தெய்வங்கள்

தெய்வங்கள்

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக
நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு
நம்மில்  சிலரும் காரணமாம்
நாணயம் மறந்தும் இருப்பதனால்

கிடைக்கிற  ஊதியம் போதலை
கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே
கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது
கொடுமையே மிஞ்சும் தங்கும்

பிள்ளையின் நலன் கருதியே
பிணியையும் மறந்த நிலையில்
படிக்கவும் பயணமும் செய்ய
பணத்தைக் கட்டியும் மீதியில்லை

உற்றார் உறவுக்கும் உதவி
உண்மையில் செய்ய் முடியாது
மற்றோர் மதிப்பு வேண்டி
மடத்தனமாய் செலவு செய்யாதே

சோர்வின்றி மனம் தளராது
சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு
மிகுந்த வருமானம் மட்டுமே
மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும்

அடுத்தத் தலைமுறை வந்திட்டால்
ஆனந்தம் வந்திடும் தந்திடும்
அதுவரை பொறுத்திடு படிக்கவை
அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து

அவனுக்கும் வந்திடும் முயற்சியே
அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே
அதையார் தடுத்திட முடியும்
அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும்



======கவியாழி=======




Comments

  1. ஆலோசனைகள் நன்று ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  2. ஒளிமயமான எதிர்காலம் கண்களில் தெரிகிறது !
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. தெரியட்டும் நண்பரே .வாழ்த்துக்கள்

      Delete
  3. ஏற்றம் வரும் என்ற நம்பிக்கை.....

    நம்பிக்கை தானே வாழ்க்கை.

    நல்ல கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.நம்பிக்கையே வாழ்க்கை

      Delete
  4. அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே
    அதையார் தடுத்திட முடியும்
    அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்
    வரிகள் உற்சாகப்படுத்துகின்றன .

    ReplyDelete
  5. மனதில் தெம்பு ஏற்ப்படுத்தும் வரிகள்...!

    ReplyDelete
  6. அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கட்டும்!.....
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  7. நல்ல கவிதை அய்யா! படுகிற கஷ்டம் எல்லாம் பட்டுவிட்டு, எதிர்காலத்தில் யாரோ நன்மையடைவார்கள் என்று சமாதானப்படுத்திக் கொள்வது நியாயமா என்று தெரியவில்லை. 'ரௌத்திரம் பழகு' என்று எட்டையபுரத்தான் சொன்னதை மறக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. வாழ்கையே சமாதானத்தோடுதான் வாழ்ந்துவருகிறோம்.என்ன செய்ய?

      Delete
  8. வணக்கம்
    ஐயா

    அருமையான கருத்துள்ள கவிதை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. //அவனுக்கும் வந்திடும் முயற்சியே
    அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே//
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க

      Delete
  10. சோர்வின்றி உழைத்து சிக்கனமாய் செலவழித்து வாழ சொல்கிறீர்கள்! அருமையான ஆலோசனை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதான் வருகைக்கு நன்றிங்க

      Delete
  11. அருமை, சாமானியனின் தளர்வை போக்கும் வரிகள், எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க

      Delete
  12. இருக்கட்டும்! வாழ்த்து!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கய்யா

      Delete
  13. அருமையான கவிதை..
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  14. அவனுக்கும் வந்திடும் முயற்சியே
    அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே
    அதையார் தடுத்திட முடியும்
    அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்//
    ஏற்றமாய் இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more