மணிக்கூடும் மனிதக்கூடும்
எத்தனை மணித்துளிகள் இப்போது
என்று கேட்டாலும் தப்பேது
முப்போதும் ஓடினாலும் தப்பாது
முறையாக ஓடிடுவாய் எப்போதும்
ஒவ்வொரு மணித் துளியும்
ஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது
நொடியுமே தவறாக ஓடவில்லை
நிமிடமும் தனக்காக நின்றதில்லை
மணியுமே அவசரமாய் சென்றதில்லை
மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை
ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்
இருதயம்போல எப்போதும் ஓடிடும்
இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
இதையாரும் வெறுக்கிறவர் இல்லார்
இலவசமாய் தருகிறவர் உண்டா
--கவியாழி--
என்று கேட்டாலும் தப்பேது
முப்போதும் ஓடினாலும் தப்பாது
முறையாக ஓடிடுவாய் எப்போதும்
ஒவ்வொரு மணித் துளியும்
ஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது
நொடியுமே தவறாக ஓடவில்லை
நிமிடமும் தனக்காக நின்றதில்லை
மணியுமே அவசரமாய் சென்றதில்லை
மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை
ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்
இருதயம்போல எப்போதும் ஓடிடும்
இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
இதையாரும் வெறுக்கிறவர் இல்லார்
இலவசமாய் தருகிறவர் உண்டா
--கவியாழி--
/// மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை... //
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
இருதயம் நின்னுட்டா நேரம் பார்க்க வேண்டிய தேவை இல்லை. மணிக்கூடும், மனிதக்கூடும் அருமையான ஒப்பீடு
ReplyDeleteநன்றிங்க ராஜி
Deleteஇருதயம்போல எப்போதும் ஓடிடும்
ReplyDeleteஇன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
மணிக்கூடு -இனிமை..!
மணிக் கூடு சொல்லும் தத்துவத்தை உணர்ந்தால் எந்த மனிதக் கூடும் சாதிக்கக் கூடும் !
ReplyDeleteஉண்மைதான் பகவானே
Deleteஎல்லாம் நேரம் ....அப்படின்னு சொல்வாங்க தானே...
ReplyDeleteஅப்படியேத்தான் நண்பரே
Deleteகாலத்தின் அருமையை
ReplyDeleteஅருமையாய்ச் சொன்னவிதம்
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteஅடிக்கடி பார்க்கிற கடிகாரத்தை பற்றின அழகான கவிதை.
ReplyDeleteஆம்.உண்மைதான் அபயா அருணா
Delete”மணிக்கூடும் மனிதக்கூடும்” தலைப்பே கவிதை பேசுகிறது அய்யா. அருமையான வரிகள். ஆழமான கருத்துக்கள்,. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் நன்றிங்க பாண்டியன்
Deleteவணக்கம்
ReplyDeleteஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்
கவிதை அருமை வரிகளும் அருமை வாழ்த்துக்கள் ஐயா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலத்தின் முக்கியத்துவத்தை அருமையாக எடுத்துச் சொல்லும் கவிதை.
ReplyDeleteஆமாங்க மாதேவி.தொடர்ந்து வாங்க
Deleteஒவ்வொரு மணித் துளியும்
ReplyDeleteஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது
// அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!
சுரேஷ் தங்களின் அருகைக்கு நன்றிங்க
Deleteநல்லதொரு சிந்தனை சகோ!
ReplyDeleteஅருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ
Deleteமணிக்கூடு, மனிதக் கூடு - நல்லதொரு ஒப்பீடு!
ReplyDeleteஆஹா...நீங்களும் கவிதையாய் சொல்லிவிட்டீர்கள்
Deleteநன்றிங்க சார்
ReplyDelete