மேல்சாதி நானென்று சொல்கிறான் ?
மெத்தப் படித்தவனும் பெருமையாய்
மேல்சாதி நானென்று சொல்கிறான்
மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென
மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான்
ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை
ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான்
ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே
ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான்
உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும்
உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும்
உத்தமனாய் சாதியை வளர்க்கிறான்
உதவாத காரியத்தைச் சொல்கின்றான்
சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே
சங்கடங்கள் குறைவில்லை குடும்பத்திலே
சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான்
சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான்
இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில்
இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான்
இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான்
இவனெல்லாம் இன்ன சாதியென்று
எத்தனை நாள் இப்படியேச் சொல்லி
எல்லோரையும் பிரித்துப் பார்க்க
என்சாமியும் துணைக்கு வருகிறதோ
எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ
.......கவியாழி........
மேல்சாதி நானென்று சொல்கிறான்
மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென
மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான்
ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை
ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான்
ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே
ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான்
உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும்
உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும்
உத்தமனாய் சாதியை வளர்க்கிறான்
உதவாத காரியத்தைச் சொல்கின்றான்
சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே
சங்கடங்கள் குறைவில்லை குடும்பத்திலே
சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான்
சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான்
இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில்
இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான்
இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான்
இவனெல்லாம் இன்ன சாதியென்று
எத்தனை நாள் இப்படியேச் சொல்லி
எல்லோரையும் பிரித்துப் பார்க்க
என்சாமியும் துணைக்கு வருகிறதோ
எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ
.......கவியாழி........
இந்தப் பாகுபாடு என்று ஒழியுமோ...?
ReplyDeleteசாட்டையடி. தமிழமணம் பிளஸ் 2 வோட்டு!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
எத்தனை நாள் இப்படியேச் சொல்லி
எல்லோரையும் பிரித்துப் பார்க்க
என்சாமியும் துணைக்கு வருகிறதோ
எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ
கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒழியத்தான் வேண்டும்......
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகள்.
அருமை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை .உயர்வான கருத்துகள் ஓங்கி ஒலிக்கின்றன.ஒழியட்டும் இறைவன் படைப்பில் ஜாதி சொல்லி வேற்றுமை சொல்வதை.
ReplyDeleteஆரியர்கள் தாங்கள் உயர்ந்த இனமாக கருதினார்கள் மற்றும் தாங்கள் தனித்துவம் பெற்றவர்களாக நினைத்தனர் (அந்த நினைப்பு இப்பொழுதும் தொடர்கின்றது.) இரு இனங்களுக்கும் போராட்டம் தொடர்ந்தது.இதன் விளைவு திராவிடர்கள் தெற்கில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலை உண்டானது.
http://nidurseasons.blogspot.in/2013/10/blog-post_26.html
உன் மனது வெற்றி உறுதி என நம்பியது
என் மனது தோல்வியை நினைத்து அசைபோட்டது
உனக்குள் உள்ள உயர்வு மனப்பான்மை உன்னை உயர்த்தியது
எனக்குள் உள்ள தாவு மனப்பான்மை என்னை தாழ்த்தியது
உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமானது
உள்ளதை உயர்வுள்ளல் உயர்வானது
என்னிக்குதான் இந்த சாதி பிரச்சனை ஒழியுமோ!?
ReplyDeleteசாதி இரண்டென்றான் பாரதி
ReplyDeleteஆண், பெண் என்றறி
யாரெவன்
மேல்சாதி, கீழ்சாதி என்பான்
பாரதி பேச்சுக்கு
எதிர்ப் பேச்சு இங்கில்லைப் பாரும்!
மனிதரில் சாதி காண்போரை கீழ்சாதி எனலாம் !
ReplyDeleteத/ம 6
என்று ஒழியும் இந்த சாதீய சிந்தனை....
ReplyDeleteமனவலியை அழகாகக் கவிதையில் சொன்னீர்கள்!..
சொல்வது முற்றிலும் உண்மை
ReplyDelete//மெத்தப் படித்தவனும் பெருமையாய்
ReplyDeleteமேல்சாதி நானென்று சொல்கிறான்// படித்தவன் இப்படிச் சொன்னால் படிப்பின் பயன் என்ன? வருத்தமாக இருக்கிறது...
என்று ஒழியுமோ இந்தப் பாகுபாடு!
த.ம.9
எனது கல்லூரிப் பருவத்தில் அரிச்சந்திரன் கதை பற்றிய ஒரு கதைநூல் படித்தேன். அதில் மயானத்தில் அரிச்சந்திரன் வெட்டியானாக வேலை செய்யும்போது
ReplyDeleteநான் ஆதியிலும் பறையன் இல்லை,
சாதியிலும் பறையன் இல்லை,
பாதியிலே பறையன் ஆனேன் ”
என்று சொல்லுவதாக ஒரு வசனம் வரும். ( நூலின் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லவும் ).எனவே சாதி என்பது பாதியில் வந்தது. சில அரசியல் சுயநலவாதிகள் அதனை இன்னும் பிடித்துக் கொண்டு அலைகின்றனர். சாதியைப் பற்றி தைரியமான ஒரு பதிவு. வாழ்த்துக்கள்!
நமது
ReplyDeleteஉள்ளக்கனலில்
உருவான
இந்த உணர்ச்சித்தீ
பொசுக்கிவிடட்டும்
சாதீய கொடுமையை...
//இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில்
ReplyDeleteஇழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான்
இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான்
இவனெல்லாம் இன்ன சாதியென்று//
கலக்கல் வரிகள் சார்
இக் கவிதை மருத்துவர் ராமதாஸுக்கு நல்லாவே பொருந்துகிறது!.
ReplyDelete('சமூக வளைத் தளங்ளிலுமா சாதி....?" தினமணியில் வந்த எனது கட்டுரை. நேரமிருக்கும் போது படியுங்கள்). Link:
http://dinamani.com/editorial_articles/2013/08/12/சமூக-வலைதளங்களிலுமா-சாதி
காடுவரை சாதி கடைசிவரை சாதி இதுதான் இந்நாட்டின் நீதி
ReplyDelete