தெய்வங்கள்

தெய்வங்கள்

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால்
மனதும் துடிக்குது  தேடுது
மாலை ஆவதும் முன்பே
மயக்கமும் வருது  தொடருது

காரமாய் சாப்பிடத் தோணுது
காண்பதை யெல்லாம்  விரும்புது
காற்றையும் மீறியே அனலாய்
காத்தும் மூக்கிலே  வருகிறது

சூரியன் பார்த்ததும் மறையுது
சுகமாய் மறைந்தே போகுது
சில்லுன்னு காத்தும் வீசுது
சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது

துணையும் தேடிடும் நேரத்தில்
தூறலும் அவசரம் காட்டுது
தொடரவே வேண்டுது  விரும்புது
தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது

நறுமணம் வீசுது மணக்குது
நரம்பெல்லாம் சூடும் ஏறுது
நடுவிலே தூக்கம் கலைந்ததால்
நடுநிசிக் கனவாய் முடிந்தது



-----கவியாழி-----



Comments

  1. நறுமணம் வீசுது மணக்குது
    நரம்பெல்லாம் சூடும் ஏறுது
    நடுவிலே தூக்கம் கலைந்ததால்
    நடுநிசிக் கனவாய் முடிந்தது//


    அருமை அருமை
    கனவும் கவிதையும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  2. கடைசியில் பல்பு கொடுத்தாலும் அருமை !
    த.ம 2

    ReplyDelete
  3. நல்லாவே இருக்குது ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கார்கால உணர்வுகள்...
    இனிமையாக...

    ReplyDelete
  5. காரமாய் சாப்பிடத் தோணுது
    >>
    அப்படியே நம்ம வீட்டுக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிட்டாப் போச்சு

      Delete
  6. ரெம்ப அவஸ்தை.தீரவேணும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  7. மனமது மகிழ்கின்ற
    மழைக்காலக் கனவுகளோ...

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  8. அட இவ்வளவும் கனவா என்று மனம் திரும்பாமல்
    மகிழ்வாய் இருந்தது தாங்கள் சொன்னதைக் கேட்ட போது .
    வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  9. நல்ல வேளை! கனவு கலைந்தது! தப்பித்தோம்!

    ReplyDelete
  10. அட எதிர்பார்க்கவே இல்லை கனவா?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  11. மழைக்கால கவிதை அருமை! கடைசியில் கனவென்று முடித்துவிட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  12. மழைக்கால கனவுக்கவிதை அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  13. கனவு வந்ததில் அருமையான கவிதையும் பிறந்தது.

    ReplyDelete
  14. சாரலோடு சேர்த்து கவிதையையும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  15. கார் காலம் எல்லா உயிர்களும் துணை தேடும் காலம் !

    ReplyDelete
    Replies
    1. ஆம். உண்மைதான் ஸ்ரீனி

      Delete
  16. "நடுவிலே தூக்கம் கலைந்ததால்
    நடுநிசிக் கனவாய் முடிந்தது" என்றாலும்
    நல்லெண்ணங்கள் பகிரப்படுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  17. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  18. அருமை ஐயா...

    ReplyDelete
  19. "தலைப்பு- பரபரப்பு!!"

    ReplyDelete
    Replies
    1. ஏன் விறுவிறுப்பும் கூடதான்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more