தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதநேயம் உள்ளவராய் வாழ்ந்திடுங்கள்



அடுத்தவரின் குறையை எண்ணி
அனுதினமும் ரசிக்கதோன்றும்
படித்தறிந்த மானிடனே நீ
பண்ணுவது நல்லதில்லை

எடுத்தெறிந்து செய்வதனால்
ஏழுபிறப்பும் பாதித்ததாய்
படித்தறியா முன்னோர்கள்
பழமொழிகள் சொன்னார்கள்

பணம்காசு கொடுக்காமல்
பண்புகளை சொன்னாலே
குணம்மாறி வாழ்ந்திடுவான்
கும்பிடுவான் தெய்வமென

வழியின்றித் தவிப்போருக்கு
வயிற்றுப்பசி போக்கிடுங்கள்
வாழ்வதற்கு நல்லவழி
வணங்கும்படிச் செய்திடுங்கள்

நாளிதுவே வாழ்வதற்கு
நாளைக்குத் தெரியாது
நாளைவரை உடன்வருவார்
யாரேனவேத் தெரியாது

வேலைக்கு மாத்திரையும்
வேதனைகள் மறைவதற்கு
இருக்கும்வரை  மனிதநேயம்
இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்


Comments

  1. வணக்கம்
    ஐயா

    நாளிதுவே வாழ்வதற்கு
    நாளைக்குத் தெரியாது
    நாளைவரை உடன்வருவார்
    யாரேனவேத் தெரியாது

    நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஒவ்வொரு மானிடனும் மனித நேயம் உள்ளவராக இருக்க ஒவ்வொருவரும் செயற்பட்டால் நல்லது.வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மனித நேயம் பற்றி அருமையான கவிதை...!

    ReplyDelete
  3. நல்ல கருத்துக்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சிறப்பான கருத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  5. நல்ல கவிதை. நல்ல கருத்து. வாழ்த்துக்கள். த.ம. 4

    ReplyDelete
  6. #மனிதேநயம்#
    மனித நேயத்துடன் சொல்கிறேன் ,தலைப்பைச் சரி பண்ணுங்க !
    +1

    ReplyDelete
  7. இருக்கும்வரை மனிதநேயம்
    இருப்பவராய் வாழ்ந்திடுங்கள்//
    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. வாழ்க மனித நேயம்!

    ReplyDelete
  12. இருக்கும்வரை மனிதநேயம்
    இருப்பவராய் வாழ்ந்திடுவோம்
    த.ம,9

    ReplyDelete
  13. கவிதை அருமை...
    வாழ்க மனித நேயம்...

    ReplyDelete
  14. சமூகத்தை நேசிப்பவரின் வரிகள் அருமை

    ReplyDelete
  15. மனித நேயம் வறண்டு வரும் சமயம் நல்ல கருத்துள்ள வரிகள அமைந்த கவிதை! தொடர்வதற்கு வாழ்த்துழ்க்கள்!!!

    ReplyDelete
  16. "வழியின்றித் தவிப்போருக்கு
    வயிற்றுப்பசி போக்கிடுங்கள்" என்பது
    நல்லதொரு வழிகாட்டல்

    ReplyDelete
  17. நல்ல கவிதை...பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more