திரண்ட பாறையுமே தள்ளி
தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி
திசையெங்கும் செழிக்க வைத்து
வனத்தையும் வயலையும் காத்து
வானம் மகிழ வந்தாய்
பலஊர்கள் மைல்கள் தாண்டி
பாமரனும் மகிழ்வாய் வாழ
பரந்து விரிந்த பாதைவழியே
பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய்
கிடந்த கற்கள் மலைகள்
கடந்தும் உடைத்தே நடந்து
அடர்ந்த வனம் செழிக்க
அமைதியாக உருட்டிச் சென்றாய்
திரண்ட பாறையுமே தள்ளி
திருட்டுத் தனமாய் கடத்தி
வறண்ட இடத்திலும் சென்று
வழியெங்கும் சமன் செய்தாய்
கண்குளிரக் காட்சி தந்த
கடவுளாய் போற்றி வந்த
தண்ணீரில் கடந்து வந்து
தவமாகக் காத்து நின்றாய்
சுரண்டலுக்கு ஆசைப் பட்ட
சுயநலக் காரர்களின் கண்ணில்
சூழ்ச்சிக்குத் தப்ப மறந்து
சுரண்டி சுரண்டி மடிந்தாய்
தினந்தோறும் மணல் அள்ளியதால்
திசையெங்கும் வறட்சி வந்தே
பருவம் மாறிப் பகலவனின்
பார்வையால் பாமரனும் வருந்துகிறான்
நிலைமாறக் காரணம் தெரிந்தும்
நீயும் மௌனம் காப்பதேன்
நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
நேரம் கொண்டே அழிக்கவில்லை
விலைபேசும் நிலைக்கே சென்றாயே
வேதனை வேதனையே எமக்கு
விதியில்லை வீரமில்லைத் தடுக்க
வீணர்களின் விலைவாசி நாடகத்தில்
>>>>>> கவியாழி <<<<<<
சுயநலக்காரர்களின் சூழ்ச்சி அவனையே ஒரு நாள் சூழும்..
ReplyDeleteநல்லதொரு கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா...
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி
Deleteநிலைமாறக் காரணம் தெரிந்தும்
ReplyDeleteநீயும் மௌனம் காப்பதேன்
நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
நேரம் கொண்டே அழிக்கவில்லை
சரியான கேள்வி ..!
நேரம் வரும் நிம்மதியும் பிறக்கும்
Deleteதமிழ்மணம் வோட்டு பிளஸ் 1 +
ReplyDeleteதங்கள் வருகைக்கு. நன்றி
Deleteஆற்றின் மகிமையையும் அதன் அழிவையும் அழகாக வரித்து விட்டீர்கள்...!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
Delete//நிம்மதியைக் கெடுத்தவரை ஏன்
ReplyDeleteநேரம் கொண்டே அழிக்கவில்லை// சரியான கேள்வி..விடைதருவார் யாரோ?
அருமையான கவிதை ஐயா!
த.ம. 3
எப்படி முடியும் அவர்களையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete#சுரண்டி சுரண்டி மடிந்தாய்#சுரண்டப் பட்டு மடிந்தாய் என்பதே சரியாக இருக்கும் !
ReplyDeleteஇன்றைய சூழ் நிலையை நன்றாய் சொன்னீர்கள்!
த.ம 3
நன்றிங்க பகவானே
Deleteதினந்தோறும் மணல் அள்ளியதால்
ReplyDeleteதிசையெங்கும் வறட்சி வந்தே
பருவம் மாறிப் பகலவனின்
பார்வையால் பாமரனும் வருந்துகிறான்.நல்ல வரிகள் ...அருமை
தங்கள் வருகைக்கு. நன்றி
Deleteஅழகிய ஆற்றினைக் கவிப் பொருளாக்கி
ReplyDeleteஅருமையான கற்பனை!
வாழ்த்துக்கள் சகோ!
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி
Deleteஇப்படி சுரண்டி, சுரண்டி காசு, பணம் சேர்த்து பிள்ளைகளுக்கு வச்சுட்டா மட்டும் போதுமா!? சுத்தமான தண்ணி, உணவு, காத்துக்கு எங்க போவாங்கன்னு கொஞ்சமும் யோசிக்கலியே நாம்!!
ReplyDeleteசந்திரமண்டலத்துக்கும் போவாங்களோ?
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் மனதை கவர்ந்தவை வாழ்த்துக்கள்...ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி
Deleteஅருமையான கவிதை இன்றைய நிதர்சனத்தை அப்படியே படம்பிடிக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும். நன்றி
Deleteஇன்றைய பொருளாதார நிலைமையையும்
ReplyDeleteநடக்கும் நாடகத்தையும் உரக்கச் சொல்லும்
நல்ல கவிதை பாவலரே...
அரிசியல்வாதிகளின் சமீபத்து வியாபாரமே இதுதானே.
Deleteதங்கள் வருகைக்கு நன்றி
ஆற்றைக் கருவாக்கி ஆற்றாமையைக் கவியாய் தந்த அன்பு சகோதரரின் கவிதை அருமை அருமை. அழகிய கவியைத் தந்தமைக்கு நன்றிகள்..
ReplyDeleteஆம்.உண்மைதான்.தங்கள் வருகைக்கு நன்றி
Deleteசுரண்டிக் கொண்டே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
Delete//தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி
ReplyDeleteதிசையெங்கும் செழிக்க வைத்து
வனத்தையும் வயலையும் காத்து
வானம் மகிழ வந்தாய்//
கவர்ந்த வரி!
தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDelete