ஓய்வு கொடுக்க வேண்டுமா
ஆண்டுகள் பதினெட்டும் என்னோடு
ஆனந்த பயணம் செய்துவந்த
அடிக்கடி நிற்காதக் களைக்காத
ஆதவனின் நண்பன் கடிகாரம்
வேடிக்கை பலதும் பார்த்தவன்
வீறிட்டு அழத்தெரியாத பண்பன்
வேகமாய் செல்லாத துணைவன்
சாப்பிடும் நேரம் சொல்பவன்
சாதனைக் கண்டே ரசித்தவன்
சரிநிகர் சமமாய் இருந்தவன்
சங்கடம் பலதும் கண்டவன்
அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம்
ஆன்மா இல்லாத அவதாரம்
அனைவரும் விரும்பும் பலநேரம்
அதுவே எல்லோருக்கும் ஆதாரம்
உயிரின்றி என்றுமே நின்றதில்லை
உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை
உறவாக என்னையும் பிரிந்ததில்லை
ஓய்வு வேண்டியே விரும்பியே
ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
ஓய்வு கொடுக்க வேண்டுமா
------கவியாழி------
அப்படியே ஓடட்டும்... ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteதொடர்ந்து தங்கள் கைகளை அலங்கரிக்கட்டும்.....
ReplyDeleteத.ம. 3
மகிழ்ச்சி நண்பரே
Deleteஓய்வு வேண்டியே விரும்பியே
ReplyDeleteஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
ஓய்வு கொடுக்க வேண்டுமா
ஓடட்டும் காலமும் கடிகாரமும் ..!
வருகைக்கு நன்றிங்கம்மா
Deleteஉங்களுடன் உயிராய்க் கலந்தது தெரிகிறது கவியில்!
ReplyDeleteஓய்வு கொடுக்க வேண்டாம் ஐயா, உங்கள் கையிலேயே இருக்கட்டும்..
அருமையான கவிதை! ta.ம.4
நன்றிங்க கிரேஸ்
Deleteஓய்வு ஒழிச்சல் இன்றி நின்றவாரே ஓடும் கடிகாரத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டுமா ? காலச்சக்கரம் சுழலட்டும்.
ReplyDeleteவேண்டாம்.கையிலேயே கட்டிக் கொள்கிறேன்
Deleteபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteபதினெட்டு வருஷா நட்பா... ? நட்பிற்கு கொஞ்சம் மெருகு போட்டு விடுங்கள்... புதியதாய் தோன்றும்...
ReplyDeleteஅப்படியே செய்கிறேன் உஷா அவர்களே
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
உடலோடு உறவாட தவறவில்லை
உயிரின்றி என்றுமே நின்றதில்லை
உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை
உறவாக என்னையும் பிரிந்ததில்லை
பரியாமல் உங்களுடன் இருக்கட்டும் உங்கள் கடிகாரம்
கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
mmmm....
ReplyDeleteoodattum....
ஆம்.இன்னுமே ஓடட்டும்
Deleteகை அணியாக வந்த கடிகாரத்திற்கு அழகான கவிதை! தொடர்ந்து ஓடி அதுவே இளைப்பாறட்டும்! நன்றி!
ReplyDeleteவிட்டு விடுகிறேன் சுரேஷ்
Deleteஇன்னும் எவ்வளவு நாள் அதே ஓட்டைக் கடிகாரத்துடன் காலம் தள்ளுவீர் அய்யா! (த.ம.7)
ReplyDeleteமனைவியைப் போல உடலோடு இன்னும் ஒட்டிவருவதால் காத்து வருகிறேன்.
Deleteகடிகாரத்தால் தங்கள் கைகளும், தங்கள் கைகளால் கடிகாரமும் சிறப்பு பெறட்டும். கடிகாரத்திலுள்ள சின்ன முள், பெரிய முள்-ளுக்கு ஒரு கவிதையை எதிர்பார்க்கிறேன். நல்லதொரு பகிர்வு அய்யா. நன்றி.
ReplyDeleteஅப்படியா அடுத்தமுறை பார்க்கலாம்
Deletetha.ma 8
ReplyDeleteஎதையெல்லாம் எழுதலாம்
ReplyDeleteஎனத் தெரியாமல் தவிப்போருக்கு
உங்கள் வலைத்தளம்தான் வழிகாட்டி
வாழ்த்துக்களுடன்....
அடடா.. எது எப்படியானாலும் பழையதின் மவுசு குறையாது...
ReplyDeleteபுதுசு வந்தாலும் பழசும் இருக்கட்டும்.. ஞாபகத்துக்காகவேனும்..:)
ஆம்.மறக்காமல் வைத்துக் கொள்கிறேன்
Deleteரசிக்க வைத்த கவிதை....
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
Deleteதங்களின் கடிகாரம் யாருக்கும் ஒரு சடப்பொருளாகத் தோன்றவில்லை... ரத்தமும் சதையுமாக உயிருள்ள சீவனாகவே தோன்றுகிறது... தோன்ற வைத்ததில் தெரிகிறது உங்கள் வரிகளின் வெற்றி...!
ReplyDeleteமுடிவில்லா காலத்தைக் காட்டும் கடிகாரமும் முடிவில்லாமல் ஓடட்டும் ஐயா...
அப்படியே செய்கிறேன் நண்பரே
Deleteத.ம. 10
ReplyDeleteநன்றிங்க
Deleteஓய்வு வேண்டியே விரும்பியே
ReplyDeleteஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
ஓய்வு கொடுக்க வேண்டுமா
//
ஒய்வு இல்லாமல் அதுவே ஓடும் போது ஒய்வு ஏன் கொடுக்க வேண்டும்!
நல்ல யோசனை .நன்றி
ReplyDeleteநானும் இப்படி ஒன்றை வைத்திருந்தேன். நண்பர் பரிசளித்தது. இருபத்திரண்டு ஆண்டுகள் உழைத்தது. சமீபத்தில்தான் ஓய்வு கொடுக்கப்பட்டது - வேறு வழியில்லாமல்.
ReplyDeleteஅதுவும் நண்பனாய் கூடாவே இருந்ததோ?
Deleteஉடன் பிறவா உறவாய், உங்களுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடும் உறவிற்கு எதற்கு ஓய்வு.
ReplyDeleteஆம்.உண்மைதான் என்னிடமே ஓய்வாகவே இருக்கட்டும்
Deleteபழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் ஆயிற்றே !
ReplyDeleteஇது மனைவிக்குத் தெரியவில்லையே
Deleteவேண்டாம் !என்னிடம் தரலாம்!
ReplyDeleteநீங்கள் ஐரோப்பா சென்றபோது சுவிஸ்ல் எனக்கு வாங்கி வந்திருந்தால் கொடுத்திருப்பேன்
Delete