Sunday, 20 October 2013

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே
நாகரீகம் மறந்து சிரிப்பாரோ
நாணயம் மறந்த பேச்சாலே
நல்லவர் மனதை வதைப்பாரோ

அறிவும் மழுங்கி இளிப்பாரோ
ஆடைத் துறந்து  இழப்பாரோ
அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ
அடிமை மதுவால் ஆவாரோ

குடியால் மென்மை துறப்பாரோ
குடும்பம் இழக்க நினைப்பாரோ
குழந்தை பெறவே மறுப்பாரோ
குணத்தை இழந்து தவிப்பாரோ

பெருமை அடைந்து மகிழ்வாரோ
பணத்தை அழித்து திரிவாரோ
பெண்ணின் சாபம் பெறுவாரோ
பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ

மிகுந்த குடியால் குடும்பமே
மேன்மை இழந்தும் தவிக்குமே
மற்றோர் மனதும் வருந்தியே
மனிதனை சிரிக்க வைக்குமே

இல்லறம்  அழிய  காரணம்
இதையேன் மகிழ்வாய் நினைக்கனும்
இனியும் சிலநாள் தவிர்க்கனும்
இனிமை வாழ்வும் தொடரனும்


===கவியாழி===


38 comments:

 1. அனைத்தும் உண்மையான வரிகள்... முழுமையாக தவிர்த்து விட்டால் என்றும் இனிமையே... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 2. நாஞ்சிலாரின் பின்னூட்டம்
  மிக மிக அற்புதம்
  நானும் அதையே பின்மொழிகிறேன்
  கலக்கல் கவிதை

  ReplyDelete
 3. குடியை குடிக்கும் குடி என்பதை சிம்பிளா சொல்லிட்டீங்க தலைவரே!!

  ReplyDelete
 4. குடியால் வரும் கொடுமை!..
  கூறிய விதம் அருமை!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 5. //இல்லறம் அழிய காரணம்
  இதையேன் மகிழ்வாய் நினைக்கனும்//
  மதுவுக்கு அடிமையாகி எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் இன்று, நன்கு உரைக்க சொல்லியிருக்கிறீர்கள் அய்யா. குடிமகன்களின் மனதில் ஆழ பதிந்து மாற்றங்களைக் கொண்டு வரட்டும் தங்கள் கவிவரிகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் உணரனும் .உணர்த்தணும்

   Delete
 6. அன்புள்ள

  இந்தக் கவிதை மட்டுமல்ல குடிப்பழக்கம் குறித்த எல்லாப் படைப்புக்களும் போராடுகின்றன. ஆனாலும் இதைக் குறைக்க முடியவில்லை. கூடுதலாக பள்ளி மற்றும் கல்லுர்ரி மாணவர்களும் அதிகாலையிலேயே டாஸ்மாக் கடையில் சீருடையில் நிற்பதைப் பார்க்கையில் மனசு நொந்துபோகிறது.

  இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்குப் பாடம் போதிக்கும் கல்லுர்ரி மற்றும் பல்கலைக்கழக அளவில் எந்த ஒருநிகழ்வாக இருந்தாலும் தண்ணி பார்ட்டி என்று ஆசிரியர்களே குழுமும்போது இந்த சமுகம் எப்படி மீளும்?

  மட்டுமல்ல ஒருநாள் பழக்கம் என்றாலும் ஒருநிமிடப் பழக்கம் என்றாலும் குடிகாரர்கள் மட்டும் சேர்ந்துகொள்வார்கள். அந்நியோன்யமாகப் பழகுவார்கள். இதில் சாதிபேதம் இல்லை. ஆனால் இதில் குடிக்காதவன் எதற்கும் லாயக்கற்றவன் என்கிற பார்வை வேறு.

  இருப்பினும் எழுதிப் போராடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. குடிகாரர்களுக்கு சாதியோ மதமோ கிடையாது.
   வருகைக்கு நன்றி

   Delete
 7. நல்ல கவிதை.
  "..குழந்தை பெறவே மறுப்பாரோ.." என்ற வரி முக்கியமானது
  மதுவும், புகையும் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணம் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. மருத்துவரும் உண்மைதான் என்பதைச் சொல்லிவிட்டால் மனமாற்றம் வேண்டுமல்லவா?
   வருகைக்கு நன்றி

   Delete
 8. வணக்கம்
  ஐயா
  குடியால் மென்மை துறப்பாரோ
  குடும்பம் இழக்க நினைப்பாரோ
  குழந்தை பெறவே மறுப்பாரோ
  குணத்தை இழந்து தவிப்பாரோ

  நல்ல வரிகள் ரசித்தேன் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 9. எந்த குடிகாரனாவது கேட்கிறான்னா பார்ப்போம் !
  த,ம 6

  ReplyDelete
  Replies
  1. மறக்(க) முடியாத உண்மைதான்.

   Delete
 10. உண்மையான வரிகள்...

  எந்த குடிகாரனாவது கேட்கிறான்னா பார்ப்போம் !

  ReplyDelete
 11. குடித்துத் திரபவர் படித்துத் திருந்தினால் சரி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றி

   Delete
 12. நல்ல கவிதை...

  எந்த குடிகாரனாவது கேட்கிறான்னா பார்ப்போம்

  ReplyDelete
 13. அருமையான கவிதை....
  உண்மையான வரிகள்...
  வாழ்த்துக்கள் ஐயா....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 14. குடி கெடுக்கும் குடியைப் பற்றி அழுத்தமாக சொளிவிட்டது கவிதை .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 15. அருமையான விழிப்புண்ர்வு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்