மீசை மட்டுமே அழகா
மீசை இருந்தால் அழகேதான்
மாதமும் மழித்தால் நல்லதுதான்
ஆசை அதனால் குறையாது
ஆயுளில் அதனால் பயனேது
மீசை இல்லா முதியோரே
மீண்டும் வசந்தம் கேட்பாரோ
மீண்டும் மீசை வையுங்கள்
மிகுந்த இன்பம் கொள்ளுங்கள்
ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே
அய்யா பெரியவர் என்னிடமே
அதனால் கடிந்தே பேசியதால்
என்னா செய்வேன் இளையவன்நான்
எப்படி மறுத்தே சொல்லிடுவேன்
அய்யா வயதில் மூத்தோரே
அய்ந்தாம் நிலையில் உள்ளவரே
அடியேன் என்னை வெறுக்காதீர்
அன்பைக் கொடுக்க மறக்காதீர்
மாதமும் மழித்தால் நல்லதுதான்
ஆசை அதனால் குறையாது
ஆயுளில் அதனால் பயனேது
மீசை இல்லா முதியோரே
மீண்டும் வசந்தம் கேட்பாரோ
மீண்டும் மீசை வையுங்கள்
மிகுந்த இன்பம் கொள்ளுங்கள்
ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே
அய்யா பெரியவர் என்னிடமே
அதனால் கடிந்தே பேசியதால்
என்னா செய்வேன் இளையவன்நான்
எப்படி மறுத்தே சொல்லிடுவேன்
அய்யா வயதில் மூத்தோரே
அய்ந்தாம் நிலையில் உள்ளவரே
அடியேன் என்னை வெறுக்காதீர்
அன்பைக் கொடுக்க மறக்காதீர்
வீசைக் கணக்கினில்
ReplyDeleteமீசை இருப்பது மட்டும்
வீரமில்லை என்கிற பாடலை
நினைவுறுத்திப் போகுது தங்கள் பதிவு
பாட்டுக்குத்தலைவன் நீங்க சொன்னா சரிதான்
Delete// ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ReplyDeleteஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே
//
நிதர்சனமான வரிகள்
நன்றிங்க நண்பரே
Deleteநல்லாவேச் சொன்னீங்க ஐயா...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்
Deleteமீசை பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க.
ReplyDeleteஅழகான பாடல்...
நன்றிங்க வெற்றிவேல்
Deleteமீசைக்கு ஒரு கவிதையா!? ரைட்டு
ReplyDeleteசரிதான்.நன்றி
Deleteஆண்களுக்கு மீசை அழகு என்பது என் கருத்து
ReplyDeleteமீசை எல்லோருக்கும் அழகு என சொல்லிவிட முடியாது !
ReplyDeleteமீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா ..பாடல் நினைவுக்கு வருகிறது !
அப்படிங்களா அன்பரே
Deleteவட இந்தியர்கள் மீசை வைப்பதில்லை.
ReplyDeleteஆனால் நமக்கோ இங்கு அது ஒரு வீரத்தின் அடையாளம்.
மீசையைப் பற்றிய நுணுக்கமான வேடிக்கையான
பதிவை ரசித்தேன்.
என்னால் இயன்றதை இயல்பாய் சொல்கிறேன்
Deleteதூசு தூசு என்று துரத்திவிட்டாலும் யாவையுமே
ReplyDeleteமீசைமேல் கொண்ட ஆசை
ஆயுள்வரை போகாதென்று அசத்தலாக வடித்த கவி அருமை!
வாழ்த்துக்கள் சகோ!
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க இளமதி
Deleteஅழகான கவிதை... ரசித்தேன்.
ReplyDeleteநன்றிங்கயா
Deleteமீசைக் கவிதை அருமை! ஒரு காலத்தில் மீசை வைத்து பின் எடுத்து பின் வளர்த்து இப்போது விட்டு விட்டேன்! பழைய நினைவுகள் கிளறிவிட்ட கவிதை! நன்றி!
ReplyDeleteஅடிக்கடி மழித்தாலும் தவறில்லையே
Deleteமீசை இல்லாத ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா? உங்கள் அனுபவம் எப்படி?
ReplyDeleteநீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
Deleteவணக்கம்
ReplyDeleteமீசை பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீசை மீது ஆசை வைத்து ஒரு கவிதை!
ReplyDeleteஆமாங்க அய்யா
Deleteநல்லா சொல்லி நிருக்கீங்க ஐயா..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க நண்பரே
Deleteமீசை அனைவருக்கும் அழகான ஆசை தான். கவிதை வரிகள் சிறப்பு அய்யா. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete