வாறு  ஏமாற்றுவதில்லை

        இதற்குத் தீர்வென்ன எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்ற வரைமுறையை நாம் தீர்மானிதாலோலிய எந்த விஷயத்திலும்  வெற்றி என்பது எளிதில்  கிடைக்காது.வரைமுறையை வரையறுக்க  வேண்டும் . தெளிவான தீர்க்கமான திட்டமிடல் வேண்டும்.அதற்காக மட்டுமே உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும்.

        எல்லா வெற்றித் தோல்விக்குமே  காரணம் மனம்சார்ந்த  உணர்ந்த விஷயம்தான்.மனதில் உறுதியும் அழுத்தமும்  இல்லாவிட்டால் அச்செயலை செய்து முடிக்க  இயலாது. மனவலிமையே வெற்றிக்குக் காரணம். இலக்கு நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும் அதன்படியே குறிக்கோளாய்  செயல்பட வேண்டும் உழைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

        இங்கு உழைப்பு என்பதும் முயற்சியே அந்த முயற்சிக்கு உழைப்பே காரணமாய் இருக்கிறது.உழைக்கத் தெரியாதவன் வெற்றிபெறுவதில்லை .திருடனுக்கும் உழைப்புடன் கூடிய முயற்சியேத் தேவைப்படுகிறது மாணவர்களுக்குப் படிப்பு என்ற உழைப்பு .விவசாயிக்கு காலம் நேரம் பார்க்காமல் உழைத்தால்தான்  நேர்த்தியான வெற்றிக் கிடைக்கும்.

        சிலநேரங்களில் நாம் நினைப்பதும் நடப்பதும் வேறுவேறாய் இருக்கும் .அங்கு நினைப்பு மட்டுமே இருக்கிறது செயலாக்கம் முயற்சி  உழைப்பு இருப்பதில்லை அதனால்தான் 'நம் நினைப்பு பொழைப்பை கெடுக்குது" என்ற வழக்காடு சொல் இருக்கிறது. வெற்றி என்ற மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால்  முயற்சி என்ற உழைப்பும் அவசியம்  தேவைப்படும்.

  முயற்சியுங்கள் முன்னேறமுடியும் முன்னேற்றமே வாழ்க்கையைச் சந்தோசமாக கொண்டு செல்லும்.இகழ்ச்சியைத் தூர வையுங்கள்  அதையே வெற்றிப்பாதைக்கு அடிக்கல்லாக இட்டு வாருங்கள் . ஓவ்வொரு அடியும்  கவனமாக காலெடுத்து வைத்தால்  வெற்றி என்ற கனியைச் சுவைக்க முடியும்.ஆம் முயன்றால் முடியும் .

வாழ்த்துக்கள்.



----கவியாழி----






Comments

  1. ஆமாம் ஐயா... ஒவ்வொன்றும் வலிமையான கருத்துக்கள்... த.ம.2

    ReplyDelete
  2. வணக்கம்
    முயன்றால் முடியும் என்ற தலைப்பில் அருமையாக பதிவை எழுதியள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    ஒவ்வொரு வரிகளும் கருத்துமிக்கதாக உள்ளது. சிந்திக்க வைக்கிறது

    -நன்றி-
    -அன்புடன-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அடுத்த 'வெற்றிக்கோடு 'தயாராவது போல் தோன்றுகிறது ..கலக்குங்க !

    ReplyDelete
    Replies
    1. முயன்றால் முடியும்//இது எப்படி இருக்கு?

      Delete
  4. உற்சாகமூட்டும் கருத்துக்கள்...

    ReplyDelete
  5. வெற்றி என்ற மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால்
    முயற்சி என்ற உழைப்பும் அவசியம் தேவைப்படும்.

    கவியாழியின் கனிந்த வரிகள்
    கணையாழியாய் மின்னிடுகின்றன..

    வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா நன்றி.மிக்க மகிழ்ச்சியும்

      Delete
  6. முயன்றால் முடியும் உண்மைதான்...

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே ஏற்றுக்கொள்ள கூடியது

      Delete

  7. சிலநேரங்களில் நாம் நினைப்பதும் நடப்பதும் வேறுவேறாய் இருக்கும் .அங்கு நினைப்பு மட்டுமே இருக்கிறது செயலாக்கம் முயற்சி உழைப்பு இருப்பதில்லை அதனால்தான் 'நம் நினைப்பு பொழைப்பை கெடுக்குது" என்ற வழக்காடு சொல் இருக்கிறது//

    அருமையாகச் சொன்னீர்கள்
    விளக்கம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்




    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கையா .இனி இதுபோலவே எழுத விரும்புகிறேன்

      Delete
  8. அருமை!
    ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  9. //வரைமுறையை வரையறுக்க வேண்டும் . தெளிவான தீர்க்கமான திட்டமிடல் வேண்டும்// உண்மை உண்மை..அருமையான பதிவிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கிரேஸ் .தொடர்ந்து வாங்க

      Delete
  10. தேடலும் முயற்சியும் தேவையானவை வாழ்க்கைக்கென்று
    மிக மிக அருமையானதொரு விளக்கம்.
    மனதில் பதிக்க மறைந்திடும் துயரங்கள்!..
    சிறந்த ஆக்கம் சகோதரரே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சோகமும் கூட சுகமாக்கும் சுமைகளே

      Delete
  11. உற்சாகம் தரும் தன்னம்பிக்கை வரிகள் !

    ReplyDelete
  12. தன்னையறிந்து திட்டமிட்டு செய்யும் ஒவ்வொரு செயலும் நற்பலனைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. //திருடனுக்கும் முயற்சியுடன் கூடிய உழைப்பே தேவை// சிந்திப்பின் உச்சம். நன்றி அய்யா.

    ReplyDelete
  13. நன்றிங்க தம்பி பாண்டியன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more