தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுள் போலச் சொல்வார்கள்

உதவி செய்ய வருவோர்கள்
உரிமையோடு  செய்வார்கள்
உணரும் துன்பம் யாவையுமே
உடனே தீர்க்கத்  துணிவார்கள்

எண்ணம் முழுதும் உண்மையாய்
என்றும் துணையாய் இருப்பார்கள்
எதிலும் உரிமை சொல்லியே
எளிதில் அன்பைப் பொழிவார்கள்

ஊரும் பேரும் தெரியாமல்
உற்ற நட்பு என்பார்கள்
உள்ளம் முழுதும் தெய்வமாய்
உணர்ந்துப் பழகி வருவார்கள்

இன்றும் நட்பாய் ஒருசிலரே
இப்படி மகிழ்ச்சி கொள்வார்கள்
இதயம் நிறைந்து எப்போதும்
இன்முகத்தோடு வாழ்வார்கள் 

கடமை என்றே எண்ணியே
கருத்தாய் செய்து முடிப்பார்கள்
கடந்து வந்து வெற்றியக்
கடவுள் போலச் சொல்வார்கள்


(கவியாழி)

Comments

  1. // இன்றும் நட்பாய் ஒருசிலரே //

    அரிது அரிது இன்று நட்பாய் ஒருசிலரே அமைவதும் அரிது...

    அருமையான வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    ஊரும் பேரும் தெரியாமல்
    உற்ற நட்பு என்பார்கள்
    உள்ளம் முழுதும் தெய்வமாய்
    உணர்ந்துப் பழகி வருவார்கள்

    உண்மையான வரிகள்.. மிக அற்புதமாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமை அருமை உண்மை ஆனால் மிகவும் அரிது காண்பது.
    அப்படியும் கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

    நன்றி தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
  4. அரிது அரிது உண்மை நண்பர்கள் கிடைத்தல் அரிது !
    t.m 3 To 4

    ReplyDelete
  5. // எண்ணம் முழுதும் உண்மையாய்
    என்றும் துணையாய் இருப்பார்கள்// இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பது அரிது..கிடைத்தால் வேறு என்ன வேண்டும்?
    அருமைக் கவிதை ஐயா..
    த,ம.5

    ReplyDelete
  6. அப்படிப்பட்ட நண்பர்கள் வாய்ப்பது அதிர்ஷ்டமே
    கவிதை நன்று

    ReplyDelete
  7. இன்றும் இதுபோன்ற நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
    நன்றி ஐயா
    த.ம.7

    ReplyDelete
  8. நட்பின் சிறப்பை சிறப்பாய் சொன்ன வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சுயநலத்தைக் கடந்த நட்புகள்.

    ReplyDelete
  10. அருமையான நட்பு இது போல் அமைந்துவிட்டால்....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more